சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்... வாங்க மூவி தியேட்டருக்கு...8

ம்ம்ம்க்ஹூம்... மைக் டெஸ்ட்....

அனைவருக்கும் வணக்கம்...

பெயருக்கேற்ற மாதிரி நல்ல நகைச்சுவையா ஒரு பட்டிமன்றத்தை நடத்தலாம்ன்னு நானும் மூளைய கொடன்ச்சி, "இன்றைக்கு மக்களை நன்றாக சிரிக்க வைக்கும் காமெடியன் யாருன்னு..." கேட்கலாம்ன்னு தான் நினைத்தேன்.......ஆனா அதுக்குள்ளே கூட்டத்துலயிருந்து பல குரல்...

ஒன்னு......." யாருமேயில்லன்னு"
அடுத்தது...." அசத்தப்போவது யாருன்னு"
அடுத்து...." கலக்கப்போவது யாருன்னு"

மூளைய கொடன்ச்சின்னு நான் சொல்றதுக்குள்ள யாரோ ஒரு குரல்
"இருந்தா தானே குடைவீங்க" இல்லாததையெல்லாம் விட்டுடுங்கன்னு, கேக்குதுங்க!!!!!!!!!

இன்னொன்னு இதோப்பார்ரா.......இதான் "காமேடியேன்னு".......

சரி ஏன் இப்படி இல்லாத ஒன்னுக்கு சண்டை போடனும்ன்னு நானே நினைச்சு அப்படியே ட்ராக்கை மாத்தி ஆன் தி ஸ்பாட் ல வேற தலைப்பை தேர்ந்தெடுத்துட்டேன்.

இன்றைக்கு நாம் எடுத்துக்கொண்டு பேச உள்ள தலைப்பு " உலக திரைப்படங்கள் மக்களிடத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மை பயக்குவையா? தீமை பயக்குவையா? "

பொதுவாக அக்காலத்தில் உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கருத்துள்ளவையாக இருந்தன.இக்காலத்தில் கதை,கருத்து...சிந்திக்க வைக்க கருத்துக்கள் உள்ளதா என்றே தெரியவில்லை... நீங்க சொன்னதான் நானும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
இந்த பட்டிமன்றத்தில் நாம் சராசரியாக ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்பு எப்படி பட்டது என விவாதித்து ஒரு தீர்வு காண்போம்.

இதில் "நன்மையே" என பேச இருக்கும் அணியினர்....

புதிய திருமதிகள்...
திரு...புலவர். அவர்கள்...
பணிபுரியும் உயர் அதிகாரிகள்...

இதில் "தீமையே" என பேச இருக்கும் அணியினர்...

இல்லத்தரசிகள்...
ஆசிரியர்கள்,பேராசிரியர்கள்...
கல்லூரி மாணவ,மாணவிகள்...

சரியோ, இரண்டு அணியிலும் அனைவரையும் அழைத்து விட்டேன்.
இதனால பட்டிமன்றத்துக்கு எல்லோரையும் நான் அழைக்கிறது பெரிய மூவி தியேட்டருக்கு... ஜாலியா பாப்கார்ன்,முறுக்கு,கூல்ட்ரிங்க்ஸ்,ஐஸ்க்ரீம் எல்லாம்(நீங்களே வாங்கிக்கோங்க!!!),இன்னும் என்னவெல்லாம் வேணுமோ சாப்பிட்டு சும்மா.............தெம்பா வந்து நாலு வரி சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டு போங்க.......

மேற்கு கோடியிலிருக்கும் எனக்கு பொழுது போகறதுக்குள்ள கிழக்கு கோடி நம் மக்களுக்கு பொழு விடிஞ்சி அடுத்த நாள் வந்துடுது..........அதனால இப்போவே போட்டுட்டேன்.

அனைவரும் வாரீர்!!! அனுமதி இலவசம்....!!!!!

திருமணத்திற்கு பின் பெண் வேலைக்கு போவது சரியா? தவறா? / நல்லதா?கெட்டதா?
வர நடுவருக்கு இந்த தலைப்பு ஓகே வாப்பா.
அன்புடன்,
சுபத்ரா.

with love

உங்கள் அன்பான விசாரிப்பிற்கு நன்றி :) ரொம்ப நாள் ஆகிடுச்சி உங்களிடம் பேசி. எப்படி இருக்கிறீர்கள்? இப்போதுதான் உங்கள் ஆட்டுக்கால் பாயா குறிப்பு படித்தேன். இது வரைக்கும் இவ்வளவு complex விஷயம் எல்லாம் நான் பண்ணதே இல்லை. ஆனால் நீங்க ரொம்ப சுலபமா செய்து இருக்கிறீங்க. இந்த பின்னோட்டத்தை நான் குறிப்பில் தான் கொடுத்து இருக்கணும். ஆனா அறுசுவை ரொம்ப slow ஆக இருக்குங்க ஆசியா. அதான் open ஆன பக்கத்துலையே கொடுத்துட்டேன் :) ஊருக்கு நவம்பர் ல தான் போறேன். நிச்சயமாக உங்களுக்கு எல்லாம் சொல்வேன். எப்போதுடா போவேன் என்று இருக்கு. வொர்க் அவ்ளோ டைட் :(

மீண்டும் பேசுவோம்.

