கொள்ளு சட்னி

image

வழங்கியவர் : gandhiseetha

தேதி : ஞாயிறு, 27/09/2009 - 12:40

ஆயத்த நேரம் : 15 நிமிடம்

சமைக்கும் நேரம் : 2 நிமிடம்

பரிமாறும் அளவு :

3
3 votes
Your rating: None
 

 

  • கொள்ளு - 1 கப் (வேக வைத்தது)
  • வெங்காயம் - 3
  • வரமிளகாய் - 3
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை - சிறிது
  • நல்லெண்ணெய் - சிறிது
  • கடுகு - சிறிது

 

  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், வரமிளகாய், சீரகம் போட்டு வதக்கி ஆற வைக்கவும்.
  • மிக்ஸியில் வேக வைத்த கொள்ளு, வதக்கி ஆற வைத்த பொருள்கள் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். பின் பச்சையாக ஒரு வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அரைக்கவும்.
  • கடாயில் கடுகு, கறிவேப்பிலையை நல்லெண்ணெயில் தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.






கொள்ளு சட்னி இதுவரை சாப்பிட்டது இல்லை மிகவும் நன்றாக இருந்தது.

மிகவும் நன்றி.

அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126

மிக்க நன்றி...செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி...
Be Happy

Be Happy

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த கொள்ளு சட்னியின் படம் picture

மிக்க நன்றி,ஜலிலா மற்றும் அட்மின்...
Be Happy

Be Happy

ஹாய் இன்று கொள்ளு சட்னி செய்தேன் நான் சிறிது புளி சேர்த்து செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது மிக நன்றி என் கணவருக்கு ரொம்ப பிடித்து இருக்கு

அன்புடன்
நஸ்ரின் கனி

மிக்க நன்றி தோழி..........

Be Happy

Ungal chatny seithen mikavum suvaya vithyasama irunthathu.

ஒரு வார்த்தை கவிதை "நீ"