சமைத்து அசத்தலாம் பகுதி - 20, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -19, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -20 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , gandhiseethaa... (75), seethaalakshmi..(சீதாக்கா). (47), vr.scorp..(47), prabhaaaaaa...(21) நால்வரினதும் குறிப்புக்களைச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை நால்வரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (06/10) முடிவடையும். புதன்கிழமை(07/10), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி , முடிந்தால் நானும் வரேன்,

ரேணுகா நலமா?

Jaleelakamal

ஹாய் அதிரா &ரேணுகா. எனது கணக்கு:--
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்.(இது நல்ல டேஸ்ட்) (சீதாக்கா)
கத்தரி-முருங்கைக்காய் கூட்டு(சீதாக்கா)
கொண்டைக்கடலைக்குழம்பு(திருமதி.மூர்த்தி)
அவசரதக்காளிச்சட்னி(காந்திசீதா)

ரேணு என் கணக்கில் சேருங்கோ....

காந்தி குறிப்பிலிருந்து:

மாதுளம் மில்க்ஸேக்
அவசர தக்காளி சட்னி

மற்றவர் குறிப்பிலும் இரண்டாவது செய்ய ஆசை. இன்னும் நாள் இருக்கே... வருவேன் நிச்சயம். :) அதிரா.... வர தாமதமுன்னு கோவம் இல்லையே.... தினமும் வெளியே போக வேலை வந்துடுது அதிரா அதான் வர முடியல. நாளையும் வெளியே போக வேண்டும். உங்க "லேடி பக் பக்" பார்த்தேன்..... அத்தனை அழகு.... எனக்கும் செய்ய வேணும் போல் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா, நலம் நலமறிய ஆவல்.
இதுவரை சமைத்தது.
சீதா அக்காவின் வெங்காய மிளகாய் துவையல்
துவரம் பருப்பு சாதம்
காந்திசீதா அவர்களின் காலிப்லஃபர் டிக்காவும் செய்தேன்
மீதி சமைத்துவிட்டு வருகிறேன்.

திருமதி மூர்த்தி அவர்களின் சமையலில் செய்தது.
காரட் குடமிளகாய் பொரியல்.

அதிரா & ரேணு,
நலமா? இன்னைக்குதான் புது ட்ரெயினில் ஏற வந்திருக்கிறேன். ஒரு வாரமா என் பையனுக்கு ஒரே ஃபுளு -ஜூரம், கோல்ட். சோ டாக்டர், பார்மஸி என்று.., இந்த பக்கமே வரவில்லை, நேற்றிலிருந்துதான் கொஞ்சம் பரவாயில்லை.(ஆமா ரேணு, நீங்க என்னை தேடவேயில்லையே உங்க காணமல் போனவர் பற்றிய அறிவிப்பில்! ஒரு வேளை நான் எப்படியும் லேட்டானாலும் வந்துவிடுவேன் என்று விட்டுவிட்டிர்களோ?!:))

இந்த முறை, நாலு பேருடைய குறிப்புகளா?! பலே, பலே! இப்போதைக்கு ஒன்றே ஒன்று, என் கணக்கை தொடங்க.... ராகி அடை (மிஸஸ் மூர்த்தி). ஓகே, மீண்டும் நாளை வருகிறேன். அதுவரை பை, பை!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ரேணு, நீங்க கூப்பிட்ட ஒரே காரணத்துக்காகத்தான் வந்தேன். அப்புறம் பொக்கிஷத்தை நான் பார்க்கலன்னு றைவரிடம் சொல்லிடுங்கோ:) இதுவரை சமைத்தது. சீதாலக்ஷ்மி : ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்
காந்திசீதா : கத்தரிக்காய் தட்டபயறு குழம்பு
மிஸஸ்.மூர்த்தி : கேரட் பீன்ஸ் பொரியல்

"அஞ்சல் பெட்டியைக் கண்டவுடன்..."

பாட்டுக்கேட்குதோ? பொக்கிஷம் ஆரம்பமாச்சு, ஆனால் ஒரேயடியாகப் போடமாட்டோம்.... கொஞ்சம் கொஞ்சமாக கடைசிநாள் வரைக்கும் காட்டுவோம். இல்லாதுவிட்டால் சமைக்கமாட்டீங்களெல்லோ.:).

இலா மிக்க நன்றி. தீர்ப்புக்கும் சமையலுக்கும் என்னங்க சம்பந்தம்:), நீங்க தீர்ப்பை எழுதுங்கோ.. நான் நாளைதான் அங்கு வருவேன்.. இது அவசர வரவேற்பு.

சுவர்ணா.... புரிஞ்சாச்சரி:)... மிக்க நன்றி.. இன்னும் சமைச்சுச் சொல்லவேணும்..

