சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்... வாங்க மூவி தியேட்டருக்கு...8

ம்ம்ம்க்ஹூம்... மைக் டெஸ்ட்....

அனைவருக்கும் வணக்கம்...

பெயருக்கேற்ற மாதிரி நல்ல நகைச்சுவையா ஒரு பட்டிமன்றத்தை நடத்தலாம்ன்னு நானும் மூளைய கொடன்ச்சி, "இன்றைக்கு மக்களை நன்றாக சிரிக்க வைக்கும் காமெடியன் யாருன்னு..." கேட்கலாம்ன்னு தான் நினைத்தேன்.......ஆனா அதுக்குள்ளே கூட்டத்துலயிருந்து பல குரல்...

ஒன்னு......." யாருமேயில்லன்னு"
அடுத்தது...." அசத்தப்போவது யாருன்னு"
அடுத்து...." கலக்கப்போவது யாருன்னு"

மூளைய கொடன்ச்சின்னு நான் சொல்றதுக்குள்ள யாரோ ஒரு குரல்
"இருந்தா தானே குடைவீங்க" இல்லாததையெல்லாம் விட்டுடுங்கன்னு, கேக்குதுங்க!!!!!!!!!

இன்னொன்னு இதோப்பார்ரா.......இதான் "காமேடியேன்னு".......

சரி ஏன் இப்படி இல்லாத ஒன்னுக்கு சண்டை போடனும்ன்னு நானே நினைச்சு அப்படியே ட்ராக்கை மாத்தி ஆன் தி ஸ்பாட் ல வேற தலைப்பை தேர்ந்தெடுத்துட்டேன்.

இன்றைக்கு நாம் எடுத்துக்கொண்டு பேச உள்ள தலைப்பு " உலக திரைப்படங்கள் மக்களிடத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மை பயக்குவையா? தீமை பயக்குவையா? "

பொதுவாக அக்காலத்தில் உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கருத்துள்ளவையாக இருந்தன.இக்காலத்தில் கதை,கருத்து...சிந்திக்க வைக்க கருத்துக்கள் உள்ளதா என்றே தெரியவில்லை... நீங்க சொன்னதான் நானும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
இந்த பட்டிமன்றத்தில் நாம் சராசரியாக ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்பு எப்படி பட்டது என விவாதித்து ஒரு தீர்வு காண்போம்.

இதில் "நன்மையே" என பேச இருக்கும் அணியினர்....

புதிய திருமதிகள்...
திரு...புலவர். அவர்கள்...
பணிபுரியும் உயர் அதிகாரிகள்...

இதில் "தீமையே" என பேச இருக்கும் அணியினர்...

இல்லத்தரசிகள்...
ஆசிரியர்கள்,பேராசிரியர்கள்...
கல்லூரி மாணவ,மாணவிகள்...

சரியோ, இரண்டு அணியிலும் அனைவரையும் அழைத்து விட்டேன்.
இதனால பட்டிமன்றத்துக்கு எல்லோரையும் நான் அழைக்கிறது பெரிய மூவி தியேட்டருக்கு... ஜாலியா பாப்கார்ன்,முறுக்கு,கூல்ட்ரிங்க்ஸ்,ஐஸ்க்ரீம் எல்லாம்(நீங்களே வாங்கிக்கோங்க!!!),இன்னும் என்னவெல்லாம் வேணுமோ சாப்பிட்டு சும்மா.............தெம்பா வந்து நாலு வரி சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டு போங்க.......

மேற்கு கோடியிலிருக்கும் எனக்கு பொழுது போகறதுக்குள்ள கிழக்கு கோடி நம் மக்களுக்கு பொழு விடிஞ்சி அடுத்த நாள் வந்துடுது..........அதனால இப்போவே போட்டுட்டேன்.

அனைவரும் வாரீர்!!! அனுமதி இலவசம்....!!!!!

