ப்ளைன் சுடிதார் டாப்ஸில் டிசைனிங் செய்வது எப்படி?

தேதி: October 7, 2009

4
Average: 3.7 (6 votes)

 

ப்ளைன் சுடிதார் டாப்ஸ்
ஃபேப்பரிக் பெயிண்ட்
ஃபேப்பரிக் க்ளூ
ஸ்டோன்கள்
பெயிண்ட் பிரெஷ்
பென்சில்
பிரேம்
ப்ளக்கர்

 

சுடிதாரில் டிசைனிங் செய்ய தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் அல்லது உங்களுக்கு விருப்பமான டிசைனை ஒரு சார்ட் பேப்பரில் வரைந்து பார்த்துக் கொள்ளவும்.
சுடிதார் டாப்ஸின் இடது கைப்பக்கம், அடிப்பகுதியின் ஓரத்தில் ப்ரேமை பொருத்தி அதன் நடுவில் நீங்கள் சார்ட் பேப்பரில் வரைந்துள்ள டிசைனை பார்த்து பென்சிலால் வரைந்துக் கொள்ளவும்.
இதே டிசைனை மேலே சற்று இடைவெளி விட்டு படத்தில் உள்ளது போல் வரைந்துக் கொள்ளவும்
முதலில் பூக்களுக்கு மட்டும் சிவப்புநிற பெயிண்ட் அடிக்கவும்.
அதன் பின் இலைகளுக்கு பச்சைநிற ஃபேப்பரிக் பெயிண்ட் அடிக்கவும்.
இதுப்போல் மற்ற டிசைன்களுக்கும் உங்களுக்கு பிடித்த நிறத்தால் பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.
சுடிதார் டாப்ஸில் பூக்கள், இலைகளுக்கு கொடுத்திருக்கும் கலர்கள் எடுப்பாக தெரிவதற்கு அதன் ஓரத்தில் கறுப்புநிற பெயிண்டால் பார்டர் போன்று கொடுக்கவும்.
இதேப் போல் மூன்று பூக்களையும் பெயிண்ட் செய்து முடித்தவுடன் ஒரு நாள் முழுவதும் காயவிட்டு பிறகு அயன் செய்து வைக்கவும்.
இப்பொழுது பூக்களின் நடுவே சிவப்புநிற ஸ்டோனை ஃபேப்பரிக் க்ளு மற்றும் ப்ளக்கர் உதவியோடு ஒட்டவும்.
மாங்காய் போன்று வரைந்துள்ள டிசைனில் உள்ளே உள்ள வட்டத்தை சுற்றிலும் ஆரஞ்ச்நிற ஸ்டோனை ஒட்டவும்.
அதன் வெளிபுறத்தில் வரையப்பட்டுள்ள ஒவ்வொரு முத்துக்களின் மீது பச்சைநிற ஸ்டோனை ஒட்டவும்.
இதுப்போல் மற்ற இரண்டு பூக்களுக்கும் ஸ்டோனை ஒட்டி முடிக்கவும். ஃபேப்பரிக் பெயிண்டை கொண்டு மிகவும் எளிமையாக செய்துக் கொள்ளக்கூடிய சுடிதார் டிசைன் இது.
ஃப்ளைன் சுடிதாரில் நீங்கள் விரும்பும் டிசைனை வரைந்து விருப்பமான நிறங்களில் பெயிண்ட் செய்துக் கொள்ளலாம். அதில் பல வடிவத்திலும், நிறத்திலும் கிடைக்கும் ஸ்டோனை கொண்டு இதுப்போல் அலங்கரிக்கவும். ஃப்ளைன் சுடிதாரில் டிசைனிங் செய்முறை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. வனிதாவில்வாரணி முருகன் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனிதா, நானும் ரொம்ப நாளா உங்க கிட்டே சொல்லணும்,சொல்லனும்ன்னு எனக்கு டைமே இல்ல...
உங்க மெஹந்தி டிசைன்ஸ் கூட பார்த்தேன் ரொம்ப பொறுமையா, மிகவும் அழகாக போட்டிருக்கிறீர்கள், அப்போ என்னால சுத்தமா இந்த பக்கமே வர முடியல அதனால தான் அங்கே பதிவும் போட முடியல,உங்க குழந்தை உங்களை தொந்தரவு செய்யலைன்னு நினைக்கிறேன்.இன்னும் அது போல சிம்பிளானது பல கொடுத்து உதவுங்கள்.
சுடிதார் பெயிண்டுங்கும் சூப்பர்...ரொம்ப நல்லாயிருக்கு... கலக்குங்க.
இப்போ சென்னையில இருக்கீங்களா??? Enjoy.........

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

சகலகலாவல்லி வனிதா!! இந்தியாவுக்கு போய் ஒரே கலக்கறீங்களே.வாழ்த்துக்கள்.முதலிலேயே ஒரு பதிவு போட்டேன்.காணாம போயிருச்சு :-(

Patience is the most beautiful prayer!!

என்னத்தைச் சொல்றது!! கலக்குறீங்க வனிதா. பாராட்டுக்கள். ஒரு முடிவோடதான் சென்னை போய் இருக்கிறீங்க. :) 'மேலே வைங்க'.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

என்கிற வனி என்று சொல்வதை விட ஆல் இன் ஆல் வனி என்று அழைக்கலாம். என்ன மேடம் இந்தியா போயி ஒரே கலக்கலா இருக்கு. என்ன அங்கேயே செட்டிலா எனக்கு தான் உங்களை பார்க்க முடியாமல் போனது, ரொம்ப நல்லா இருக்கு டிசைன்ஸ் குட் மேலும் தொடரவும்.

ரொம்பவே சூப்பர் உங்களின் இந்த கைவண்ணம். எல்லாமே ரொம்ப சிம்பிளாக எல்லோரையும் செய்ய தூண்டும் வகையில் உள்ளது.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என்னவென்று சொல்வதம்மா உங்களுடைய திறமைகளை!!!
சொல்லமுடியவில்லை அம்மா வார்த்தைகளை தேடுகிறேன்!!!!

ரொம்ப அழகா இருக்கு வனிதா அக்கா உங்க டிசைன். எல்லாரும் சொல்வதை போல எப்படி இப்படி ஆல் இன் ஆலா இருக்கீங்க????? வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

கவிட்டுப்போட்டீங்க வனிதா:)
வனிதா, நான் பெயிண்ட் வாங்கி இன்னும் பற்றன் போட்டு முடிக்கவில்லை, அதுக்குள் நீங்கள் கலக்கிவிட்டீங்கள்.... நன்றாக இருக்கு. கல் வைத்தது இன்னும் அழகு சேர்க்குது.

வரவர எம் பெண்களெல்லாம்... அலங்கரிப்பதில் களம் இறங்கிவிட்டார்கள்:(, சமையல் பகுதிக்கு வருவது குறைந்துகொண்டு போகிறமாதிரித் தெரியுது:(, சமைத்து அசத்தலாம் ரெயின் இல்லையெனில் சமைக்கவும் மாட்டார்களோ:), சரி சரி கோபிக்கப்படாது யாரும்:)... நீங்கள் அலங்கரியுங்கோ.... வனிதா நீங்களும் இப்ப... கைவேலையிலேயே இறங்கியாச்சோ?, சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு??.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி. :) தாமதமா சொல்றதுக்கு மன்னிச்சுடுங்கோ.

மிக்க நன்றி உமா.... சென்னை'யில் தான் இருக்கேன். நான் ஹென்னா டிசைன் அனுப்ப காரணமே நீங்க தான்.... நான் அதை முதல் குறிப்பிலேயே சொல்லி இருந்தேன். நீங்க அனுப்பின பிறகு தான் இது போல் அறுசுவைக்கு அனுப்ப முடியும் என்றே தெரிந்து கொண்டேன். :)

மிக்க நன்றி உத்ரா.... நல்லா யோசிச்சு பாருங்கோ.... தூக்கத்தில் வேறு எங்காவது பதிவு போட்டிருக்க போறீங்க..... ;)

மிக்க நன்றி இமா.... நான் அனுப்பும் ஒவ்வொன்றிலும் உங்க பதிவை பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷம இருக்கு. //'மேலே வைங்க' - அப்படின்னா??? இதுக்கு தான் அர்த்தம் புரியல. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி விஜி.... சென்னையில் செட்டில் ஆகனும்'னு எனக்கும் ஆசை தான்... என்ன செய்ய என்னவரை மாலத்தீவுக்கு போட்டுட்டாங்க. இன்னும் சில மாதங்களில் கிளம்பிடுவேன்.

மிக்க நன்றி லாவண்யா... :)

மிக்க நன்றி சுபா.... போட்டு ஒரு படம் அனுப்பிடுங்கோ. :) வார்த்தை எல்லாம் தேட வேண்டாம். :D

மிக்க நன்றி அதிரா.... சமையல் இங்க அம்மா'து..... அதான் நம்ம நம்ம வேலையை பார்த்துகிட்டு இருக்கோம். நான் எந்த குறிப்பை பார்த்து சொல்றேனோ அதை சமைச்சு குடுத்திடறாங்க. ;) அதனால் கவலை படாதிங்க, உங்க ரெயினில் நான் எப்பவும் இருப்பேன். :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta