கருவாடு வறுவல்

தேதி: September 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

நடுத்தர அளவு கருவாடு - 1
சின்னவெங்காயம் - 15
பூண்டு - 2 பல்
மிளகாய்வற்றல் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

கருவாட்டை சுத்தம் செய்து அரைத்தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
ஆறியதும் முள் நீக்கி சதைப்பகுதியை மட்டும் உதிர்த்து வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய்வற்றல் ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைக்கவும்.
இடிகல் இருந்தால் அதில் இடித்தால் சுவை அதிகம். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காய கலவை கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் உதிர்த்த கருவாடு சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து முறுகலாகும் வரை கிளறி இறக்கவும்.


தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும் மணமும் கூடும். கருவாட்டில் உப்பு இருப்பதால் வெங்காய கலவைக்கு வேண்டிய அளவில் பாதி உப்பு மட்டுமே சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்