நகைச்சுவைப் பட்டி என்று எட்டிப் பார்த்தால் ஆளாளுக்கு கொட்டித் தள்ளியிருக்கிறார்கள்....இந்த அநியாயத்தை தட்டி கேட்க ஆளேயில்லையா?
உலக திரைப்படங்கள் பற்றி பேசும் அளவுக்கு எனக்கு அனுபவ அறிவு இல்லை....
நானும் யோசித்துப் பார்த்ததில் தீமையாகவே தோன்றுகிறது....
நான் அதிகம் திரைப்படங்கள்ப் பார்த்ததில்லை....
1. சிவாஜியில் ரஜினி கொள்ளையடித்து உதவுகிறார்....கொள்ளையடிப்பவரிடம் நாம் கொள்ளையிட்டால் தப்பில்லையோ? என் அறிவில் தப்பெனத் தோன்றுகிறது....
2. நான் கடவுளில் ஆர்யா தப்பு செய்வோரை தூக்கிப் போட்டு பந்தாடுகிறார் ...தப்பு செய்வோரைத் திருத்தணுமா தண்டிக்கணுமா?
3. இந்தியனில் கமல் லஞ்சத்தை ஒழிக்க கொலை செய்கிறார்...சரியா?
4. அந்நியனில் விக்ரமும் லஞ்சத்தை ஒழிக்க கொலை செய்கிறார்...
5. ரௌடியை விரும்பிக் காதலிக்கும் நல்ல பெண் ....நிஜ வாழ்க்கையில் ஒத்துக் கொள்வோமா?
இன்னும் நிறைய கேள்விகள்....
அதிரா நாங்கள் பார்த்து சினிமா தீமையானது என்று சொல்வதற்காகத்தான் சினிமா பார்க்கிறோம்...புரிகிறதோ!!!!!!!!!!!!!
கரண்ட் கட்டா...தியேட்டர் ஓனர் சீக்கிரம் ஜெனரேட்டர் போடுங்க.... ஏசி இல்லையா....பரவாயில்லை படத்தையாவது போடுங்க....

நடுவரே எப்படியோ யோசித்து ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நான் தீமையே என்ற அணியின் சார்பாக வந்துள்ளேன்.என்னால் உலக மக்களுக்காக எல்லாம் பேச முடியாது:) நான் இந்திய மக்களுக்காகத் தான் பேசுவேன் போராடுவேன்.. வெல்வேன்..வேன்.. வேன்..ஸாரி நடுவரே ரொம்ப எமோஷனலாயிட்டேன்:)

உலக மொழிகளில் குழந்தைகளுக்கென்றே படங்கள் எடுக்கின்றனர். ஆனால் அதெல்லாம் இந்தியக் குழந்தைகளை சென்றடைகிறதா? அங்குள்ள நம் சிறு பிள்ளைகள் இந்திய சினிமதானே பார்க்கிறார்கள். பிள்ளைகள் பார்ர்க்குமளவு நல்லாத்தான் படம் எடுக்கிறாங்க:-(

நமெக்கெல்லாம் இங்கிலீபீஸெல்லாம் தெரியாதுங்கோ. எங்க ஊரு டாக்கீஸுல இன்னா படம் ஓட்டறாங்களோ, அத்ததான் நாங்க போயி பாப்போம்.. பொழுது போக்கிற்காகத்தான் படம் என்றாலும் அதில் இரட்டை அர்த்த வசனங்களும், பெண்களை போகப் பொருளாக காட்டுவதும், வன்முறைகளும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஈரோன்னா தாதா இல்லை ரவுடி அப்புறம் ஈரோயின் ஒரு லூஸு பொண்ணு, வில்லன்னா ஒரு அறுவா இதான் தமிழ் சினிமாவோட ஃபார்முலா. இதெல்லாம் பார்த்தா உருப்பட்ட மாதிரிதான். எதிரணியில இருக்கற நல்லவங்கல்லாம் இந்த படங்களை மாட்டாங்க. ஆனால் நாம் நாட்டில் இருக்கும் சின்ன பசங்களை நீங்களாவது கொஞ்சம் நினைத்துப் பாருங்க நடுவர் அவர்களே.

