வந்தேன் வந்தேன்... மீண்டும் நானே வந்தேன்...

வந்துட்டன்ய்யா(ம்மா)... வந்துட்டேன்னு சொல்லி எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்ல வந்தேன்.

அனைவரும் எப்படியிருக்கீங்கன்னு எனக்கும் பதில் சொல்லிபோட்டு போங்க!!!

ஹாய் தோழிகளே அனைவரும் நலமா? நான் மற்றும் இங்கேயும் ஊரிலும் அனைவரும் நலம். விசாரித்த
அனைவருக்கும் எனது நன்றிகள்.

நான் ஊரிலிருந்து வந்தவுடன் பார்த்தேன் நிறைய பதிவுகள், ரொம்ப ,பயனுள்ள குறிப்புகள் மற்றும் பட்டிமன்றம் அனைத்தையும் படிக்க ரொம்ப நாள் வேணும் அதனால அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விசாரிப்பு போட வந்தேன்.

* தங்கச்சி சந்தனா எப்படிம்மா இருக்கீங்க? பட்டிமன்ற நடுவராகி ஒரு கலக்கு கலக்கிடீங்க போலிருக்கு வாழ்த்துக்கள்.

*தனிஷா எப்படியிருக்கம்மா? வீட்டில் அனைவரும் நலமா? ஊருக்கு செல்ல தயாராகரீங்களா?

*வாணி,லக்ஷ்மி ஷங்கர் எப்படியிருக்கீங்க? என் பதிவுகளில் நான் ஊருக்கு போயிருக்கிறேன் என்று கேள்விகள் கேட்டோருக்கு தெரியப்படித்தியதற்கு மிகவும் நன்றி.

*விஜி எப்படியிருக்கீங்க? குட்டீஸ் நலமா? நீங்க ஊரில் என்னை தொடர்பு கொண்டு பேசியதில் மிக்க மகிழ்ச்சி, குழைந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் சென்னைக்கு வர முடியவில்லை.சாரி.

*தாமரையும், சந்தோஷும் நலமா? என்ன! குறும்பு எப்படியிருக்கிறது?

* பிரபாக்கா என்னை பற்றி விசாரித்த மாதிரி இருந்தது, எப்படியிருக்கீங்க?

*இமாம்மா எப்படியிருகீங்க? உங்க கிராஃட் குறிப்புகள் என்னை கவர்ந்தவை நிறைய கொடுங்க...

*மனோகரியம்மா நலமா? ஒரு வாசகியாய் உங்க பயனுள்ள பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்.

*தேவா மேடம் நலமா? உடல் நிலை சரியில்லை என்றறிந்தேன்? தற்போது எப்படியுள்ளது? அடிக்கடி வந்து பதிவுகள் கொடுங்க, உங்க பதிவுகளும் நான் தவறாமல் விரும்பி படிப்பவை. கண்டிப்பாக அடிக்கடி வாங்க.

*சுஸ்ரீ,வானதி,சுவர்ணா, ஜெயா ராஜி என்கிற சுபா,வனிதா, மகேஸ்வரி, அதிரா, ரேணுகா, சுரேஜினி,ஹுசெனம்மா, ஆசியா மேடம்,கதீஜா,ஜலிலா மேடம் அனைவரும் நலமா?

*தளிகா,ரீமா அக்காவிற்கு ஒரு குட்டி தம்பி கிடைத்திருப்பதாக அறிந்தேன், எனது வாழ்த்துக்கள்.

*Girl from Oz உமா,உமாராஜ் எப்படியிருக்கீங்க? அர்ஜுன் என்ன செய்யறார்?

* ஹைஷ் அண்ணா, லதா அண்ணி மற்றும் குழைந்தைகள் அனைவரும் நலமா?

மேலும் எனக்கு தெரிந்த தோழிகளின் பெயர் விட்டு போயிருந்தால் கோவிச்சுகாதீங்க, தெரியாத மற்றும் புதிதாய் இணைந்து
உள்ள அனைவருக்கும் எனது ஹாய்!!!

பி.கு: யாரும் தலைப்பை பார்த்து கோவிச்சுக்காதீங்க????? சும்மா தமாசுக்கு தான் ஒரு சினிமா ஸ்டைலில் அனைவரையும் அழைத்தேன்

உமா நலமா? ரோஹித் குட்டி எப்படி இருக்கார்? ஊரில எல்லாரும் சுகமா?? நானும் என் பேரை தேடினேன் பரவாயில்லை... உங்ககிட்ட அதிகம் பேசியதில்லை அல்லவா... மெதுவா தனியா ஒரு பதிவு போடுங்க... ஜெட்லாக் எல்லாம் போயிடுச்சா.. உங்க அழகு/உடல்பயிற்சி த்ரெட் மறுபடியும் எடுங்க... எனக்கு ரொம்ப டவுட் இருக்கு.. வந்ததும் கேக்கனும்ன்னு இருந்தேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சந்தனாத்தா வந்திருக்கேன்.. ஏன் என் பேரை தலைப்புல போடலை?? :))

வந்துட்டீங்களா உமா.. எங்க ஊருக்கு போன சந்தோஷத்துல எங்க எல்லாரையும் மறந்துடுவீங்களோன்னு நினைச்சேன்.. ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்களுக்கு.. ஊர் அனுபவம் எப்படி? எழுதுங்க சீக்கிரம்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

உமா, நலமா? ஊர் போய் வந்த அனுபவத்தை பிறகு ஆறுதலாக சொல்லுங்கோ.

