சல்மன் மீன் கறி

தேதி: September 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

சல்மன் மீன் - 500 கிராம்
வெங்காயம் - 30 கிராம்
கறி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
கறித்தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேசிக்காய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

மீனை சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன் தேசிக்காய், இஞ்சி பூண்டு விழுது, 1 1/2 தேக்கரண்டி கறித்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை போட்டு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய மீன் துண்டுகளை அவண் ட்ரேயில் க்ரில் கம்பியில் அடுக்கி மீடியம் ஹீட்டில் க்ரில் செய்யவும். இம்மீன் எளிதில் வெந்துவிடும், மெதுவாக கலர் மாறியதும் எடுத்துக் கொள்ளவும். வெள்ளைப் பால் போல, ட்ரேயில் வடிந்திருப்பதைக் காணலாம், நன்கு முறுகவிட்டும் எடுக்கலாம், நன்கு முறுகவிட்டால், நேரடியாக பொரியல் போல சாப்பிடலாம்.
க்ரில் வசதி இல்லாதவர்கள் அடுப்பில் தோசை கல்லை போட்டு சிறிது எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் 1 1/2 தேக்கரண்டி கறித்தூள், 2 மேசைக்கரண்டி கறிபேஸ்ட் சேர்த்து பிரட்டவும்.
அதில் 250 மி.லி தண்ணீரும் ஒரு தேக்கரண்டி உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும், மீன் துண்டுகளைப் போடவும். மீன் துண்டுகளைப் பிரட்டிப் பிரட்டி விட்டு, கறி பிரட்டலானதும் இறக்கவும்.
சுவையான சல்மன் மீன் கறி ரெடி. இதில் சத்தும் அதிகம். இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

இதில் பயன்படுத்தி இருப்பது பழப்புளி மற்றும் மிளகாய் விழுது. கறி பேஸ்ட் வாங்கும் போது புளி இருப்பதையே வாங்கிக் கொள்ளவும். அதில்தான் சுவை அதிகம், மீன்கறி, கிழங்குக்கறிகளுக்கு பயன்படுத்தலாம். புளி இல்லாத பேஸ்ட்டாக இருப்பின், கறியை இறக்கியதும் 2 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட்மின் சிறு திருத்தம்....
குறிப்பு அழகாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

நான் குறிப்பிட்ட கறிபேஸ்ட் மஞ்சள் அல்ல. பழப்புளியும் மிளகாயும் சேர்ந்த பேஸ்ட். (tamarind & chillie paste). தயவு செய்து மாற்றிவிடவும். மிக்க நன்றி.

(இதுக்குத்தான் சொல்றது... இரவில் நித்திரை முழித்து வேலைசெய்யப்படாதென்று:) கடவுளே அதிராவை இம்முறையும் காப்பாற்று..).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா.. ஒரே குறிப்பா அனுப்பி தள்ளுறீங்க...வாழ்த்துக்கள்... நல்லா இருக்கு.. எனக்கு ஒரு சந்தேகம்.. இது( சால்மன்) இந்த முறையில் செய்தால் ஸ்மெல் குறைவாக இருக்குமா

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா... நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆரம்பித்திருக்கிறேன். அதிலும் படங்கள் இணப்பதில் கொஞ்சம் பிரச்சனையாக இருக்கு. அதனால் குறிப்புக்கள் செய்தாலும் படங்கள் இணைக்க கஸ்டமாக இருக்கு.

நானும் முன்னர் இச் சல்மன் மீன் செய்வதில்லை. மணம் என. பின்னர் இங்கு கொலீஜ்ஜிலே ஒரு ரீச்சரோடு கதைக்கும்போது, அவ சொன்னா எலுமிச்சை சேர்த்து அவணிலே வையுங்கோ என. அது இவர்களின் முறை.

அதை பேஷாக வைத்து, ஏனைய பொருட்களைச் சேர்த்து நான் இம்முறையைக் கண்டறிந்தேன். இப்படி கிறில் பண்ணும்போது, ஒருவித பால் நிறமாக கீழே வடிந்திருக்கும். அதோடு பின்னர் எந்த ஸ்மெலும் இருக்காது. சாதாரண மீன் கறியை விட இதுதான் எங்கள் வீட்டில் முதலிடம் பிடிக்கும். முள் பிரச்சனையுமில்லையெல்லோ.

நான் பெரிய மீனாக வாங்கி, கிறில் பண்ணி, பிரீஸ் பண்ணிவிடுவேன். பின்பு தேவைக்கு உடனுக்குடன் கறியாக்குவேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா! உங்க முறையில் அடுத்தவாரம் செய்துவிட்டு சொல்கிறேன். இவருக்கு சால்மன் என்றால் நல்ல விருப்பம்.. செய்தால் ரொம்ப பிடிக்கும்..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நிட்சயம் செய்து பாருங்கள்.... இதே முறையில் நன்கு மீனைப் பிரட்டி விட்டு கொஞ்சம் முறுகலாக எடுத்தால் அப்படியே பொரியலாக சாப்பிடலாம். 15 நிமிடத்திலேயே கிறில் பண்ணப்பட்டுவிடும்... கவலையீனமாக நின்றிட வேண்டாம், கருகிப்போகும். இது டக்கென்று அவியக்கூடியது. இதை பச்சையாக தானே உண்கிறார்கள்... பிரேக்பெஸ்ட்டுக்கு....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா சூப்பரா குறிப்பு குடுக்குரிங்க வாழ்த்த்துக்கள்.... சால்மன் படம் இருந்தால் காட்டுங்கப்பா......

