ஆவாரம் பூ கூட்டு

image

வழங்கியவர் : LathaHaish126

தேதி : வெள்ளி, 18/09/2009 - 00:02

ஆயத்த நேரம் : 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 4

0
No votes yet
Your rating: None
 

 

  • 1. ஆவாரம்பூ - இரண்டு கூறு (சுமார் 200 கிராம்)
  • 2. துவரம் பருப்பு - 1/4 கப்
  • 3. கடலை பருப்பு - 1/4 கப்
  • 4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 5. சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
  • 6. காய்ந்த மிளகாய் -2
  • 7. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  • 8. தேங்காய் துருவியது - 2 மேசை கரண்டி
  • 9. வெங்காயம் -1 பெரியது
  • 10. தக்காளி - 1
  • 11. கருவேப்பிலை - 1 இணுக்கு
  • 12. கொத்தமல்லி இலை- சிறிதளவு
  • 13. கடுகு - 1/4 தேக்கரண்டி
  • 14. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  • 15. பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
  • 16. எண்ணை - 1 மேசை கரண்டி
  • 17. உப்பு - தேவையான அளவு

 

  • ஆவாரம்பூவை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • குக்கரில் துவரம் பருப்பு, கடலை பருப்பு அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, தேவையான அளவுக்கு உப்பும் சேர்த்து 200 மி.லி. தண்ணீர் சேர்த்து வெயிட் போட்டு மூடி 4 விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
  • தேங்காய் துருவலையும், சீரகத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • விசில் அடங்கியதும் குக்கரை திறந்து அதில் சுத்தம் செய்த ஆவாரம் பூவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • நன்றாக கொதித்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து இன்னும் 5 நிமிடம் கொத்திக்கவிடவும்.
  • எண்ணையை காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயதூள் இவைகளை போட்டு தாளித்து குக்கரில் சேர்க்கவும்.
  • கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சிறியதாக நறுக்கி கூட்டில் சேர்த்து இறக்கவும்.

Note:

குக்கரை திறந்த பின் குறைவான தீயில் கொதிக்க விடவும். இதை சப்பாத்தியுடனும், எண்ணை கத்தரிக்காய் குழம்பு சாதத்துடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.







ஹாய் லாதா அண்ணி முதல் குறிப்பா ( அப்ப்டின்னு நினைக்கிரேன்...) வாழ்த்துக்கள்...

ஆவாரம் பூ எப்படி இருக்கும்? பாபு அண்ணா படம் தரமுடியுமா? பிலீஸ்....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபா இந்த லின்கில் பாருங்க ஆவாரம் பூ படங்கள் இருக்கும்.

http://tharunbalaji.blogspot.com/2009/07/blog-post_20.html
http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.html

//"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

இது இப்படி இருக்கும்னு நினைக்கிறேன். "முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!