சமைத்து அசத்தலாம் பகுதி - 20, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -19, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -20 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , gandhiseethaa... (75), seethaalakshmi..(சீதாக்கா). (47), vr.scorp..(47), prabhaaaaaa...(21) நால்வரினதும் குறிப்புக்களைச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை நால்வரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (06/10) முடிவடையும். புதன்கிழமை(07/10), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எனது கணக்கில் பிரபா சிவரமனின் குடைமிளகாய் ஊறுகாய்,சீதாலஷ்மிஅக்காவின் குறிப்பில் முந்திரிப் பருப்புகேக் ஆகியவற்றை சேர்க்கவும்

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

தோழிகள் அனைவரும் நலமா?அதிரா நலமா

சரிபார்க்க போட்டு விட்டேன் http://www.arusuvai.com/tamil/forum/no/13864
வாருங்கள் பிழைகள் இருந்தால் சுட்டி காட்டவும்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரெயின் மெதுவாக புறப்படுகிறது...
கடைசிப் பெட்டியிலே ஏற இருப்பவர்களெல்லாம்.. தடக்கிவிழுந்திடாமல் ஓடிவந்து கவனமாக ஏறுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்!!!.

ஜலீலாக்கா மிக்க நன்றி.

சுவர்ணா மிக்க நன்றி.

துஷியந்தி மிக்க நன்றி.

ரேணுகா என் கணக்கில் இன்று.. சீதாக்காவின் வாழைப்பூ வடை ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமும் எடுத்து செய்து சாப்பிட்டும்விட்டோம். அடுத்து Vr.Scorp இன்.. உள்ளி தீயல் செய்தேன். இத்தோடு என் கணக்கு முற்றுப்பெறுகிறது. இனி நாளைக்கு பட்டம் வாங்க, அழகாக:) வெளிக்கிட்டுக்கொண்டு வருகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரெயினுக்கு சிக்னல் போட்டாச்சா? ரொம்ப லேட்டா வந்துட்டேன்னு நினைக்கிறேன். இன்று செய்தது சீதாலக்ஷ்மி : பீர்க்கங்காய் தக்காளி கூட்டு மற்றும் காந்திசீதா: வெண்டைக்காய் சிப்ஸ். ரேணு கணக்கில் சேர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை

என் இறுதி முயற்சி, காந்திசீதாவின் 'உருளை கிழங்கை மைக்ரோ அவனில் சுலபமாக வேக வைக்கும் முறை'. லேட்டாப் போச்சுதோ அதிரா?
இமா

‍- இமா க்றிஸ்

திருமதி.மூர்த்தியின் சமையலில் இருந்து காரட் குடமிளகாய் பொரியல்,
காந்திசீதாவின் சமையலில் இருந்து கொள்ளு சட்னி,
சீதாலஷ்மியின் சமையலில் இருந்து வெண்டைக்காய் பச்சடி செய்தேன். ரேணுகா என் கணக்கில் சேர்த்துக் கொள்ளவும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இல்லை இல்லை கவனமாக ஏறுங்கோ:):)
வின்னி மிக்க நன்றி. நீங்களும் கவனம், சமைச்சதும் கவனம், கண்டபடி கீழே கொட்டி, கார்பெட் போட்ட ரெயின் சீற்றையெல்லாம் கறைபடியவைத்திடக்கூடாதென்பதில்தான் நான் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன்:).

இமா மிக்க நன்றி, ரெயின் மெதுவாகத்தான் போகுது, விழுந்திடாமல் ஏறி வடிவா இருங்கோ. சரியான நேரத்துக்கே வந்திருக்கிறீங்கள்.

ரேணுகா வந்தாச்சோ? நலமோ? இம்முறை நீங்கள் ரீ ஏதும் தராமல் விட்டுவிட்டீங்கள் ரேணுகா, நானும் விரதமும் சேர்ந்து நல்லாக் களைச்சுப்போனன்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா & ரேணுகா
நேற்றும் இன்றும் செய்தது
லாவண்யா-
தேங்காய் சட்னி - 2
கொத்தமல்லி சட்னி மற்றொரு வகை
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ரேணுகா

மகனுக்கு இப்போது காய்ச்சல் சரியாகி விட்டதா? உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். நேற்று பதிவு போட முடிய வில்லை, அதனால்தான் நலம் விசாரிக்க முடிய வில்லை, கண்ணில் நீர் வடிவது நின்றிருக்கிறதா?

சுஸ்ரீ, உங்கள் மகனின் காய்ச்சல் குணமாகி விட்டதா?
எல்லாரும் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அதிரா வந்துவிட்டேன் தான்,நேற்று செவ்வாய் கிழமை என்பதே மறந்துடுச்சு,10 மணிக்கு தான் உறைத்தது,அப்பறம் வந்து தலைப்பு போட்டேன்,
டீ வேண்டும் என சொன்னால் நொடியில் போட்டு தருவேனே,எனக்கும் யாரவது டீ போட்டு கொடுத்தால் சந்தோசமா இருக்கும்,:)யாரை கேட்க:(
பிடிங்க அதிரா ஹாட் சாகெல்ட்டும்,டீயும் எது பிடிக்குதோ குடிங்க,மற்றதை பூஸ்க்கு குடுங்க,:)இன்னும் ஒரு குறிப்பு சேர்த்து சமைத்திருந்தால் பட்டம் கொடுத்திருப்பேன்,:)அதனால் அடுத்தமுறை முயற்ச்சி செய்யவும்:)))

அதிரா ஞாயிற்று கிழமை டாக்டரிடம் பையனை காட்டினோம்,அவர் மைல்டான த்தொரோட் இன்பெக்ஷ்ன் இருக்கு,என்று அண்டிபயோட்டிக் கொடுத்தார்,இப்பொ நல்லாதான் இருக்கான்,ஆனால் ஸ்கூலுக்கு அனுப்பவில்லை,7 நாளுக்கு அனுப்ப கூடாது என்று ஸ்கூலில் ரூல்ஸ் போட்டுவிட்டார்கள்,எனக்கும் இப்பொழுது
நலம்,

அம்முலு நாங்கள் இருவரும் நலம்,உங்களுக்கு பீவர் எப்படி இருக்கு,?கலந்து கொண்டதே போதும் அம்முலு,நன்கு ரெஸ்ட் எடுத்து வாங்க

சீதா அக்கா நலமா?நான் நலமாக இருக்கேன்,பையனும் நலம்,காய்ச்சல் இல்லை,இருமல் தான் கொஞ்சம் இருந்தது,நேற்று இருமல் இல்லை,கண்ணில் நீர் வருவதும்
நின்றுவிட்டது,உங்கள் அன்பான விசாரிப்புக்கு மிகவும் நன்றி அக்கா

வானதி நலமா?என்ன அமைதியா வந்து போறது போல தெரியுது?:)டீ வேனுமா?பிடிங்க டீ:)நானும் அதிராவிடம் கேட்க நினைத்து மறந்துட்டேன்,நீங்கள் ஞாபகம் படுத்திட்டீங்க,அதிரா அது என்ன எங்களை பாட சொல்லீறீங்க:)நீங்க நல்லா பாடுவீங்களே:)))நான் பாட ஆரம்பித்தால் எல்லோரும் பயந்து ஓடி விடுவீங்க

ஸ்ரீ அம்மா வந்துள்ளார்களா?ரெம்ப ஜாலி தான் எனக்கு ஆசையாக இருக்கு எல்லோரும் இங்க வந்தால் நல்லா இருக்கும் என்று ஆனால் யாரும்
வரமாட்டிக்கிறாங்க:)

ஜலிலா அக்கா கூப்பிட்டது வந்துட்டீர்கள் நன்றி,அடுத்த முறை கூப்பிடாமல் வரனும்

அதிரா அது என்ன கலிபொரேஞ் ,அது என்ன ?எப்படி இருக்கும்,விரிவா சொல்லுங்கள் இங்கே கிடைக்குதா என்று பார்க்கிறேன்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்