புதினா துவையல்

வழங்கியவர் : sumathi_thiru

தேதி : வியாழன், 17/09/2009 - 16:03

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

4
8 votes
Your rating: None
 

 

  • புதினா - ஒரு கட்டு
  • தேங்காய் - அரை மூடி
  • மிளகாய் வற்றல் - 12
  • புளி - சிறு நெல்லிக்காய் அளவு
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி

 

 

புதினா இலைகளை ஆய்ந்து கொண்டு தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு 30 நொடி சிவக்க வறுக்கவும்.

பருப்பு சிவந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து அலசி வைத்திருக்கும் புதினாவை போட்டு 2 நிமிடம் வதக்கவும். புதினா இலை லேசாக நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும்.

வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். அதன் பின்னர் அரைத்த துவையலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தாளித்த பொருட்களை கொட்டி கலந்துக் கொள்ளவும்.

இந்த துவையலை சாதத்துடன் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு கூட சேர்த்து சாப்பிடலாம்.

அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு . சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.

 







thanks

இன்று உங்க புதினா துவையல் செய்தேன்.எனக்கு ரொம்ப பிடித்த டிஷ்.அருமையாக இருந்தது.குறிப்புக்கு நன்றி.

சுமதி உங்க புதினா துவையல் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது
சாம்பாருடன் உங்க புதினா துவையல் மற்றும் லாவண்யா வின் காரட் குடைமிளகாய் பொரியல் நல்ல combinationனாக இருந்தது
வாழ்த்துக்கள்
பொன்னி

ரொம்ப நன்றி சுமதி அக்கா எனக்கு ரொம்ப புடிச்ச துவையல் இட்லி கூட சாப்பிட நல்ல இருக்கும் தெளிவான விளக்க படங்களுக்கு நன்றி