கொச்சுகோயா

தேதி: September 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நன்கு பழுத்த வாழைப்பழம் - 1
வெல்லம்(பொடித்தது) - 1 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
ஃப்ரெஷ் தேங்காய் பால் - 1/4 கப்
காய்ச்சி ஆறிய பால் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 2
அவல் - 1 கைப்பிடி அளவு


 

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனோடு அரை மேசைக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து பிசிறி வைக்கவும். வாழைப்பழத்தை மத்தால் நன்றாக மசிக்கவும்.
இதனோடு பொடித்த வெல்லம் சேர்த்து மத்தால் கடையவும். இந்த கலவையில் மீதமுள்ள சர்க்கரை, பால் மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
சர்க்கரை கலந்த சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும். பரிமாறும் கிண்ணத்தில் கொஞ்சம் அவல் எடுத்துக் கொண்டு அதன் மேல் பழக்கலவை ஊற்றி பரிமாறவும்.


ஒரு மலையாள சமையல் நிகழ்ச்சியில் பார்த்து செய்த உணவு. சுவையாக இருந்தது. குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான உணவு. குழந்தைகள் சின்னவெங்காயம் சாப்பிட மாட்டார்கள் என நினைத்தால் தவிர்த்து விடலாம். மிகவும் சிறிய குழந்தைகளுக்கு அவலை சிறிது பாலில் ஊறவைத்து பின்னர் அதன் மேல் பழக்கலவை ஊற்றி கொடுக்கலாம். டயட் இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சம் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்