ராஜ்மா

வழங்கியவர் : LathaHaish126
தேதி : வெள்ளி, 18/09/2009 - 00:29
ஆயத்த நேரம் : 8 மணிநேரம் ஊறவைக்க
சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபருக்கு
- 1. ராஜ்மா 200 கிராம்
- 2. வெங்காயம் 2 (பெரியது)
- 3. பூண்டு 4 (பல்)
- 4. இஞ்சி 2 அங்குலம்
- 5. ஜாம் தக்காளி 3 (பெரியது)
- 6. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
- 7. தனியா தூள் 1 தேக்கரண்டி
- 8. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
- 9. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
- 10. சீரக தூள் 1/2 தேக்கரண்டி
- 11. சர்கரை 1/4 தேக்கரண்டி
- 12. தேங்காய் துருவியது 2 மேசைக்கரண்டி
- 13. முந்திரி பருப்பு 6
- 14. எண்ணை 1 1/2 மேசை கரண்டி
- 15. வெண்னை 1/2 மேசை கரண்டி
- 16. தேவையான அளவு உப்பு
- 17. கொத்தமல்லி இலை சிறிதளவு
- ராஜ்மாவை 6-8 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். (சுடுநீரில் ஊறவைத்தால் அதில் பாதியளவு நேரம் போதும் ஆனால் சுவை சரியாக வராது)
- குக்கரில் ஊறவைத்த ராஜ்மாவை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணிர் ஊற்றி சிறிதளவு உப்பு போட்டு, அதனுடன் ஒரு அங்குலம் இஞ்சியை தட்டி போட்டு மூடி 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- வெங்காயம், பூண்டு, மீதியுள்ள இஞ்சியை நன்கு துருவிக்க் கொள்ளவும்.
- தக்காளியை சுடுநீரில் போட்டு தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- பிரஷ்ர் பேனை எண்ணையை+வெண்ணையை போட்டு உடனே துருவி வைத்த வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்கவும்.
- நன்கு வதங்கியவுடன் வரிசை எண் 6 - 11 வரை உள்ள மசாலாவை போட்டு நன்கு வதக்கவும்.
- உப்பு, தக்காளி விழுதை போட்டு எண்ணை பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
- முந்திரி, தேங்காய் துருவல் இரண்டையும் கெட்டியாக பேஸ்ட் பதத்தில் அறைத்து போட்டு வதக்கவும்.
- மீண்டும் எண்ணை பிரிந்து வரும் போது வேகவைத்த ராஜ்மாவை போட்டு குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும்.
- விசில் அடங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.
Note:
<br /> <img src="files/pictures/aa326.jpg" alt="picture" />
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஹாய் லதா,எப்படி இருக்கின்றீர்கள்?
இன்றுதான் தங்களின் இந்த குறிப்பை பார்த்தேன்.அதுவும் புகைப்படத்துடன் அழகாக அனுப்பியுள்ளீர்கள்.மிக்க நன்று.
ராஜ்மா சேர்த்துக் கொள்வது நன்று என சொல்வார்கள்.ஒரு முறைதான் இதுவரை நான் செய்திருக்கிறேன்.(அதுவும் வெறும் வெங்காயம்,தக்காளிக் கொண்டு மசாலாவுடன்.)
இந்த செய்முறை நன்றாக இருப்பதுப் போல் தெரிகின்றது. சப்பாத்திக்கு செய்து பார்த்து விட வேண்டியதுதான்.அப்போது உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
ஹாய் லதா..தங்களின் ராஜ்மா குறிப்பினை இன்று சப்பாத்திக்கு ஷைட் டிஷ்ஷாக செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.என் கணவர் உடனே எதையும் நன்று என சொல்லமாட்டார்.இன்று நான் கேட்காமலே நன்றாக இருக்கு என்று சொன்னார்.உங்களுக்கு என் நன்றிகள் பல...
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
லதாவிடம் போன் பேசும் போது தங்களின் பதிவை படித்து காட்டினேன். மிகவும் சந்தோஷப்பட்டார். நன்றி தெரிவிக்க சொன்னார். மிகவும் நன்றி.
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
லதாஅண்ணி எப்படீருக்கிங்க. என் ஹஸ்க்கு ராஜ்மா என்றால் ரொம்பபுடிக்கும் இவ்வள்வு நாள் வெங்காயம்,தக்காளிமட்டும் போட்டு செய்வேன் இன்று உங்களின் ராஜ்மா சப்பாத்திக்குசெய்தென் நன்ராக் இருந்தது
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
லதாஅண்ணி எப்படீருக்கிங்க. என் ஹஸ்க்கு ராஜ்மா என்றால் ரொம்பபுடிக்கும் இவ்வள்வு நாள் வெங்காயம்,தக்காளிமட்டும் போட்டு செய்வேன் இன்று உங்களின் ராஜ்மா சப்பாத்திக்குசெய்தென் நன்ராக் இருந்தது
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்