ஃபேப்பரிக் பெயிண்டை கொண்டு ப்ளைன் புடவையில் டிசைன் செய்வது எப்படி?

தேதி: September 19, 2009

4
Average: 3.5 (2 votes)

 

ப்ளைன் புடவை
ஃபேப்பரிக் பெயிண்ட்
டிரேஸ் பேப்பர்
ப்ரஷ்
வெள்ளைநிற கில்டர்
ஃபிரேம்

 

டிரேஸ் பேப்பரில் பல டிசைன்கள் வரையப்பட்டு தனிப்புத்தகமாக கடைகளில் கிடைக்கிறது. அதில் உங்களுக்கு பிடித்தமான டிரேஸ் பேப்பர் டிசைனை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
புடவையின் ஏதாவது முனையின் அடிப்பகுதியை ஃபிரேமில் பொருத்திக் கொண்டு அதன் அடியில் டிரேஸ் பேப்பரை வைக்கவும். இவ்வாறு செய்வதால் டிசைன் வரையும்பொழுது புடவை சுருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். பிறகு டிரேஸ் பேப்பரில் உள்ள உங்களுக்கு விருப்பமான புடவையின் பார்டர் டிசைனை பென்சிலால் அதில் உள்ளது போல் வரைந்துக் கொள்ளவும். புடவையின் ஓரங்கள் முழுவதும் இதுப்போல் வரையவும்.
வரைந்த பார்டருக்கு மேல் சிறிது இடைவெளிவிட்டு இதுப்போல் இலைகளுடன் கூடிய ரோஜாபூவின் டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
புடவையின் பார்டர் டிசைனில் நீங்கள் விரும்பிய நிறத்தில் படத்தில் உள்ளது போல் பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.
பிறகு வரைந்த ரோஜாபூவின் இதழ்களில் மேல் கருஞ்சிவப்புநிற ஃபேப்பரிக் பெயிண்டால் அவுட்லைன் போன்று கொடுக்கவும்.
அடுத்து இலைகளுக்கு பச்சைநிற பெயிண்டை கொண்டு வரையவும்.
இதுப்போல் வரைந்து முடிந்ததும் மொட்டுகள் முழுவதும் கருஞ்சிவப்புநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும். இந்த ரோஜாபூவின் டிசைன் பார்டருக்கு மேல் புடவையை சுற்றிலும் சிறிது இடைவெளிவிட்டு வருவதுபோன்று வரைந்து பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.
அடுத்து இந்த வகை டிசைன் புடவையின் இரண்டு பக்கத்திலும் மட்டும் பார்டர் வருவது போல் வரையக்கூடியது. புடவையின் இரு ஓரங்களிலும் வளைவு வளைவாக கொடிகள் போல் வரைந்து அந்த கொடிகளின் இரண்டு பக்கத்திலும் இலைகள் போன்று வரைந்துக் கொள்ளவும்.
பொதுவாக புடவையின்நிறன் லைட் கலராக இருந்தால் பெயிண்டின் நிறம் டார்க்காக இருக்குமாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கொடி மற்றும் இலைகள் எல்லாவற்றிற்கும் ப்ரவுன் நிற பெயிண்டால் வரைந்துக் கொள்ளவும். பிறகு இலைகளின் ஓரத்தில் கில்டர்ஸால் சின்ன சின்ன புள்ளிகள் வைக்கவும். கொடிகளிலும் இதேப்போல் கில்டர்ஸ் புள்ளிகள் வைத்துக் கொள்ளவும்.
கில்டர்ஸ்க்கு பதிலாக வெள்ளைநிற பெயிண்டால் இதுப்போல் புள்ளிகள் வைத்துக் கொள்ளலாம்.
புடவையில் எளிமையான டிசைன்களை வரைந்து ஃபேப்பரிக் பெயிண்டைக் பயன்படுத்தி மிகவும் சுலபமாக இதுப்போன்ற புடவையை நாமே தயாரித்துக் கொள்ளலாம். விருப்பம் இருப்பின் புடவையில் சம்கி மற்றும் சிறிய ஸ்டோன்களை ஒட்டி மேலும் அழகுப்படுத்திக் கொள்ளவும். இந்த புடவை டிசைன் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. கவிப்ரியா அவர்கள். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கவர். தற்பொழுது கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

kavipriya, very nice work.
vaany

கவிப்பிரியா அழகோ அழகு வாழ்த்துகள்

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

பெயிண்டிங் அழகாக இருக்கு. இதேபோல் பஞ்சாபி, சோல்களுக்கும் போட்டால் மிக அழகாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கவிப்ரியா,
இதைப் பார்த்த பிறகும் ஒழிந்து கொண்டு இருக்க முடியவில்லை. :) எல்லாமே அழகான டிசைன்கள் கொடுத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

