ஜவ்வரிசி இட்லி

image

வழங்கியவர் : Vr Scorp

தேதி : செவ்வாய், 06/10/2009 - 19:30

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • ஜவ்வரிசி (சிறியது) - அரை கப்
  • பச்சரிசி ரவை - 1 1/2 கப்
  • தயிர் - 1 1/2 கப்
  • ஊறவைத்த கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் - ஒரு கப்
  • சமையல் சோடா - கால் தேக்கரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 4
  • எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • முந்திரி - 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - கால் கப்
  • கொத்தமல்லி இலை - கால் கப்

 

  • ஜவ்வரிசி, அரிசி ரவா, உப்பு அனைத்தையும் தயிரில் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • வாணலியில் கடுகு, முந்திரி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தாளித்து ஊறவைத்த கலவையில் கொட்டவும்.
  • ஊறவைத்த கடலை பருப்பு, துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை ஊறவைத்த ஜவ்வரிசி, அரிசிரவை கலவையில் கொட்டி நன்கு கிளறவும்.
  • சமையல் சோடா சேர்த்து கலக்கி இட்லி தட்டில் இட்லியாக ஊற்றி எடுக்கவும்.
  • தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.