மைதா டைமண்ட் கேக்

தேதி: October 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

மைதா - ஒரு கப்
நெய் - ஒரு கப்
முந்திரி - 10
சீனி - 2 கப்
ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி


 

மைதா மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
பிறகு அதில் மைதா மாவை போட்டு 2 நிமிடம் வாசனை வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இந்த பாகில் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும்.
பாகு கம்பி பதம் வந்ததும் அதில் மைதா மாவு கலவையை கொட்டி கை விடாமல் 7 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி வறுத்த முந்திரி பருப்பை அதில் தூவி வைக்கவும்.
நெய் தடவிய தட்டில் மைதா கலவையை ஊற்றி சமமாக பரப்பி விடவும்.
கலவையை நன்கு சமமான அளவில் பரப்பி விட்டதும் சூடு தனியும் முன் கத்தி அல்லது தோசை திருப்பியால் ஸ்லைஸ் போடவும்.
சுவையான மைதா டைமண்ட் கேக் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

nalla irukku....Thanks.

உங்களுடைய குறிப்பை செய்தேன்.எல்லாம் சரியாக வந்தது,,நீங்கள் உடனே துண்டுகள் போட சொன்னீர்கள்,ஆனால் கலவை உறையவே இல்லை,நானும் அதை அப்படியே வைத்து விட்டேன்,மறுநாள் தான் உறைந்திருந்தது,துண்டுகள் போட முடிந்தது,அடுத்த முறை செய்யும் போது சீனியின் அளவை குறைத்து கொள்கிறேன்,மிகவும் ருசியாக இருந்தது,நன்றி!!!போட்டோ அனுப்பி வைக்கிறேன்.

Eat healthy