இந்தியப் பெண்கள் எல்லாம் அழகுன்னு ஐஸ்வர்யா ராய் நடித்த சினிமா பார்த்துதான் தெரியனுமா என்ன? ஏன் நம்மளை எல்லாம் பார்த்தாலே தெரியாதா:-) இதற்கு எதிரணியில் யாராவது மறுப்பு கூறுவார்களா:)ஆகவே நடுவர் அவர்களே, திரைப்படங்கள் மக்களிடத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தீமை பயக்குவையே என்று கூறி விடைபெறுகிறேன் வணக்கம்.

அனைவருக்கும் மீண்டும் வணக்கங்கள்.
எதிரணியினர் சிலபடங்களை குறிப்பிட்டு இவை எல்லாம் நல்ல படங்கள் இல்லையா என்று கேட்கிறார்கள். என்னங்க பண்றது உங்க லிஸ்ட் சின்னது. ஆனா எங்க லிஸ்ட் ரொம்ப...ரொம்ப பெருசாச்சே!!! அப்புறம் அதையெல்லாம் நாங்க எழுத ஆரம்பிச்சா நாங்க பந்தி பந்தியா எழுதறோம்னு குற்றச்சாட்டு வேற சொல்வாங்களே! எ.கொ.ச.இ.:-(

அதிரா நீங்க என்னை மிரட்டவெல்லாம் முடியாது நான் தியேட்டரில் போய் படம் பார்த்து ஏகப்பட்ட வருடங்கள் ஆகி விட்டது :-(. ஒரு படம் வந்து அது நல்ல படம் சிறந்த படம் என்ற கருத்து நிலவினால் மட்டுமே அதை டிவிடி யில் பார்ப்பேன். அதனால் வருடத்திற்கு அதிகம் போனால் 5 அல்லது 6 படங்கள்தான் பார்க்க முடிகிறது. மிஞ்சி போனால் 10 படங்கள் அவ்வளவுதான்.

என்னது பிறநாட்டு படங்களைப் பார்த்து அவங்க வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் தெரிஞ்சுக்க முடியுதா? எங்க ஊர் மக்களை சந்திச்ச பிறகு இந்த முடிவுக்கு வாங்க. முக்கால்வாசி ஹிந்தி படங்களும்(சில தமிழ் படங்களும்) டப் செய்யப்பட்டு இங்கே திரையிடப் படுகின்றன.பாடல்கள் மட்டும் ஹிந்தியிலேயே இருக்கும். டிவிடிக்களும் கிடைக்கும். குச் குச் ஹோத்தா ஹே இங்கே அதிக நாட்கள் ஓடி ரெக்கார்ட் ஏற்படுத்திய படம். இன்று வரை இந்திய பெண்களைப் பார்த்தால் அப்பட பாடல்களை பாடுவார்கள் :-). அவர்கள் எங்களிடம் கேட்ட முதல் கேள்வி "உங்கள் ஊரில் காதலிக்கும் போது இப்படி எல்லாம் பாட்டு பாடுவீர்களா?" நாங்கள் அதிர்ச்சியுடன் இல்லியே என்றால் அப்போ உங்கள் படங்களில் காட்டப்படுபவை எல்லாம் பொய்யா என்கிறார்கள். நம் வாழ்க்கை முறையை வெளிநாட்டவர்களுக்கு நம் படங்கள் இப்படித்தான் காட்டுகின்றன. இது என்னிடம் மட்டும் கேட்கப் பட்ட கேள்வி அல்ல. பல தோழிகளிடமும் கேட்கப் பட்டிருகின்றன.

சினிமா என்பது பொழுது போக்குதான் அதனால் தீமை எல்லாம் விளைவது இல்லை என்கிறீர்கள். அப்போ நன்மை மட்டும் முப்போகமும் விளையுதோ?

