வெண்டைக்காய் கறி

தேதி: September 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

வெண்டைக்காய் - கால் கிலோ
தேங்காய் துருவல் - அரை கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான மற்ற பொருட்களை எடுத்து வைக்கவும்.
தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காயத்தூள் போட்டு வெண்டைக்காயை போட்டு வதக்கவும்.
வதக்கின வெண்டைக்காயை 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
பின்னர் திறந்து அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
அதில் 3 மேசைக்கரண்டி தண்ணீரை தெளித்து விட்டு பிரட்டி 3 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய வெண்டைக்காய் கறி ரெடி.
வெண்டைக்காய் கறி செய்முறையை <b> திருமதி. மங்கம்மா </b> அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் மங்கம்மா! வெண்டிக்காய் ரேசப்பி நல்லாய் இருக்கின்றது.
இவ்விடம் பெருங்காயம் எடுப்பது கஷ்டம்!
பெருங்காயம் இல்லாமல் சமைக்க முடியுமா? அல்லது
அதற்கு பதிலாக என்னத்தை உபயோகிக்கலாம்.
முடிந்தால் பதில் தரவும். கறி பார்க்க நன்றாக இருக்கின்றது.
சமைக்க தூண்டுகிறது. நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மங்கம்மா, நல்ல ரெசிப்பி. நான் நாளையே செய்து பார்க்கிறேன்.
வாணீ

இது புதுவிதமாக இருக்கு. நானும் முயற்சிக்கப்போகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரொம்ப வித்தியாசமா இருந்துதுங்க. நான் தேங்காய் சேர்த்து செய்ததில்லை. நல்லா இருந்தது. :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவை மிகவும் நன்றாக இருந்தது, ரொம்ப நன்றிங்க.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்