பாலக் சாதம்

வழங்கியவர் : Vr Scorp
தேதி : செவ்வாய், 06/10/2009 - 21:40
ஆயத்த நேரம் : 20 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 2
- பச்சை அரிசி - அரை கப்
- பசலை கீரை (பாலக்) - 2 கட்டு (சிறியது)
- பச்சை மிளகாய் - 3
- சின்ன வெங்காயம் - கால் கிலோ
- தக்காளி நறுக்கியது - 3
- காய்ந்த மிளகாய் - 7
- பச்சை பட்டாணி - அரை கப்
- மல்லி விதை - 2 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
- முந்திரி - ஒரு தேக்கரண்டி
- பிரிஞ்சி இலை - ஒன்று
- பட்டை - ஒன்று
- கிராம்பு - 2
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- அரிசியை வடித்து வைக்கவும். பட்டாணியை வேகவைத்து வைக்கவும்.
- சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் மற்றும் மல்லியை வறுத்தெடுக்கவும்.
- எண்ணெய் இல்லாமல் கீரையை நறுக்காமல் வதக்கவும்.
- வறுத்த மிளகாய், மல்லி விதை, முந்திரி, தேங்காய் மற்றும் கீரையை சேர்த்து அரைக்கவும்.
- மீதமுள்ள எண்ணெயில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கீரையும் சேர்த்து வதக்கவும்.
- வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறவும். சுவையான பாலக் சாதம் தயார்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
22 sec முன்பு
15 நிமிடங்கள் 1 sec முன்பு
21 நிமிடங்கள் 1 sec முன்பு
29 நிமிடங்கள் 12 sec முன்பு
39 நிமிடங்கள் 9 sec முன்பு
46 நிமிடங்கள் 14 sec முன்பு
52 நிமிடங்கள் 28 sec முன்பு
ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் முன்பு