குழந்தைகளை அப்படங்களுக்கு கூட்டிச் செல்லாதீர்கள் என்கிறீர்கள். அவர்களை தியேட்டருக்கெல்லாம் அழைத்து செல்ல வேண்டியதில்லை. இந்திய தொலைகாட்சிகளிலேயே முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... என்ற அறிவிப்போடு நம் வீட்டு கூடத்துக்கே வந்து விடுகின்றன. டிவியில் சைல்ட் லாக் செய்ய வேண்டியதுதானேன்னு கேட்கக் கூடாது. இக்காலத்து பிள்ளைகள் இவ்விஷயங்களில் எல்லாம் ரொம்பவே சமர்த்து.

சில தீமைகளை காட்டினல்தான் அதன் விளைவுகளை சொல்ல முடியும் அதைப்பார்த்து தவறு செய்யாமல் இருப்பார்கள் என்கிறீர்கள். இரண்டரை மணிநேர படத்தில் கொலை செய்வது எப்படி அதை மறைப்பது எப்படி எந்த விஷயத்தில் கொலையாளி மாட்டிக் கொண்டான் என்று விலாவாரியாக இரண்டேகால் மணிநேரம் சொல்லிவிட்டு கடைசி கால் மணிநேரம் அவன் தன் தவறை உணர்ந்து திருந்துவது போல் காட்டினால் கால் மணிநேர காட்சிகள் மனதில் பதியுமா இரண்டேகால் மணிநேரக் காட்சிகள் பதியுமா?

இன்று எட்டாம் வகுப்பு மாணவன் தன் சக மாணவனை பணத்துக்காக கடத்தி கொல்கிறான் என்றால் நிச்சயம் இந்த தரம் கெட்ட சினிமாக்களின் பாதிப்புதான். குழந்தையை கவனிக்காத பெற்றோரும் முக்கிய காரணம்தான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இப்படிப்பட்ட செயல்களை அவனுக்கு கற்றுக் கொடுத்தத்து இத்தகைய சினிமாக்களே!

இவையெல்லாம் தனிப்பட்ட சம்பவங்கள் என்று ஒதுக்கி விட முடியாது. போனது ஒரு உயிர் என்றாலும் உயிர் உயிர்தானே!

சர்ட்டிஃபிக்கேட் பார்த்து சினிமாக்கு கூட்டிட்டு போகணுமா? எனக்கு தெரிந்து நம் ஊரில் U,A,U/A என மூன்று வித சான்றிதழ்கள்தான் கொடுக்கப் படுகின்றன. குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம் என்று U சான்றிதழ் பெற்ற படங்களிலும் வன்முறைக்காட்சிகளும் பாலுணர்வு காட்சிகளும் இல்லவே இல்லை என்று உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். நம் நாட்டில் தர சான்றிதழ் எல்லாம் வேலைக்காவறதில்லை :(. அங்கேயும் நம்மாளுங்க கவனிக்க வேண்டிய இடத்தில் கவனிச்சு U சான்றிதழ் வாங்கிடுவாங்கள்ல!

உலகப் படங்களோ இந்திய படங்களோ நன்மையை விட தீமையே அதிகம் உண்டாக்குகிறது.

வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வருவேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உலக திரைப்படம் நம்ம ஊருக்கு வரும்பொது கட் பண்ணி வரும்போது பார்க்க முடியவில்லை. எனக்கு தெரிந்து இன்னும் காமரசர்,வீரபாண்டியகட்டப்பொம்மன்,கப்பலோட்டியதமிழன்,ஜோரசிக்பார்க் போன்ற படங்கள் தான் போடுறாங்க.அப்படியெ பார்க்கிரென் சொல்றவங்க காதல்,மற்றும் சில காட்சி tv channel வரும்போது remote எடுக்கவில்லை என்டு சொல்லுங்க. நன்மையை விட தீமையே அதிகம் உண்டாக்குகிறது

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

இப்படித்தாங்க ஒரு திரைப்படத்துல ஒருத்தன் வேற ஒருத்தனை துடிக்க துடிக்க கழுத்தை கத்தியால் அறுத்து கொல்றான்... இப்படி ரொம்ப யாதார்த்தமாக இருக்கனும்ன்னு நிஜமாவே நடப்பது போல காட்டும் கொடூர காட்சிகள் இந்த காலத்தில் அதிகமாத்தான இருக்கு... அந்த படம் பயங்கர சூப்பர் ஹிட் படம்... நானும் ஆசையா பார்த்துட்டு தூங்க போனா தூக்கம் வரல... அந்த கொடூரம் தான் நினைவிலேயே நின்னுது...

"நல்ல விஷயம் ஒருவர் மனதில் பதிய எடுக்கும் காலம் நீண்டது... ஆனா கேட்ட செயல் வினாடியில் பதிகிறது...... " உங்களுக்கு.............???

வாங்க தேன்மொழி,வானதி - தீமை பக்கமே தான் பேசறீங்களா??? கவிசிவாவும் பிரியாவும் வேற தெம்பா கூட வலுவேற்றி விட்டு சென்றுவிட்டார்கள்...... என்ன "நன்மை" அணியினரே பதில் சொல்ல வாங்கம்மா...........

இல்லை,விரைவில தீர்ப்பை சொல்ல வேண்டி வந்துரும் போலிருக்கே!!!

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

இதென்ன கொடும சார் இதூஊஊஊ???:)
எங்கே எங்கட கட்சியெல்லாம் போய்விட்டீங்கள்? எதிர்க்கட்சியினரின் கொட்டம் தாங்க முடியவில்லையே.... சினிமா கூடாதாம் ஆனால் பார்ப்பார்களாமே... இதைப்போய் யாரிடம் சொல்வது?:) நடுவரையும் காணவில்லை.

தங்களைப் பார்த்தாலே தெரியவில்லையோ.... எத்தனை அழகெனக் கேட்கிறார்கள், தெரியாமல்தான் கேட்கிறேன், பொறாண்மைதானே?:), நீங்கள் அழகாக இருப்பதற்கும், சினிமாவால் தீமை என்கிறீங்களே:) இது நியாயமோ?:).

நடுவர் அவர்களே!!! "ஒரு பொய்யை நூறுதரம் சொல்வதனால் அது உண்மையாகிவிடாது", எத்தனைபேர் எதிரணியில் திரண்டாலும் பறவாயில்லை, கொஞ்ச நாள்தானே இருக்கு, நாங்கள் அஜஸ்பண்ணுகிறோம், நீங்க கெதியா தீர்ப்பை எமக்குச் சாதமாகச் சொல்லிப்போடுங்கோ.

நிறையப்பேச வந்தேன், மேடையில் ஏறியதும் எல்லாம் மறந்துபோச்சு, நினைவுபடுத்திக்கொண்டு மீண்டும் வருகிறேன். அதுசரி ஏன் எதிர்க்கட்சியினருக்கு கூடாத படங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியுது?, நல்ல படம் ஏதும் இவர்கள் பார்ப்பதில்லையோ?, நாங்கள் எல்லாம் அர்ஜூனன்போல, குருவியின் தலைமட்டுமே(நல்ல விஷயம் மட்டுமே) எம் கண்ணுக்குத் தெரியும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

///நிறையப்பேச வந்தேன், மேடையில் ஏறியதும் எல்லாம் மறந்துபோச்சு, நினைவுபடுத்திக்கொண்டு மீண்டும் வருகிறேன். அதுசரி ஏன் எதிர்க்கட்சியினருக்கு கூடாத படங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியுது?, நல்ல படம் ஏதும் இவர்கள் பார்ப்பதில்லையோ?, நாங்கள் எல்லாம் அர்ஜூனன்போல, குருவியின் தலைமட்டுமே(நல்ல விஷயம் மட்டுமே) எம் கண்ணுக்குத் தெரியும்.///

நல்லா சுத்துறாங்கையா ரீலை! இருந்த கொஞ்சூண்டு நன்மையையும் முதல் சுற்றுலேயே பூஸின் கிட்னியை பிழிந்து வழித்தெடுத்து சொல்லியாச்சு. இன்னும் நன்மையை மைக்ரோஸ்கேப்பின் அடியில் வைத்து தேடியும் ஒண்ணும் கிடைக்கவில்லை. மறந்து போச்சுன்னு சமாளிக்கறாங்கப்பா! எனக்கெதுக்கு ஊர் வம்பு!

