கோழி வறுத்தது

தேதி: October 6, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

சிக்கன் - அரை கிலோ
பூண்டு - ஒன்று முழுவதுமாக
இஞ்சி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 150 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம்
எண்ணெய் - 4 குழிக்கரண்டி
தேங்காய் - கால் கப்
கடலை மாவு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு


 

பூண்டையும், இஞ்சியையும் அரைத்து வைக்கவும். சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், தேங்காய் மற்றும் கறிவேப்பிலையை நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த விழுதில் சிக்கன், உப்பு, 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரை குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிசறி 20 நிமிடம் ஊறவைக்க வைக்கவும்.
கடலை மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்து வைக்கவும். ஊறிய சிக்கனை இந்த கலவையில் முக்கி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அரை குழிக்கரண்டி எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதில் பொரிதெடுத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi, I tried this yesterday at home.
For the rainy weather, it was so good and everyone liked it.
I dont have kadalai mavu. so left that step and proceeded. Even then the dish was great.Thanks a lot.

உன்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி. என்னுடைய குறிப்பு அனைவர்க்கும் பிடித்ததில் ரொம்ப சந்தோஷம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!