சுறா பூண்டு குழம்பு

தேதி: October 9, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சுறா - அரை கிலோ
பூண்டு - 3 முழு பூண்டு
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 3 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
வெங்காயம் - 3 கப்
தக்காளி - 3 கப்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி இலை - அரை கட்டு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு (2 முழு பூண்டு) சேர்த்து வதக்கவும்.
மீதமுள்ள பூண்டு, மிளகு மற்றும் சீரகத்தை அரைத்து வைத்து கொள்ளவும். பூண்டு சற்று வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்பு எல்லாத் தூளையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும். இப்பொழுது பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். சுறா துண்டங்களை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
சுறா வெந்ததும் புளி தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சிலர் குறிப்பு எழுதும்போது இறக்கிவைப்பதுடன் நிறுத்திவிடுவதால் அடுத்து என்ன எப்படி என்பதை சொல்வதில்லை, சில குறிப்புகள் நன்றாக புரியும்படி உள்ளது!

SPNV அவர்களுக்கு,

நீங்கள் குறிப்பிட்டுள்ள விசயம் அறுசுவையில் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. மீன்களுக்கான படங்கள் கிடைத்தவுடன் அதனை தனியொரு பக்கத்தில் வெளியிடுகின்றோம்.

தண்டாயுதபாணி சார்,

நீங்க கொடுத்துள்ள பிடித்தமான உணவுகள் பட்டியலைப் பார்க்கையிலேயே நம்ம க்ரூப் னு தெரியுது :-) சமைச்சு இறக்கி வச்ச பிறகு என்ன செய்யறதுன்னு உங்களுக்கா தெரியாது.. கிண்டல்தானே.. ;-)

உங்களுடைய சேவை மிகவும் நன்றாகவுள்ளது. ஒரு சிறிய விண்ணப்பம்.

மீன்களின் படங்களும், தமிழ் மற்றும் ஆங்கில பெயரும் ஒரு பக்கத்தில் போட்டால் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயன்படும், மீன்களை பற்றி தெரியாத எங்களுக்கு, அறுசுவை.காமில் உள்ளதுபோல் சமைக்க, மற்ற மானில (/நாட்டு) கடைகளில் மீன்களை வாங்கும்போது எங்களுக்கு பெரிய சிரமமாகவுள்ளது.

மற்றும் இந்த பகுதிக்கு புதியவர் என்பதால் எனக்கு இதை எங்கு பதிவு செய்வதென்று தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமாயின் இதனை அங்கு பதிவு செய்யவும்.

எழுத்து பிழை இருப்பின் மன்னிக்கவும்.

மிகவும் நன்றி.