பிரியாணி - தாளிச்சா மணம் (பொடி)

தேதி: September 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

வெள்ளை மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலம் - 8 -10
கிராம்பு - 10
பட்டை - 2 சிறிய சுருள்


 

மேற்கூறிய பொருட்கள் யாவையும் நல்ல காயவைத்தோ அல்லது லேசாக வறுத்தோ மிக்ஸியில் தூள் செய்து உபயோகிக்கவும்.
இதனை உபயோகித்து பிரியாணி, தால்ச்சா செய்தால் சூப்பர் கமகம மணம் ருசியுடன் கூடிய பிரியாணி, தால்ச்சா ரெடி செய்யலாம் என்பதில் சந்தேகமேயில்லை. இஞ்சி பூண்டுடன் கலந்தும், அல்லது தாளிக்கும் போதும் போடலாம்.


தென்னாற்காடு மாவட்டத்தில் இப்படி மணம் தயார் செய்து பிரியாணிக்கும் தால்ச்சாவிற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை குருமா, வெஜ் பிரியாணி வகைகளுக்கும் பயன்படுத்தலாம்.
நாம் பிரியாணி போடும் அளவிற்கு தகுந்தபடி இந்த பொடியை உபயோகிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன்.கச கச இங்கு கிடைக்காது .அதற்கு பதில் என்ன use பண்ணலாம்.

கச கசாவிற்கு பதில் கறி வெந்தவுடன்,கொஞ்சமாக முந்திரி பேஸ்ட் போடலாம்.இது ருசியைக்கொடுக்கும்,பிரியாணி சாஃப்டாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.