அர்ஜுனன் தலை போல குருவியின்(கதைப்படி கிளி) தலை மட்டுமே(நன்மை மட்டுமே) அவங்க கண்ணுக்கு தெரியுமாம். அவங்களே சொல்லிட்டாங்க சினிமாவை குருவியாக கொண்டால் குருவியின் தலை அளவுதான் அதாவது மூன்றில் ஒருபாகம் மட்டுமே நன்மை. மீதி இரண்டு பாகமும் தீமைதான். எது அதிகம்னு நீங்களே கிட்னியை யூஸ் பண்ணி கணக்கு போடுங்கோ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவருக்கு வணக்கம். பல முறை வர நினைத்தும் வர முடியாமலே போகிறது. இன்று எப்படியும் பதிவு போட்டுவிட வேண்டும் என்று வந்துட்டேன்.

உலக திரப்படங்களால் நன்மையே'னு சொல்ல காரணம் நிறைய இருக்கு. தீமை இல்லை என்று நான் சொல்லவில்லை..... எதிர் அணியும் நன்மையே இல்லை என்று சொல்லவில்லையே.... ஆனால் எது அதிகம் என்று பார்க்கும் விதம் தான் வேறுபடுகிறது.

எத்தனை மக்களுக்கு டைனோசர் பற்றி இப்போது தெரியும்??? படம் வராமல் போயிருந்தால் இன்னுமே பலருக்கு தெரிந்திருக்காது..... இன்று கிராமத்து ஆளுக்கு கூட டைனோசர் பற்றி தெரிகிறது என்றால் ஒரு முக்கிய கரணம் படம் தான்.

டை ஹார்ட் போன்ற பல படங்கள் பார்க்கும்போது நம்மை அறியாமல் ஒரு தைரியம், நம்பிக்கை எல்லாம் வரும்.... வாழ்வில் போராடினால் வெற்றி என்று நினைக்க தோன்றும்.

தமிழ் படங்களே பருங்கள்.... எத்தனை பாடல்கள் நமக்கு ஊக்கம் அளிக்கின்றன.... ஊக்கம் அளிக்கிதுஙிறது மட்டுமே நன்மை இல்லைங்க.... எத்தனை பாடல்கள் கேக்கும்போது மனசுக்கு இதமாக இருக்கே.... அது கூட நம்ம ஆரோகியத்துக்கு அந்த பாட்டு செய்யும் நன்மை தான், அந்த இசை செய்யும் நன்மை தான். இதுவும் திரைப்படத்தில் இருந்து கிடைக்கிற நன்மை தானே.

காவல் துறை என்றாலே மோசமான எண்ணம் இருந்தது போய் இன்று ஒரு காக்க காக்க சூர்ய, வேட்டையாடு விளையாடு கமல் இது போல் மக்களும் கவல் துரையில் இருக்காங்களோ என்று மக்களை நினைக்க வைத்தது திரைப்படம் தான்.

நாட்டில் நடக்கும் பல ஊழல்கள் பற்றி விழிப்புணர்வே இல்லாமல் இருந்த மக்கள் இன்று இப்படிலாம் கூட ஊழல் நடக்கலாம் என்று உணர வைத்தது சினிமா தான்.

ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும், சொந்த பந்தஙள் எப்படி ஒற்றுமையாக வாழ வேன்டும், பாசம், காதல், கணவன் மனைவி ஒற்றுமை என்று பல விஷயங்களை சினிமா நமக்கு கற்று தருகிறது.

