மாங்காய் சட்னி

தேதி: October 7, 2009

பரிமாறும் அளவு: (3 - 5 ) நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முற்றிய,பெரிய மாங்காய் - 2
வினிகர் - 200 மில்லி லிட்டர்
செத்தல்(காய்ந்த)மிளகாய் - 5
இஞ்சி (1+1/2 செ.மீ) - ஒரு துண்டு
உள்ளி(பூண்டு) - 3 பற்கள்
சீனி (சர்க்கரை) - 1+1/2மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

மாங்காயின் தோலை சீவி கழுவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கிரைண்டரில் (மிக்ஸியில்) போடவும். தோலை சீவி கழுவி வெட்டிய மாங்காயுடன் வினிகரை சேர்த்து அரைக்கவும்.
அரைத்தவற்றை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்(காய்ந்த)மிளகாய், இஞ்சி, உள்ளி(பூண்டு, வினிகர் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
அரைத்தவற்றை இன்னொரு தட்டில் எடுத்து வைக்கவும். அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கி அதில் அரைத்த மாங்காய், அரைத்த மிளகாய் இஞ்சி, உள்ளி(பூண்டு)கலவை, சீனி(சர்க்கரை), உப்பு, வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சவும்.
அடுப்பில் உள்ள கலவை கொதித்து கூழ்பதமாக வரும் போது இக்கலவையை அடுப்பிலிருந்து இறக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய கலவையை ஆறவிடவும். இக்கலவையை ஓரளவு சூட்டுடன் தொற்றுநீக்கிய போத்தலில் போட்டு இறுக்கி மூடி வைக்கவும்.
சட்னி தேவைப்படும்போது ஒரு தட்டில் சோறு(சாதம்), இடியாப்பம், புட்டு இவற்றில் ஒன்றை வைத்து அதனுடன் சுவையான இச்சட்னியை வைத்து பரிமாறலாம்.


மாங்காய் சட்னி சுவையானது, செய்வதற்கு இலகுவானது தண்ணீர் கொழுப்பு மாப்பொருள் கலியம் கால்சியம், மெக்னீஷியம், வைட்டமின் C B1 A புளோரைட் ஆகிய சத்துகள் அடங்கியதும் ஆகும். இதன் சுவையை இதனை செய்து சுவைத்து அறியவும்.
கவனிக்க வேண்டிய விசயங்கள் - மாங்காய் சட்னியை போத்தலில் இருந்து எடுப்பதற்கு ஈரமற்ற சுத்தமான மரக்கரண்டி அல்லது பிளாஸ்டி கரண்டியை பாவிக்கவும். எச்சரிக்கை - அல்சர் உள்ளவர்கள், மாங்காய் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

மேலும் சில குறிப்புகள்