சில்லி இறால் வறுவல்

தேதி: September 18, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

இறால் - அரை கிலோ
பூண்டு - 8 பல்
பச்சை மிளகாய் - 6
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பூண்டு சேர்த்து வாசம் அடங்கும் வரை வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகு தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தீயை குறைத்து சிவக்கும் வரை வறுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா,
சில்லி இறால் சூப்பர்.... பச்சை மிளகாய் தான் என்னிடம் இல்லை... ஆனால் இந்த குளிர் க்ளைமேட்டுக்கு பெப்பர் சேர்த்து மிக அருமையாக இருக்கிறது :)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)