குலாப் ஜாமூன்

வழங்கியவர் : DHUSHYANTHY
தேதி : வெள்ளி, 02/10/2009 - 16:48
ஆயத்த நேரம் : 1 மணித்தியாலம்
சமைக்கும் நேரம் : (1 - 2) மணித்தியாலம்
பரிமாறும் அளவு : (3 - 6) நபர்களுக்கு
- கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
- டின் பால் (கன்டென்ஸ்டு மில்க்) - அரை டின்
- சீனி (சர்க்கரை) - 250 கிராம்
- நெய் - 2 தேக்கரண்டி
- ஆப்பச்சோடா - அரை தேக்கரண்டி
- வெனிலா - ஒரு தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - அரை போத்தல்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா) ஆப்பச்சோடா உப்பு, நெய், வெனிலா, டின்பால் (கன்டென்ஸ்டு மில்க்) ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைக்கவும்.
- குழைத்த பின்பு இந்த பாத்திரத்தை ஒரு மணித்தியாலம் நன்றாக மூடிவைக்கவும்.
- ஒரு மணித்தியாலத்தின் பின்பு பாத்திரத்தை திறந்து முதலில் குழைத்து வைத்துள்ள மாவை மறுபடியும் குழைக்கவும்.
- பின்பு குழைத்து வைத்துள்ள எல்லா மாவையும் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
- அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
- எண்ணெய் கொதித்தபின்பு அதில் உருட்டி வைத்திருக்கும் சிறிய சிறிய உருண்டைகள் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
- உருண்டைகள் யாவும் பொரித்த பின்பு தாட்சியை (வாணலியை) அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
- அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் சீனி(சர்க்கரை)யை போட்டு அதனுடன் தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சவும்.
- பாகு பதத்தில் காய்ச்சிய பின்பு அப்பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
- பிறகு பாகு உள்ள பாத்திரத்தில் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பாத்திரத்தை (1 - 2)மணித்தியாலம் நன்றாக மூடிவைக்கவும்.
- (1 - 2)மணித்தியாலத்தின் பின்பு சுவையான சத்தான குலாப் ஜாமுன் தயாராகிவிடும்.
- அதன் பின்பு ஒரு தட்டில் தேவையான குலாப் ஜாமூனை வைத்து பரிமாறவும்.
Note:
குலாப்ஜாமூன் மிகமிக சுவையான இனிப்பு ஆகும். இனிப்பு பிரியர்களுக்கு மிகமிக பிடித்த இனிப்பு வகை இதுவாகும். அத்துடன் இதில் பல சத்துகள் அடங்கியுள்ளது. எச்சரிக்கை - சர்க்கரை நோயுள்ளவர்கள், இருதய நோயுள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விசயங்கள்- சீனி(சர்க்கரை)யை போட்டு அதனுடன் தண்ணீர் விட்டு பாகுபதத்தில் காய்ச்சவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
2 நிமிடங்கள் 6 sec முன்பு
1 min 44 sec முன்பு
8 நிமிடங்கள் 59 sec முன்பு
10 நிமிடங்கள் 29 sec முன்பு
16 நிமிடங்கள் 52 sec முன்பு
33 நிமிடங்கள் 8 sec முன்பு
35 நிமிடங்கள் 23 sec முன்பு
36 நிமிடங்கள் 27 sec முன்பு
40 நிமிடங்கள் 38 sec முன்பு
45 நிமிடங்கள் 56 sec முன்பு