மீன், கீரை இவையேல்லாம் அவை வேட்டும் முன் கான்பித்தால் நல்லா இருக்கும்... வெட்டினதும் சரியா தெரியலை.....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

தேசிக்காய் என்றால் என்ன? pls tell me

என் கணவர் முன்பு ஒரு japanese company -யில் வேலை செய்தபொழுது அடிக்கடி பார்ட்டியில் இந்த salmon fish இல்லாமல் இருக்காது,பச்சையாகத்தான்,அதுவும் சுஷியுடன்.நான் அதையே ரசித்து சாப்பிட்டு இருக்கிறேன்,இப்ப இந்த முறையில் என்றால் விட்டு விட முடியுமா,அந்த ஆரஞ்ச் கலர் அசத்தல்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா ரொம்ப சூப்பரா பார்க்கவே அசத்தலா இருக்கு.

அது என்ன்ன கறி பேஸ்ட் வித் புளி.இங்கு மேகி கியுப் இப்ப புளி கியுபும் வந்துள்ளது. அதிரா ஓப்பன் செய்து மெசேஜ் டைப் பண்ணியாச்சு , ஆனா போச்சா இல்லையான்னுதெரியல..

Jaleelakamal

ஹாய் அதிரா! சல்மான் மீன் கறி, நானும் உங்கள் முறைப்படி தான் சமைப்பேன்.
ஆனால் படத்துடன் உங்கள் சமையலை பார்க்கும் போது, சூப்பராய் இருக்கு.
மீன் துண்டுகளை கிறில் பண்ணி சமைத்தால் மணமிருக்காது உண்மைதான்.

றம்மியா!
தேசிக்காய் என்றால் எலுமிச்சம் பழம், (லெமன்)lemon நன்றி
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பிரபாதாமு
நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால் இது பெரிய மீன், ஒவ்வொரு மீனும் 2 கிலோவிற்கு குறையவராது.. அதுவும் இங்கு சுப்பர்மார்கட்டில்தான் கிடைக்கும். துப்பரவு செய்து துண்டுகளாக்கி தோல்நீக்கித்தான் கிடைக்கும் அல்லது துண்டுகளாக தோலோடும் கிடைக்கும். ஆனால் இது இதே ஒரேஞ் கலரில்தான் இருக்கும் அதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். இதுக்கு வேறு பெயர்கள் இருக்கோ தெரியாது சல்மன் மீன் என்றால் பொதுவாக எல்லோருக்கும் தெரியும். இந்த லிங் பாருங்கள்... இதில் முதலாவது லிங்கை கிளிக் பண்ணுங்கள்.

http://www.fotosearch.com/photos-images/salmon-fish.html

ரம்யா.... ராணி பதில் தந்துவிட்டார்.. நன்றி ராணி.

ஆசியா உண்மைதான். சைனீஷ், ஜப்பானீஷுக்கு இது மிகவும் பிடிக்கும். அவர்கள் இதன் தலையைத்தான் அதிகமாக வாங்குவதைக் கண்டிருக்கிறேன். நான் முழுமீனாக வாங்கினால் தலையை அப்படியே எறிந்துவிடுவேன். வழுக்கு வழுக்கென்றிருக்கும். சுஷியை நானும் ஒரு தடவைதான் ருஷி பார்த்தேன்... எனக்குப் பிடிக்கவில்லை.. கறி செய்துவிட்டுச் சொல்லுங்கோ நன்றி.

ஜலீலாக்கா... வெல்கம். முன்பு ஒருகாலத்தில் யார் இல்லாவிட்டாலும் ஜலீலாக்கா இருப்பா என நம்பி அறுசுவைக்குள் வரலாம். இப்போ கண் பட்டுப்போச்சா. எல்லோருக்கும் உடனுக்குடன் சந்தேகம் தீர்த்துவைப்பது நீங்கள்தானே. இன்னுமா அறுசுவை எரராக இருக்கு.

இதில் நான் குறிப்பிட்டிருப்பது.. போத்தலில் மட்டுமே வரும் கறிபேஷ்ட். பல வகைகளில் கிடைக்கிறது. இந்தியா, பாகிஸ்தானிலிருந்துதான் வருகிறது. tikka, vindaloo.... இப்படி நிறைய விதமாக கிடைக்கிறது.. அதில் நான் இங்கு பாவித்திருப்பது vindaloo curry paste (tamarind and chillie) இப்படி இருக்கும்.

ராணி மிக்க நன்றி. மணமும் இருக்காது, சுவையும் சூப்பர்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு தோழி , உங்கள் பதிலுக்கு நன்றி