ஆப்பிள் டெஸர்ட்

தேதி: October 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரொட்டி - 9 துண்டுகள்
வெண்ணெய் - 3 1/2 மேசைக்கரண்டி
ஆப்பிள் - 2
பிரட் க்ரம்ப்ஸ் - அரை கப்
ஏலக்காய் மற்றும் பட்டை பொடி - 1/4 தசப்
பொடி செய்த சர்க்கரை - அரை கப்
ஜாம் (உங்கள் விருப்பமான ஃப்ளேவர்) - 1 1/2 தேக்கரண்டி


 

ஆப்பிளை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். ரொட்டியின் பிரவுன் பகுதியை நீக்கி விட்டு நீளமான துண்டுகளாக வெட்டி இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் ப்ரெட் க்ரம்ப்ஸ், ஏலக்காய் பொடி, சர்க்கரை (பொடி செய்த) மற்றும் ஜாம் சேர்த்து நன்கு கிளறவும்.
வேகவைத்துள்ள ஆப்பிளை மசித்து இதனுடன் சேர்க்கவும். மீதமுள்ள வெண்ணெயையும் சேர்த்து நன்கு கிளறவும்.
ஒரு புட்டிங் பவுல் எடுத்து டோஸ்ட் செய்த சில ரொட்டி துண்டுகளை சுத்தி வைக்கவும்.
நடுவில் தயார் செய்த கலவையை கொட்டி அதன் மேல் மீதமுள்ள டோஸ்ட் செய்த ரொட்டி துண்டுகளை வைத்து மூடவும்.
பட்டர் பேப்பர் வைத்து அதனை மூடி ஒரு ஸ்டீம் வைத்து எடுக்கவும். சுவையான ஆப்பிள் டெஸர்ட் தயார்.


மேலும் சில குறிப்புகள்