புடவைகளில் உங்கள் கை வண்ணம் அழகோ அழகு. பாராட்டுக்கள்.
அன்புடன்,
செபா.

Very nice & easy to do it also. If she give me the address, we can get it touch with them to know the details to learn.

கவிப்ரியா ரொம்ப அழகா செய்து இருக்கீங்க. இதுவரை நான் bed cover, pillow cover, salwar போன்றவற்றில் மட்டுமே இந்த வேலையை செய்து இருக்கேன். நீங்க செய்ததை பார்த்து ஆசைபட்டு புடவையில் கையை வைத்தேன். உண்மையில் உங்களிக்கு ரொம்ப பொறுமைங்க. இந்த வேலையை நான் 4 நாளா செய்தேன். இன்று தான் முடித்து அட்மினுக்கு படம் அனுப்பி இருக்கேன். அவசியம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்ல வேணும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த செய்முறையை பார்த்து வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் ப்ளைன் புடவையில் செய்த பெயிண்டிங் வேலைப்பாடின் படம்

<img src="files/pictures/saree-fabric-painting.jpg" alt="picture" />

வனீ கலக்ஸ். பிடிச்சிருக்கு. என் வெட்டிங்-க்கு இப்படி ஒரு சாரி ப்ளீஸ்.
அம்மா வீட்டை நல்லா பயன் படுத்திக்கறீங்க, பாராட்டுக்கள். :) நான் கிளம்புறேன், செபா வீட்டுக்கு.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

உங்கள் கைவண்ணம் மிக மிக அழகாக உள்ளது. பொருத்தமான வர்ணங்கள் கொண்டு அழகான டிசைன் வரைந்துள்ளீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அன்புடன்,
செபா.

Akka attakasama iruku ....naanum try panren.
emroidery , kutch work indha mathiri ungaluku theriyumna engalukum sollikudugalen ....

Priya Benjamin

இமா..... என்ன மாப்பிள்ளை தயாரா??!!! புடவை, மருதாணி எல்லாம் தயார் செய்வதை பார்த்து கேட்கிறேன். ;) கல்யாணத்துக்கு சிம்ப்பிலாக ஃபாப்ரிக் பெயின்ட் பண்ண புடவையா???? ம்ஹூம்.... இருங்கோ ஒரு வேலை செய்து கொண்டு இருக்கேன்..... அந்த புடவையை அறுசுவை'கு இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் அனுப்பிடுவேன். பிடிச்சா அதை அனுப்பறேன் உங்க கல்யாணத்துக்கு. :)

மிக்க நன்றி செபா ஆன்ட்டி..... இமா'கு கல்யாணம் முடிவு பண்ணிட்டீங்களோ???!!! ;) சொல்லவே இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Akka attakasama iruku ....naanum try panren.
emroidery , kutch work indha mathiri ungaluku theriyumna engalukum sollikudugalen ....

Priya Benjamin

Akka attakasama iruku ....naanum try panren.
emroidery , kutch work indha mathiri ungaluku theriyumna engalukum sollikudugalen ....

Priya Benjamin

Akka attakasama iruku ....naanum try panren.
emroidery , kutch work indha mathiri ungaluku theriyumna engalukum sollikudugalen ....

Priya Benjamin

Akka attakasama iruku ....naanum try panren.
emroidery , kutch work indha mathiri ungaluku theriyumna engalukum sollikudugalen ....

Priya Benjamin

அஹ்லொ கவி மேடம் என் பெயர் சுந்தரி எனக்கும் கைவினை கத்துக்கனும்னு ஆசை ஆனா எங்க கத்துகுடுப்பன்ங்க தேறியல தெரிந்தால் சொல்லவும் பீளிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta