செட்டிநாடு காய்கறி வறுவல்

வழங்கியவர் : Vr Scorp
தேதி : வியாழன், 08/10/2009 - 20:47
ஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 3
- காரட் - 100 கிராம்
- உருளை - 150 கிராம்
- காலிஃப்ளவர் - ஒன்று
- பச்சை மொச்சை - 200 கிராம்
- வெங்காயம் - 150 கிராம்
- தக்காளி - 150 கிராம்
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- அரைப்பதற்கு:
- காய்ந்த மிளகாய் - 4
- வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- ஏலக்காய் - 2
- பட்டை - 2
- கிராம்பு - 2
- கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். காய்கறிகளை வேகவைத்து கொள்ளவும்.
- அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக தண்ணீர் இல்லாமல் அரைத்து வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் சோம்பு போடவும். பொரிந்தவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- வாசம் போகும் வரை வதக்கி வேகவைத்துள்ள காய்கறிகளை சேர்த்து அரைத்துவைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
- மசாலா காய்கறியில் நன்கு பரவியதும் இறக்கி பரிமாறவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
7 நிமிடங்கள் 7 sec முன்பு
11 நிமிடங்கள் 30 sec முன்பு
21 நிமிடங்கள் 48 sec முன்பு
23 நிமிடங்கள் 45 sec முன்பு
39 நிமிடங்கள் 39 sec முன்பு
40 நிமிடங்கள் 15 sec முன்பு
45 நிமிடங்கள் 34 sec முன்பு
ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு