காலிஃப்ளவர் மிளகு பிரட்டி

தேதி: October 7, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

காலிஃப்ளவர் - ஒன்று
மிளகு - 4 தேக்கரண்டி (கொரகொரப்பாக பொடித்தது)
சீரகம் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - கால் கப்


 

காலிஃப்ளவரை கொதிக்கும் வெந்நீரில் போட்டு எடுத்து வைக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வறுபட்டதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.
பிறகு காலிஃப்ளவரை போட்டு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து வதக்கவும். காலிஃப்ளவரில் மிளகுதூள் நன்கு பிரட்டியதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்