கார பணியாரம்

தேதி: September 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

பச்சரிசி - அரை கப்
புழுங்கல் அரிசி - அரை கப்
வெந்தயம் - அரை மேசைக்கரண்டி
வெள்ளை உளுந்து - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத் துண்டு - குண்டு மணி அளவு
கடலைப்பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி


 

பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். அதை போல வெந்தயம், உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும்.
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசி மற்றும் உளுந்து ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு லேசாக சிவக்க விடவும்.
எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்த பிறகு தாளித்தவற்றையும் மாவுடன் ஊற்றி கரண்டியால் கட்டி இல்லாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால் மாவை எடுத்து குழியில் முக்கால் அளவு ஊற்றவும்.
பிறகு ஒரு தட்டை வைத்து மூடி வைக்கவும். பணியாரத்தின் மேல் புறம் வேகுவதற்காக மூடியை போட்டு 2 நிமிடம் மூடி விடவும்.
2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் ஒரு நிமிடம் கழித்து எடுத்து விடவும். ஒரு குச்சியை வைத்து திருப்பினால் சுலபமாக திருப்ப வரும்.
இந்த பணியாரத்தை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. அருணா </b> அவர்கள். இந்த பணியாரத்தை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் பணியாரம்....
இந்தக் குறிப்பை நான் தேடிக்கொண்டிருந்தேன். ஊரில் சாப்பிட்டிருக்கிறேன். இதை எங்களிடத்தில் குண்டுத் தோசை எனச் சொல்வதுண்டு. நிறைய நல்லெண்ணெய் குழியில் ஊற்றி செய்து எடுப்பார்கள். மிகவும் மென்மையாக நல்ல சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ளவும் எதுவும் தேவையில்லை.

என் பக்கம் வரட்டுமே என பதிவு செய்கிறேன். விரதம் எல்லாம் முடிந்தபின்னரே முயற்சி செய்வேன். இதுக்கேற்ற குண்டு(குழி) உள்ள பாத்திரம் என்னிடம் இல்லை. வாங்க வேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இதே மாவில் வெல்லம் சேர்த்து ஏலப்பொடி சேர்த்து எண்ணெய்க்குப் பதில் நெய் சேர்த்து தயாரித்து,ஆறியவுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

அருணா எப்படி இருக்கீங்க?எங்கள் வீட்டில் எப்போதும் வெறும் இட்லி மாவை குழி பணியாரமாக ஊற்றுவோம்.அல்லது இனிப்பு செய்து சாப்பிடுவோம்.இன்று உங்கள் முறைப்படி தாளித்து ஊற்றி சட்னியுடன் சாப்பிட்டோம்.மிகவும் நன்றாக இருந்தது.மிக்க நன்றி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.