கத்திரிக்காய் சட்னி

தேதி: October 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

கத்திரிக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 15
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 3
கடுகு - அரை தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் ஆகியவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க வேண்டியப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு கருகவிடாமல் மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கி எடுத்து விடவும்.
அதன் பின்னர் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கியதும் தனியாக எடுத்துக் வைக்கவும்.
பிறகு கத்திரிக்காய், தக்காளி இரண்டையும் போட்டு நன்கு வதக்கி விட்டு ஆற வைக்கவும்.
வதக்கியப் பொருட்கள் எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். பிறகு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி கிளறி விட்டு பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையாக இருந்தது. மிகவும் சுலபமாகவும் இருந்தது. நான் இதிலேயே கத்தரிக்காய் இல்லாமல் தக்காளி சட்னி செய்வது உண்டு,கத்தரிக்காய் சேர்த்ததும் சுவை அருமை இட்லியுடன் சாப்பிட்டோம். குறிப்பிற்கு நன்றி.படம் எடுத்து அட்மினுக்கு அனுப்பியுள்ளேன்,விரைவில் எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.