க்ரீன் பீஸ் மசாலா

வழங்கியவர் : Seethaalakshmi
தேதி : வியாழன், 08/10/2009 - 20:14
ஆயத்த நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 பேருக்கு
- பச்சைப்பட்டாணி - 250 கிராம்
- அல்லது காய்ந்த பட்டாணி - 150 கிராம்
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2 அல்லது 3
- உருளைக்கிழங்கு - 2
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- ஏலக்காய் - 1
- கிராம்பு - 2
- இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய்த்தூள் - 1 அல்லது 1.5 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
- ரீஃபைண்ட் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்(விரும்பினால்)
- பச்சை கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
- உப்பு - சுவைக்கேற்ப
- உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கி, தனியே வைத்துக் கொள்ளவும்.
- பெரிய வெங்காயம், தக்காளியை சிறு சதுரங்களாக நறுக்கவும்.
- மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, ஏலக்காய், கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பிரஷர் பானில் ரீஃபைண்ட் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும்.
- அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றவும். இஞ்சி விழுது சேர்க்கவும். தீயை தணித்து வைத்து, கிளறி விடவும்.
- சிறிது கொதித்ததும், பட்டாணி, நறுக்கிய உருளைக்கிழங்கு, சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா எல்லாம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- குக்கரை மூடி, வெயிட் போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- குக்கர் சூடு தணிந்ததும், திறந்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றவும். வெண்ணெயை மேலே பரவலாக ஊற்றவும்(மசாலாவின் சூட்டில் வெண்ணெய் லேசாக உருக வேண்டும்). பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவி அலங்கரிக்கவும்.
Note:
காய்ந்த பட்டாணியை உபயோகிப்பதாக இருந்தால் 8 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பச்சைப்பட்டாணியாக இருந்தால் ஊற வைக்கத் தேவையில்லை. ஹோட்டலில் பட்டர் நாண் மற்றும் சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகப் பரிமாறப்படும் இதை வீட்டிலேயே குறைந்த செலவில் அதே சுவையுடன் செய்யலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
tried ur dish lastnight. it came out well.. thank u...
nanriyudan
விஜி
பின்னூட்டத்துக்கு நன்றி. கிட்டத்தட்ட ஒரு வருடமாக அங்கத்தினராக இருக்கீங்க போல, மற்ற இழைகளிலும் கலந்து கொள்ளலாமே, மருத்துவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள், உங்கள் ஆலோசனை, அனுபவம் எல்லோருக்கும் உதவியாக இருக்கும், இதர திறன்கள் - உங்கள் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்
சீதாலஷ்மி
அன்புடன்
சீதாலஷ்மி
ஹலோ,சீதாலெட்சுமி மேடம்,
நலமா?இப்ப தான் முதல் முறையாக உங்களிடம் பேசுகிறேன்......எனக்கு பெண் குழந்தை பிறந்து ஒன்னரை மாதம் தான் ஆகிறது...அருசுவையில் இனைந்த புதிதில் கருத்துக்களை பதிவு செய்தேன்...இப்ப பார்வையிட குட என்னால் முடியவில்லை.சிறிது நாள் கழித்து மீண்டும் வருவேன்
nanriyudan
சீதாலக்ஷ்மி அம்மா,
உங்க க்ரீன்பீஸ் மசாலா செய்தேன்.செய்வதற்கு ரொம்ப ஈஸியாகவும்,சுவையாகவும் இருந்தது.இது எங்க வீட்டில் அடிக்கடி செய்யும் ரெசிப்பி ஆயிடுச்சு.உங்க குறிப்புக்கு நன்றி.