தக்காளி வெங்காய சட்னி:

வழங்கியவர் : Mrs.Mano
தேதி : Sat, 10/10/2009 - 13:06
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- சின்ன வெங்காயங்கள்- ஒரு கை
- தக்காளி[பொடியாக அரிந்தது]- 2 கப்
- உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
- வற்றல் மிளகாய்-7
- புளி- ஒரு நெல்லிக்காயளவு
- கொத்தமல்லி இலை-அரை கப்
- தேங்காய்த்துருவல்- கால் கப்
- பூண்டிதழ்கள்-5
- தேவையான உப்பு
- தேவையான நல்லெண்ணெய்
- புளியை சிறிது நீரில் ஊறவைக்கவும்.
- 4 ஸ்பூன் எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சுடவைக்கவும்.
- முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வற்றல் மிலகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
- அதே எண்ணெயில் வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை குழைவாக வதக்கவும். அனனத்துப்பொருள்களுடனும் தேங்காய், கொத்தமல்லி, உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
Thanks for uploding
RAVI
RAVI
Mr.Ravi!
Thanks a lot for the nice feedback!