இது எல்லாத்தையும் விஷயத்தையும் விட்டுட்டு, இந்த நல்லதுக்கு எல்லாம் கண்ணை மூடிகிட்டு, சம சண்டை காட்சி பார்த்தேன்னு சினிமா வன்முறையை தூண்டுது, அரை குறை ஆடை கலாச்சாரத்தை கெடுக்குதுன்னுலாம் சொல்றது என்ன நியாயம்??? ரோட்டில் போகும்போது நம் கண் முன் ஒரு பெண் புடவையிலும், மற்றொரு பெண் அரைகுறை ஆடையிலும் போனால் பார்ப்பவர் கண் எல்லாம் அரைகுறை ஆடை மேல் இருக்கும்.... ஆனால் அது தப்புன்னு தெரிஞ்சி தான் பார்க்கிறாங்க, கூடவே அந்த புடவை கட்டிய பெண் போல் இருக்கனும்'னும் தோணும். அப்படி தான் சினிமா.... நல்லது கெட்டது கலந்து இருக்கும்போது எது நல்லதுன்னு பார்த்து தேர்வு செய்யனும்.

மீண்டும் வர நேரம் கிடைத்தால் இன்னும் ஒரு பதிவோடு வருகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பாஆஆஆஆஆ.........எப்படியாவது அரை சதத்துக்குள்ள பட்டிய முடிச்சி, தீர்ப்பை சொல்லிடணும்...

என்ன காமெடி குயின், அங்கே திகில் கதை படிச்சிட்டு பயந்துகிட்டே வந்து இங்கே பதிவு போட்டீங்களோ??? எனக்கு பிறகு பதிவு கொடுத்துட்டு எங்கே நடுவர காணும்ன்னு கேட்டு இருக்கீங்களே!!!

பாருங்க இந்த " எனக்கெதுக்கு ஊர் வம்பு" உங்க எதிரணிக்கு கூட ஒட்டிகிச்சு...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இன்னும் யாரெல்லாம் இப்படி சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிப்போட்டு அந்த வார்த்தையை சொல்லப்போறாங்களோ தெரியல...

(அடுத்து "ஊர் வம்பு" என்றே ஒரு இழை போட்டுடுங்க காமடிக்குயின்.இந்த நடுவரின் விருப்பம்)

சரி விஷயத்துக்கு வருவோம்... என்ன சொல்ல வரீங்க வனிதா...

தீமை அணியினரே யாரும், சினிமா பார்த்து...
நதியா பாவாடை, குஷ்புக்கு என்னம்மா???(ஓ இட்லியா), ஜோதிகா கிளிப்... சூப்பர் ஸ்டார் போட்ட சட்டைன்னு என்னவெல்லாம் விரும்பி வாங்கியிருப்பீங்க, வாங்கலியா என்ன?

ஸ்பைடர் மேன் ட்ரஸ், சூப்பர் மேன் ட்ரஸ்... என்னவெல்லாம் இருக்கு... ஹல்லோவீன் வரப்போகுதே... அப்போ எல்லோருக்குமே தெரியுமே...

~~காக்க காக்க சூர்ய, வேட்டையாடு விளையாடு கமல்~~ அவங்கல்லாம் அப்படி பட்ட சூப்பர் நடிப்புக்கு கைமேல எக்கச்சக்கமா வாங்கி இருக்காங்களேம்மா!!!...
என்ன நான் சொல்றது...

எதிரணி பதில் சொல்லிடுங்க... இன்னும் யாரெல்லாம் சொல்லனுமோ சொல்லிடுங்க... சனிக்கிழமை மாலை( பசிபிக் டைம்) தீர்ப்பு வந்துவிடும்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

என்னப்பா இது யாருமே அதுக்குபிறகு வரலியா... 'ரெ'ம்ப 'டா'ங்க்ஸ்...

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

மேலும் சில பதிவுகள்