//உன்னை போல் ஒருவன் பாக்ஸ் இருந்தா அதையே போடுங்க:)) கமல் படமாச்சே:))/// றைவருக்கு கமல் படம் பெரிதாகப் பிடிக்காதாம்:), அதுவும் அமைதியானபடமாகத் தெரியேல்லை என்பதால ரெயினில அப்படியானதெல்லாம் போடமாட்டோம்:), போடமுடியாமைக்கு வருந்துகிறோம்:):):).

ரேணுகா!! உண்மை புரிஞ்சுபோசோ?:) எனக்கும் வாயில வருது... ஆனால் சொல்ல முடியேல்லையே:):), ஆகா சமைக்க ஊக்கம் கொடுப்பீங்க என்றல்லவா நினைத்தேன், படம் பார்ப்பவர்களுக்கு பொப்கோனும் யூசும் என சொல்லி கவிழ்த்துப்போட்டீங்களே...:), இருப்பினும் நீங்க எது செய்தாலும் அது ரெயினின் நன்மைக்காகவே என மனதை பொறுத்துக்கொள்கிறேன்..:).

அம்முலு வாங்கோ மிக்க நன்றி. இப்ப சொன்னீங்களே ஒரு வசனம் அதுதான் சரி.... முதலில் ரெயின் பிறகுதான் எங்கென்றாலும்.. படம் போட்டாச்சு, இன்று எழுத்தோட்டம் மட்டும்தேதேஏஏஏன்...:) நாளைக்கு... சேரனைப் பார்க்கலாம்:) நாளையிண்டைக்கு "நதிரா" வைப் பார்க்கலாம்.... மபொர மாதிரி கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டால்தானே புரியும்:).

ஜலீலாக்கா இது கொஞ்சம் கூட நல்லாவேயில்லை. அது என்ன உங்களைக் கூப்பிட்டவர்களுக்கு மட்டும்தான் உங்களில் அன்பிருக்கென்று, நீங்களாகவே முடிவு செய்வதோ?:), உங்களுக்கு அறுசுவையும் ஒழுங்காக கிடைப்பதில்லை, அப்போ கிடைத்த நேரத்தில் அதிராவையும் கேட்டிருக்கலாமெல்லோன்னோ?:) சரி பறவாயில்லை,(அங்கன இங்கன கேட்டிருக்கிறீங்க, அதுக்கு நன்றி:)) முடிகிறபோது சமைத்துச் சொல்லிடுங்கோ... இல்லாவிட்டால்தான் ரெயினில் ஏத்தமாட்டோம்..:).

அம்முலு ஊக்கமான சமையலுக்கு மிக்க நன்றி.

வனிதா வந்தாச்சோ, எனக்கு உண்மையிலேயே என்னென்னவோ நினைவெல்லாம் வந்துவிட்டது. மெயில் அனுப்புங்கோ விபரமாக. மிக்க நன்றி. அதிகம் வெளியே அலைய வேண்டாம். லேடிபக் நல்லாயிருக்கோ?? அப்படியெண்டால் நீங்கள் ஒன்றை எடுங்கோ இமாவுக்கு ஒன்றைக்கொடுங்கோ:).

விஜி வாங்கோ. விரதம் எல்லாம் முடிந்துவிட்டதோ? மிக்க நன்றி. இலா வந்தாவாமே? எங்களைக் கூப்பிட மாட்டீங்களோ???:).

சுஸ்ரீ வாங்கோ மிக்க நன்றி. இன்றுதான் வாறீங்களோ? நான் நீங்கள் ரெயினில்தான் இருக்கிறீங்களென நினைத்தேன். இவ்வளவு பதிவிலும் பின்னர் ஒரு குறிப்புத்தானோ?:).. நீங்கள்தான் ஒழுங்காக செய்பவராச்சே.. தொடர்ந்து செய்யுங்கோ...

எதுக்கு பை பை(bag), தாறீங்க?:) ரேணுகாவோடு ஏதும் ஒப்பந்தமோ பையில போட்டு யாரையாவது கடத்த ரெயினைவிட்டு:)?.

எல்லோரும் வாங்கோ...

ரேணுகா.. ரேணுகா... இன்று என் கணக்கு... ஒன்றுமில்லை சேர்த்திடுங்கோ.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ... வெளியே போய் வந்தமையால் குறிப்புப் பார்த்துச் செய்ய முடியேல்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நாங்களும் பொக்கிஷம் படம் பார்க்க வந்திட்டோமில்ல,
நான் நேற்றும் இன்றும் சமைத்ததில்; காந்திசிதாவின்
ஈசி உளுந்துவடை, ஈசி மீன் பிரியாணி
திருமதி மூர்த்தியின்
நாட்டுக்கோழி குழம்பு என் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சீதாலஷ்மி மேடம் சமையல் - கடலை பருப்பு தேங்காய் சட்னி,சாம்பார் பொடி.பால் தேங்காய் அவல்
vr scorp
மீன் குருமா,ராகி அடை
என் கணக்கில் சேர்த்து கொள்ளவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்