சுலபமாக செய்துக்கொள்ளக்கூடிய ஜடை அலங்காரங்கள்

தேதி: September 30, 2009

3
Average: 2.9 (11 votes)

பண்டிகை நாட்கள், வீட்டோடு செய்யும் வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற விசேஷங்களில் சுலபமாக செய்யக்கூடிய ஜடை அலங்காரங்கள் சிலவற்றை திருமதி. வனிதாவில்வாரணி முருகன் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஃபேன்சி கடைகள், பார்லர் போன்ற இடங்களில் கிடைக்கும் முத்துகள், சிறிய ஃப்ளாஸ்டிக் பூக்கள் மற்றும் இயற்கையான பூ இதழ்களை கொண்டு நீங்களே மிக அழகான ஜடை அலங்காரங்களை செய்து கொள்ளலாம்.

 

முத்துக்கள், செயற்கை பூக்கள்
இயற்கையான பூக்கள்
கொக்கி தோடுகள்

 

சாதாரணமாக ஃபேன்சி கடைகளில் பல வடிவத்தில் செயற்கையாக கிடைக்கும் சின்ன பூக்கள் உள்ள பீட்ஸை மூன்று கால் பின்னல் ஜடையில் சிறிது இடைவெளிவிட்டு விட்டு வைத்து செய்யக்கூடிய அலங்காரம் இது.
இதேப்போல் செயற்கை பூக்களை இடைவெளிவிட்டு வைத்தபிறகு அதன் மேலே நீங்கள் உடுத்தும் புடவையின் நிறத்துக்கு ஏற்றவாறு இயற்கையான பூ இதழ்களை வைத்தும் செய்யலாம்.
இதுப்போல் இரண்டு இதழ்களாகவும் வைத்து செய்யலாம். கீழே வைத்திருக்கும் செயற்கையான பூக்களுக்கு பதிலாக மல்லிகை பூவை பயன்படுத்தினால் இன்னும் அழகாக இருக்கும். (சிகப்பு ரோஜா இதழ்களும், மல்லிகை பூக்களும் பயன்படுத்தி செய்தால் நல்ல பொருத்தமாக இருக்கும்)
செயற்கையான பூக்களை ஒரு பின்னலிலும் அதன் கீழே சற்று இடைவெளி விட்டு மூன்று, நான்கு இதழ்களை ஒன்றாக சேர்த்து வளைவாக வைத்தும் செய்யலாம்.
அடுத்து நீங்கள் கட்டியிருக்கும் புடவைக்கு பொருத்தமாக கொக்கிகள் உள்ள தோடுகளை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு வகை ஜடை அலங்காரம். அந்த தோட்டிற்கு கீழ் ஒரு முத்து பீட்ஸை சொருகிக் கொள்ளவும்.
இன்னும் சற்று கூடுதல் அழகாக இருக்க இரண்டு தோடுகளாக சேர்த்து அலங்கரித்து கொள்ளலாம்.
சாதாரணமாக மூன்றுகால் பின்னல் ஜடையில் வெறும் முத்துமணியை (பீட்ஸ்) மட்டும் மூன்று மூன்றாக வைத்து இதுப்போல் அலங்கரித்து கொள்ளலாம்.
இது வழக்கமாக போடும் மூன்று கால் பின்னலுக்கு பதிலாக நான்கு கால் பின்னல் போட்டு ஒவ்வொரு முத்துக்களை கொண்டு அலங்கரித்தது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் வனிதா நலமாக இருக்கீங்களா. உங்க ஜடை அலங்காரம் ரெம்பசூப்பராக இருக்கு. நீண்ட முடியில்லையே என கவலையாகவும் இருக்கு

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி. :)

அம்முலு..... மிக்க நன்றி. எனக்கு நீளமான முடி கிடையாது, ஆனால் வருத்தமும் கிடையாது... ஏன்னா நான் தான் பிடிக்காம வெட்டுறதே. ;) ரொம்ப நாளா காணவில்லை போலும் உங்களை.... நீங்க காணோமா இல்லை நான் தான் உங்களை காணலயான்னு தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா என்னென்னமோ செய்து காட்டி அசத்தறீங்க!!அதென்ன நாலு கால் பின்னல்?

Patience is the most beautiful prayer!!

வனீ,

ஜடை அலங்காரம் மிக அழகாக இருக்கிறது. :) எனக்கொரு சந்தேகம்.. உங்களுக்கு என்ன விசேஷம் என்று அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறீங்க? பண்டிகை நாட்கள் (....தீபாவளியா?), வீட்டோடு செய்யும் வளைகாப்பு!!??, நிச்சயதார்த்தம்!!?? :))

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வனிதா அருமை அருமை என்னமா கலக்குரிங்க வாழ்த்துக்கலள்....

இமா அம்மாவுக்கு வெட்டிங்கு மெக‌ந்தி டிசைன் கேட்டாங்க‌லே அவ‌ங்க‌லுக்கும் போட்டு விட்டிங்கலா?

இமா அம்மா எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு?

////எனக்கொரு சந்தேகம்.. உங்களுக்கு என்ன விசேஷம் என்று அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறீங்க? பண்டிகை நாட்கள் (....தீபாவளியா?), வீட்டோடு செய்யும் வளைகாப்பு!!??, நிச்சயதார்த்தம்!!?? :))///

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஜடை அலங்காரம் மிக அழகாக இருக்கிறது. :)

மிக்க நன்றி உத்ரா..... :) 3 கால் எடுத்தும் பின்னாமல் 4 கால் எடுத்து பின்ன வேண்டும். பார்க்க சங்கிலி போல் இருக்கும்.

மிக்க நன்றி இமா.... விஷேஷம் தான்.... ஆனால் என்ன விஷேஷம் என்பது உங்க லிஸ்ட்டில் தான் இல்லை... :D ஹிஹிஹீ.

மிக்க நன்றி பிரபா.... உங்க சந்தேகம் என்னை பற்றியா இல்லை இமா பற்றியா???? ;)

மிக்க நன்றி சங்கீதா.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

it is very nice

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta