கேசரி போளி

தேதி: October 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - ஒரு கப்
ரவா - அரை கப்
சீனி - அரை கப்
ஏலக்காய் - 6
முந்திரி - 12
நல்லெண்ணெய் - கால் கப்
கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
டால்டா - 3 மேசைக்கரண்டி


 

ரவையை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மைதாவை சலித்து வைக்கவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
மைதா மாவுடன் உப்பு, கலர் பவுடர், ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய், கால் கப் தண்ணீர் சேர்த்து பூரிமாவை விட சற்று தளர்வாக பிசைந்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். எண்ணெய் ஊற்றி பிசைந்தால் மாவு ஒட்டாமல் வரும்.
மிக்ஸியில் முந்திரியையும், ஏலக்காயையும் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை வறுத்து விட்டு அரைத்தால் எளிதாக அரைப்படும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கொதித்ததும் தீயை குறைத்து, அதில் கேசரி பவுடர், ரவை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
திரண்டு வரும் போது டால்டா மற்றும் அரைத்த முந்திரியை போட்டு 30 நொடி கிளறி விடவும்.
அதன் பின்னர் சீனியை சேர்த்து கிளறி ஒரு நிமிடம் மூடி வைத்திருக்கவும். பிறகு திறந்து அடிப்பிடிக்காமல் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
ஆறியதும் சிறிய எலுமிச்சை பழ உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதைப் போலவே பிசைந்த மைதா மாவையும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மைதா மாவு உருண்டையை கையால் சிறிய அப்பளத்தின் அளவிற்கு வட்டமாக தட்டி அதில் கேசரி உருண்டையை நடுவில் வைத்து மூடி விட்டு உருட்டி கொள்ளவும். இதைப் போல் மற்ற உருண்டைகளையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அந்த உருண்டையை இலையில் வைத்து கையால் தட்டி கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து இலையில் தட்டி வைத்த போளியை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து விடவும்.
சுவையான கேசரி போளி ரெடி.
நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சமையலில் அனுபவம் உள்ள <b> திருமதி. காஞ்சனா </b> அவர்களின் தயாரிப்பு இது. புதுப்புது உணவு வகைகளை செய்து பார்ப்பதுதான் தனது பொழுதுபோக்கு என்று கூறும் இவர், தற்போது பழக்கத்தில் இல்லாத, காலத்தால் மறைந்து போன, பழங்கால உணவுகள் பலவற்றின் செய்முறையை அறிந்து வைத்திருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கேசரி போளி super

Jaleelakamal

பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு இது ரொம்ப பிடிக்கும்,கடலைப்பருப்பு வெல்லம் போட்ட பூரணம் வைத்து ஒரு முறை செய்தேன். சரியாக தட்ட வரவில்லை.

1) மைதா மிகவும் ரப்பர் போல் இருப்பதால் தட்ட தட்ட சுருங்கி சிறிய அளவிலே வருகிறது. இது ஏன் இப்படி என்று சொல்லுகிறீர்களா?

2) மாவு உருண்டையை விட பூரண உருண்டை குறைந்த அளவில் இருக்க வேண்டுமா? சம அளவில் இருக்க வேண்டுமா?
தட்டினால் அப்படியே அதே சைசில் இருக்க என்ன செய்ய வேண்டும்.

வேறு யாராவது தெரிந்தாலும் சொல்லுங்கள் தோழிகளே!!!

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

yes...can some one please give the exact procedure to knead the dough for making poli...just as uma said whenever i make,that part becomes difficult..and i endup throwing the dough.

please yaaraavadhu maavai chappathi pol theipadharku tips kodunga...
thx
priya.

yes...can some one please give the exact procedure to knead the dough for making poli...just as uma said whenever i make,that part becomes difficult..and i endup throwing the dough.

please yaaraavadhu maavai chappathi pol theipadharku tips kodunga...
thx
priya.

yes...can some one please give the exact procedure to knead the dough for making poli...just as uma said whenever i make,that part becomes difficult..and i endup throwing the dough.

please yaaraavadhu maavai chappathi pol theipadharku tips kodunga...
thx
priya.