உமா

தப்பால்லாம் நினைக்கலப்பா! சும்மா உங்களை கொஞ்சம் கலாய்ச்சேன். வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். நான் ஒரு பதிவு தான் போட்டேன். நேரமே இல்லை உமா. வொர்க் ரொம்ப பிஸி. அடுத்த பட்டி மன்றத்துல பாக்கலாம் :)

அன்புடன்
உமா

சுபத்ரா.... தலைப்பு குடுக்கவே தனி இழை இருக்கு அங்கே இந்த தலைப்பை குடுங்க. வரப்போகும் நடுவர் இதை விரும்பினா அவங்க தேர்வு செய்யட்டும். இங்கு தலைப்பு தந்தால் குழப்பிவிடும். தவராக நினைக்காதிங்க. :) உங்களை போல் இன்னும் சிலர் வந்து இங்கே தலைப்பு குடுத்துவிட்டால் பின் அந்த இழையில் ஏற்கனவே இருக்கும் தலைப்புகள் யாரும் கண்டுகொள்ளாமல் போய் விடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்கப்பா..... வாங்க இந்த பக்கம். வந்து நடுவர் பதவியை ஏத்துக்கங்க. நாட்டுக்குள்ள நிறைய பேர்பதவிக்கு சண்டை போடுறாங்க..... இங்க கூப்ட்டு கூப்ட்டு குடுத்தாலும் ஓடிடறீங்க.

யார் அது.... திருமதி ஹுசைன்'அ??? என்னங்க இம்முறை பொறுப்பு ஏற்க சம்மதமா??? :) வந்தா நாங்க ரொம்ப சந்தோஷபடுவோம். சீக்கிரம் சொல்லுங்க.

இன்னொருத்தர் யார் அது... வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கறாங்க போல.... அட நம்ம தேன்மொழி.... நீங்க ரொம்ப நல்லவர் ஆச்சே.... இம்முறை நீங்க நடுவர் பதவி ஏற்றுகொள்ள முடியுமோ??? சொல்லுங்கோ....

வேறு யாராவது முன் வரீங்களா??? சீக்கிரமா வந்து இங்க சொல்லுங்க, இல்லை என்றால் பட்டிமன்றம் சிறப்பு இழை என்று ஒன்று இருக்கே, அங்கு வந்து சொல்லுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் ராசியே!! என் ராசியே!! தெரியும் எனக்கு இந்த முறை இப்படி ஆகும்ன்னு... வெற்றி பெற்ற அணியினருக்கு எனது வாழ்த்துக்கள்.. உமா ( நடுவரே)!!! நியாயத்தை தான் சொல்லி இருக்கீங்க...இம்புட்டு தெகிரியமா தீர்ப்பு சொன்ன உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்:) உமா நல்ல தீர்ப்பு சொல்லி விட்டீர்கள். தலைப்பும் நல்ல தலைப்புதான். ஏனோ பட்டிமன்றம் இப்பெல்லாம் ஸ்லோவாக ஆகிவிட்டது.

சுபத்ரா, நீங்கள் குடுத்து இருக்கும் தலைப்பை ஒட்டி ஏற்கனவே ஒரு பட்டிமன்றம் நடந்து, இதோ இன்னும் எனக்கு தழும்பு கூட மறையலை:)

ஐந்தாவது முறை இங்கே பதிவு போட முயற்சிக்கிறேன். இந்த தடவையும் முடியலேன்னா மறுபடியும் முதல்லேருந்தா...?!

நடுவர் அவர்களே எங்க அணிக்கு சாதகமா நல்ல தீர்ப்பு சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அதிரா, வனிதா சனிப் பெயர்ச்சி எனக்குதான் நல்லா வொர்க் அவுட் ஆகுது :-)

அடுத்த நடுவர் யாருப்பா? எல்லாரும் தொடர்கதை எழுதப் போறோம்னு சொல்லிகிட்டு பட்டிமன்றத்தை அம்போன்னு விட்டுடாதீங்கப்பா!

கிரீடத்தை தங்க தட்டில் வைத்து கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டேங்கறாங்களே :-(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்பவே யோசிச்சேன்...
ஆனாலும் ரொம்ப தயக்கமாக இருக்கிறது...
மன்னிக்கவும் வனி...
இன்னும் நாலைந்து பட்டிமன்றங்களுக்கு பிறகு நடுவராகிறேன்...
நன்றி.
நான் இப்பவும் ரொம்ப நல்லவ....

என்னங்க யாரும் நடுவர் பொறுப்பு ஏத்துக்க மாட்டங்கறீங்க..... நியாயமா???!!! வனி பாவம் எத்தனை முறை கூப்பிடுறா..... ப்ளீஸ் சீக்கிரம் யாராவது வாங்க. :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி இருக்கீங்க? யாழினி சுகமா? தீபாவளிக்கு தயாராகிட்டீங்களா? உங்களுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல, ஒரு நடுவர தேர்ந்தெடுப்பது எவ்வளவு சிரமம்னு அனுபவ பூர்வமா எனக்கு தெரியும், இருந்தாலும் நான் நடுவரா இருக்கேனு என்னால பதில் சொல்ல முடியல, அதனால திங்கள் தானே பட்டிமன்றம் ஆரம்பிக்கனும்? தீபாவளி முடியட்டும் அதுவரை யாரும் வரலன்னா திங்கள் அன்று புது தலைப்போட சந்திக்கலாம்..

பின்குறிப்பு: தாமரை நடுவரா இருக்க சரி சொல்லிட்டாங்கனு நினைச்சு யாரும் வராமல் இருக்காதீங்க, யாருமே இல்லைனு தான் நான் கை கொடுக்க வந்தேன், மற்றபடி யாருக்காவது நடுவராக விருப்பம் இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்..

மேலும் சில பதிவுகள்