ரோஸ் மரினோ காரட் சூப்

image

வழங்கியவர் : Vr Scorp

தேதி : வியாழன், 01/10/2009 - 12:29

ஆயத்த நேரம் : 5 நிமிடம்

சமைக்கும் நேரம் : 25 நிமிடம்

பரிமாறும் அளவு : 3

0
No votes yet
Your rating: None
 

 

  • காரட் - 75 கிராம்
  • பீன்ஸ் - 15 கிராம்
  • செலரி தண்டு - 10 கிராம்
  • பேபி கார்ன் - 15 கிராம்
  • வெங்காயம் - ஒன்று
  • ரோஸ் மரினோ - 3
  • சோளமாவு - 3 தேக்கரண்டி
  • குடைமிளகாய் - ஒரு தேக்கரண்டி
  • பூண்டு - 3 தேக்கரண்டி
  • பிரட் க்ரம்ப்ஸ் - ஒரு கப்
  • ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • தக்காளி - ஒன்று
  • ஜவ்வரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

 

  • காரட்டை வேகவைத்து நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.
  • சோளமாவுடன் சிறிது பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்து கொள்ளவும்.
  • எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், செலரி, பீன்ஸ், காரட், ரோஸ் மரினோ சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் பொடியாக நறுக்கிய பேபி கார்ன் சேர்த்து கிளறவும்.
  • உப்பு மற்றும் ஜவ்வரிசி மாவு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • 10 நிமிடத்திற்கு பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
  • 5 நிமிடத்துக்கு பிறகு மசித்த காரட்டை சேர்க்கவும்.
  • சோளமாவு கலவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

Note:

தேவையானால் வெள்ளை மிளகு தூள் சேர்த்து பரிமாறலாம்.