லைட் ஹவுஸ் நைட் லேம்ப்

தேதி: October 1, 2009

3
Average: 2.5 (2 votes)

 

உருளைவடிவ குழாய் - 30 செ.மீ + 7 செ.மீ
சிடி - 1
Ohp ஷீட்
கனமான அட்டை
கறுப்பு மற்றும் வெள்ளைநிற பேப்பர்
பெவிக்கால்
ப்ரஷ்
ஒயருடன் கூடிய பல்ப் ஹோல்டர்
ஃப்ளெக்
குண்டூசி
கறுப்புநிற உல்லன்நூல்
நைட்லேம்ப் பல்ப்
கறுப்பு பெயிண்ட்
கத்திரிக்கோல்

 

லைட் ஹவுஸ் வடிவ நைட் லேம்ப் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான அட்டையின் மீது சிடியை வைத்து அதன் ஓரத்தை வரைந்து, பின்னர் வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். வெட்டிய அட்டையின் இரண்டு பக்கமும் கறுப்புநிற பெயிண்டை அடித்து காயவிடவும்.
7 செ.மீ அளவிலான உருளைவடிவ குழாயின் ஏதாவது ஒரு பக்கத்தில் படத்தில் உள்ளது போல் இரண்டு ஜன்னல்கள் வரைந்து அந்த பகுதியை வெட்டி எடுத்துவிடவும்.
பிறகு இரண்டு ஜன்னலையும் சேர்த்து அதன் இடைவெளி அளவிற்கு OHP ஷீட்டை வெட்டி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அந்த உருளைவடிவ குழாயின் ஜன்னல் பகுதியை சுற்றிலும் பெவிக்கால் தடவி அதன் மேல் வெட்டிய OHP ஷீட்டை வைத்து நன்கு ஒட்டிக் காயவிடவும். இப்பொழுது பார்ப்பதற்கு கண்ணாடி ஒட்டியது போல் இருக்கும்.
Ohp ஷீட் ஒட்டிய அந்த குழாயின் இரண்டு ஜன்னல் பகுதியை தவிர மீதி இடத்தை வெள்ளைநிற பேப்பரைக் கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.
அடுத்து படத்தில் உள்ளது போன்று வெவ்வேறான வடிவத்தில் உள்ள மூன்று ப்ளாஸ்டிக் மூடிகளை எடுத்துக் கொள்ளவும்.
முதலில் பெரிய மூடியின் நடுவில் நடுத்தர அளவிலான மூடியை வைத்து பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும். அதன் மேல் சிறிய மூடியை வைத்து ஒட்டிக் நன்கு காயவிடவும். இப்பொழுது சிறிய மூடியின் மேல் பகுதியில் ஒரு துளையிட்டு அதில் ஒரு ஆணியை சொருகிக் கொள்ளவும். ஒரு கனமான அட்டையில் அம்புக்குறிப் போல் செய்து அதனை ஆணியில் சொருகி விடவும்.
பிறகு உருளைவடிவ குழாயின் மேல் இந்த மூடியை பொருத்திக் கொள்ளவும்.
இப்பொழுது 30 செ.மீ அளவிலான உருளைவடிவ குழாயின் சுற்றளவிற்கு தகுந்தாற்போல், கறுப்பு மற்றும் வெள்ளைநிற பேப்பரை நறுக்கி எடுத்து கொள்ளவும். குழாயின் அடிப்பகுதியில் கறுப்புநிற பேப்பரை முதலில் ஒட்டிவிட்டு, அதன்மேல் வெள்ளைநிற பேப்பரை ஒட்டவும். கறுப்பு, வெள்ளை என மாறி மாறி ஒட்டவும்.
குழாயின் அடிப்பாகத்தில் கறுப்புபேப்பர் ஒட்டிய பகுதியின் ஏதாவது ஒரு பக்கத்தில் ஒயர் சொருகும் அளவிற்கு ஓட்டையிட்டு கொள்ளவும். பல்ப் ஹோல்டர் குழாயின் மேல்பகுதியில் இருக்குமாறு வைத்துவிட்டு ஒயரை துளையின் வழியாக வெளியே விட்டு அதில் ப்ளெக்கை பொருத்திக் கொள்ளவும்.
இப்பொழுது சிடியின் வடிவத்தில் செய்திருக்கும் அட்டையின் நடுவில் உள்ள ஓட்டையில் தொங்கவிட்டிருக்கும் இந்த பல்ப் ஹோல்டரை பொருத்திக் கொள்ளவும். பல்ப் ஹோல்டரில் நைட்லேம்ப் பல்பை மாட்டி வைக்கவும்.
மூடியுடன் கூடிய உருளைவடிவ குழாயை அந்த அட்டையின் மீது வைக்கவும்.
இப்பொழுது அட்டையில் ஒரங்களை சுற்றிலும் குண்டூசிகளை இடைவெளிவிட்டு விட்டு வரிசையாக சொருகிக் கொள்ளவும். அவற்றின் ஏதாவது ஒரு குண்டூசியில் கருப்புநூலை கட்டி முடிச்சுப்போடவும். பிறகு அந்த நூலை ஒவ்வொரு குண்டூசியிலும் ஒரு முறை சுற்றி சுற்றி கொண்டு வரவும். கடைசியில் ஆரம்பத்தில் முடிச்சுப் போட்ட குண்டூசியில் கொண்டு வந்து மீண்டும் ஒரு முறை சுற்றி முடிச்சுப் போட்டு கொள்ளவும்.
இப்பொழுது அழகிய லைட் ஹவுஸ் வடிவ நைட் லேம்ப் தயார்.
திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த லைட் ஹவுஸ் நைட் லேம்ப் செய்முறையை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ்!! என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு!

Patience is the most beautiful prayer!!

பாப்பி,
என்ன என்று சொல்லுறது!! கலக்கு கலக்கென்று கலக்குறீங்க. :)
பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அட எங்க ஊர் லைட் ஹவுஸ் சூப்பரா இருக்கே. நல்ல கற்பனை

வாழ்த்துக்கள் பாப்பி

Jaleelakamal

என்ன கற்பனை வளம் உங்களுக்கு.ரொம்ப அழகா இருக்கு.பாராட்டுக்கள்!!

பாப்பி...
பாப்பி இதையெல்லாம் யோசிச்சுச் செய்ய உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்குது?. இது கொஞ்சம் கஸ்டமான வேலையாக இருக்கு. ஆனாலும் நல்ல நீற்றாகச் செய்திருக்கிறீங்கள். வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அருமை பாப்பி பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Hi,
For my Daughter's School project (Wealth from waste)I make light house. it came very nice...... THANKS A LOT to Shenbaga & Arusuvai team.
regards
christy

Really Super..... :)

So good.....

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது .வாழ்த்துக்கள்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta