மசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி

image

வழங்கியவர் : Vr Scorp

தேதி : வெள்ளி, 18/09/2009 - 20:00

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • காளான் - ஒரு பாக்கெட்
  • பச்சை அரிசி - ஒரு கப்
  • புழுங்கல் அரிசி - 3 கப்
  • அவல் - ஒரு மேசைக்கரண்டி
  • உளுந்து - ஒரு கப்
  • வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது - அரை கப்
  • இஞ்சி - ஒரு அங்குலம்
  • பச்சை மிளகாய் - 3
  • தக்காளி பேஸ்ட் - அரை கப்
  • டோபு - 100 கிராம்
  • கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
  • சீரக தூள் - அரை தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  • சிறிய வெங்காயம் - 7
  • பூண்டு - 5 பல்
  • மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • புதினா - ஒரு மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி இலை - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

 

  • எல்லா வகை அரிசி, உளுந்து, அவல் மற்றும் வெந்தயத்தை 6 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவேண்டும். அரைத்த மாவை 10 முதல் 12 மணி வைத்து புளிக்க விட வேண்டும்.
  • சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, 2 பச்சை மிளகாய், மிளகாய் தூள் எல்லாவற்றையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இப்பொழுது காளான், தக்காளி பேஸ்ட், புதினா, கொத்தமல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • கடைசியாக துருவிய டோபு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும்.
  • ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • இட்லி தட்டில் அரைத்து புளிக்க வைத்துள்ள மாவை முழுவதும் இல்லாமல் முக்கால் பாகம் ஊற்றி ஒரு உருண்டை ஒரு இட்லி வீதம் நடுவில் வைத்து வேக வைக்கவும். சுவையான சத்தான ஸ்டஃப்டு இட்லி தயார்.