உங்கள் அழகு குறிப்பில் ஒருவர் குண்டாக வேண்டும் என்று ஆலோசனை கேட்டிருந்தார். ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன்(நல்லா சாப்பிடுங்கோ என்று தான்). இப்போது அவர் என்னை தேடிக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்( வேறு எதற்கு நாலு சாத்து சாத்த தான்)
வாணி

ஹாய் உமா நலமா? ஊர்லாம் எப்படி இருக்கு.... நான் உங்கலுக்கு அக்காவா... இது கொஞ்சம் ஓவரா இல்லை....

அது சரி இவங்கலாம் யாரு /////ராக்காயி, மூக்காயி, காத்தாயி... பொன்னாத்தா, மங்காத்தா, சின்னாத்தா... //// நான் இது வரை இவங்க கிட்ட பேசினது இல்லையே?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

உமா, வாங்க. ஊர் போய் நலமா வந்து சேந்துட்டீங்களா? மகன் நலமா? நீங்கள் செய்துகொண்டு போன முன்னேற்பாடுகள் உதவியாக இருந்தனவா?

பி.கு: தலைப்பு சும்மா, உங்க பாட்டுக்கு எசப்பாட்டா இருக்கட்டுமேன்னு...

உமா.... நலமா இருக்கீங்கலா??? நாங்க நலம். விசாரித்தமைக்கு மிக்க நன்றி. ஊர் பயணம் எல்லாம் எப்படி இருந்தது?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் உமா அக்கா,

நலமா? ரோஹித் நலமா? ஊர் பயணம் எப்படி இருந்தது? ரோஹித் உடல் நலம் குறித்து கவலைப்பட்டீர்களே!! குழந்தை அனைவரிடமும் நன்றாக பழகினாரா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

பாருங்க இலா!!! சுத்தமா மறந்துவிட்டேன்.தெரிந்தே இப்படி செய்வேனா சொல்லுங்க சாரி. இலா மாதிரியே பெயர் விட்டுப்போனவங்க வந்து சொன்னால் கண்டிப்பாக ஸ்பெஷல் பதிவு உண்டு.
அப்புறம் இலா எனது இழைகளை பார்வையிடவும் இன்னும் ஓரிரு நாள் ஆகலாம். வரும் பொழுது கண்டிப்பாக ஒரு பெரிய ஆர்டிக்கில் உடன் வருவேன்.

சந்தனாத்தா, கடவுள்களுக்கு ஒன்றுக்கும் அதிக பெயர்கள் இருப்பது போல் தலைப்பில் இருக்கும் அத்தனை பெயரும் உன்னை சேருமாத்தா!!! (யாரு வந்து என் பெயரைக்கானும்ன்னு கேட்டாலும் இதையே காப்பி பேஸ்ட்
பண்ணிதுவோம்ல்ல!!! ............

வாணி, கண்டிப்பாக பிறகு வந்து பொறுமையா எல்லாத்தையும் எழுதறேன்.

பிரபா, உங்களுக்கு இப்போ என்ன தெரியணும் என் வயசு தானே? நீங்க 80 ல்
தானே பிறந்தீங்க அதற்கு பிறகு சில வருடம் கழித்து தான் நான் பிறந்தேன்...
இதனால நான் சொல்லவர்றது என்னன்னா?????
(கொஞ்சம் ரஜினி ஸ்டைலில் படிங்க)
இதப்பாரும்மா பிரபா," நாம பொறக்கறதுக்கு ஒரு நொடி முன்னாடி பிறந்தவங்களோ இல்லை நம்ம டுவின்சோ அவங்களை நாம அக்கான்னோ/ அண்ணன்னோ கூப்பிடலாமில்லையா????? " .
நான் ஒரு மரியாதை நிமித்தமா அப்படி கூப்பிட்டேன்,சரி பிடிக்கலைன்னா விட்டுடலாம் சரியோ!!!

ஹுசெனம்மா, வனிதாவிற்கு,சுபாவிற்கு நன்றி,
வந்ததும் வராததுமா ஏகப்பட்ட வேலை அதனால பிறகு வந்து எல்லாத்தையும் எழுதறேன்.

பிறகு சந்திப்போம்..

யாருங்க அது! பாரதிராஜாவோட ஈரோயினெல்லாம் கூப்பிட்டுகிட்டு:) உமா வெல்கம் பேக். கடலூர் எப்படி இருக்கு. ஊரில் அனைவரும் நலமா? ரோஹித்துக்கு இந்தியா ட்ரிப் எப்படி இருந்தது? நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நிதானமா வந்து சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்