ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு வால் ஹேங்கிங் செய்வது எப்படி?

தேதி: October 10, 2009

4
Average: 3.8 (6 votes)

 

ஐஸ்க்ரீம் குச்சிகள் - 40
சிறிய ஃப்ளாஸ்டிக் பூக்கள் - 18
இலைகள் - 10
சிறிய அளவிலான முத்து மணிகள் - 36
உருளைவடிவ சிவப்பு மணிகள் - 9
சம்கி
ஸ்டோன்ஸ்
பெவிக்கால்

 

வால் ஹேங்கிங் செய்வதற்கு குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் நான்கு ஐஸ்க்ரீம் குச்சிகளை சமமான இடைவெளிவிட்டு வரிசையாக வைக்கவும்.
படத்தில் உள்ளது போல் மேலும் நான்கு ஐஸ்க்ரீம் குச்சிகளை அதன் மேல் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டி காயவிடவும்.
இதுப்போல் மொத்தம் ஐந்து செட் குச்சிகளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் இரண்டு செட் ஐஸ்க்ரீம் குச்சிகளை இணைப்பதற்கு அவற்றை திருப்பி வைத்து அதில் ஒரு செட் குச்சியின் அடிப்புறத்தையும் அதன் கீழ் மற்றொரு செட் குச்சியின் மேல் புறத்தையும் சேர்த்து வைக்கவும். நடுவில் இரண்டு செட் குச்சிகளையும் இணைப்பது போல் ஒரு ஐஸ்கிரீம் குச்சியை வைத்து பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
மூன்றாவதாக ஒரு செட் ஐஸ்க்ரீம் குச்சியை அதன் கீழ் திருப்பி வைக்கவும். இப்பொழுது இரண்டாவது செட் குச்சியின் அடிப்புறத்தையும், மூன்றாவது செட் குச்சியின் மேல்புறத்தையும் இணைப்பதற்கு நடுவில் ஒரு ஐஸ்க்ரீம் குச்சியை வைத்து ஒட்டி நன்கு காயவிடவும்.
சிறிய ஃப்ளாஸ்டிக் பூவின் நடுவில் உங்களுக்கு பிடித்த நிறத்தில் உள்ள ஸ்டோனை ஒட்டிக் கொள்ளவும். ஸ்டோன் ஒட்டிய பூவை இலையில் அடிப்பகுதியில் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டவும். ஸ்டோன் ஒட்டிய பூக்கள் எட்டும், இலையில் ஒட்டிய பூக்கள் பத்து என்ற கணக்கில் இவை இரண்டையும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது வரிசையாக ஒட்டி வைத்திருக்கும் மூன்று ஐஸ்க்ரீம் செட் குச்சிகளின், முதல் செட் ஐஸ்க்ரீம் குச்சிகளின் நான்கு மூலைகளிலும் இலையுடன் கூடிய பூவை ஒட்டி அலங்கரிக்கவும்.
அதன் கீழிருக்கும் மற்ற இரண்டு செட் குச்சிகளிலும் இதேப் போல் பூவை ஒட்டி விட்டு காய விடவும்.
மீதமுள்ள இரண்டு செட் ஐஸ்க்ரீம் குச்சிகளின் நான்கு மூலைகளிலும் இலைகள் இல்லாமல் வெறும் ஸ்டோன் ஒட்டிய பூக்களை மட்டும் வைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது ஒவ்வொரு ஐஸ்க்ரீம் குச்சி செட்டின் மீதும் சம்கி மற்றும் ஸ்டோனை மாறி மாறி வைத்து ஒட்டவும்.
முன்பு ஒட்டி வைத்திருக்கும் மூன்று செட் ஐஸ்க்ரீம் குச்சிகளை திருப்பி வைத்து அதன் நடுவில் உள்ள ஐஸ்க்ரீம் செட்டின் வலது, இடது பக்கம் சம்கி மற்றும் பூக்கள் ஒட்டிய ஐஸ்க்ரீம் செட் குச்சியை வைக்கவும். பிறகு இரண்டு ஐஸ்க்ரீம் குச்சியை எடுத்து அவை இரண்டையும் இணைப்பது போல் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டி காயவிடவும்.
தேவையான அளவு உல்லன் நூலை எடுத்து அதன் அடியில் முடிச்சு போட்டுக் கொண்டு முதலில் ஒரு உருளைவடிவ சிவப்பு நிற மணியை கோர்க்கவும். அதைத் தொடர்ந்து நான்கு வெள்ளை நிற மணியை கோர்த்துக் கொள்ளவும்.
ஐஸ்க்ரீம் குச்சிகளை பின்புறமாக திருப்பி பூக்கள் ஒட்டியிருக்கும் இடத்தில் இந்த மணிகளை ஒட்டி விடவும். இதைப் போல் கீழே உள்ள ஐஸ்க்ரீம் குச்சிகளின் அடியிலும் ஒட்டி அலங்கரிக்கவும். அழகாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய ஒரு ஐஸ்க்ரீம் ஸ்டிக் வால் ஹாங்கிங் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இவ்வளவு அழகாகக் கைவேலை செய்தவர் யார் என்றே குறிப்பிடவில்லையே! அறுசுவைக் குழு தயாரிப்பா? :) வெகு அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
ஐஸ்க்ரீம் குச்சிகளை வைத்தே அறுசுவையில் எத்தனையோ கைவினைக் குறிப்புக்கள் வெளியாகிவிட்டன. எல்லாமே அழகுதான்.
இமா

‍- இமா க்றிஸ்

நன்றாக உள்ளது இதுபோல் இன்னும் இருந்தல் சொல்லவும்

குச்சி மட்டும் இருக்கு, ஐஸ் க்ரீம் எங்கே! ரொம்ப அழகா இருக்கு, அப்படியே ஒரு பார்சல் பண்ணிருந்தா நாங்க வீட்டில அழகா மாட்டி வச்சிப்போம் இல்ல. பாராட்டுக்கள்.

அன்புடன்
பவித்ரா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta