சோயாமீற் & கிழங்குப்பிரட்டல்

தேதி: October 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (10 votes)

 

உருளைக்கிழங்கு - 400 கிராம்
சோயா மீற் - 100 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 4 அல்லது 5 பற்கள்
கறித்தூள் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம் சாறு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு நெட்டு
கிராம்பு, ஏலக்காய் - 3 அல்லது 4
கறுவா - ஒரு துண்டு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சோயாவுடன் நன்கு கொதித்த தண்ணீரை மூழ்கும் அளவு ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு மூடி அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் எடுத்து நீரில்லாமல் பிழிந்து பெரியதாக இருந்தால் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். சோயாவை பொரித்து எடுத்துக் கொள்ளவும். (நன்கு முறுகத் தேவையில்லை)
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து வதக்கவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் கிழங்கு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
கிழங்குடன் 300 மி.லி தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும், சோயாவையும் கொட்டிப் பிரட்டி மூடி வேக விடவும்.
கிழங்கு அவிந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்துப் பிரட்டவும்.
நன்கு பிரட்டலாக ஆனதும் இறக்கி, தேசிக்காய் சேர்த்துப் பிரட்டவும்.
சுவைமிக்க சோயாமீற் கறி தயார். இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிராக்கா...யம்மி..யம்! :) :P

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஜீனோ!!! உங்களுக்குத்தான் பெரிய பதிவு அனுப்பிப்போட்டு வாறேன்... இது உங்களுக்கும் பிடிக்குமோ? மிக்க நன்றி.

எங்கட ஜிம்மியாருக்குப் பிடிக்காது:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா அவர்களுக்கு,பார்க்கவே அசத்தலாக இருக்கு.ஆனால் நான் சோயாவை சாப்பிட்டு பார்த்ததேயில்லை.உங்கள் ரெஸிப்பியை பார்த்தவுடன் சாப்பிட தோணுது.சோயா டேஸ்ட் எப்படி இருக்கும்?ஆனால் அது உடம்பிற்க்கு மிக நன்று.ஆனால் இதுவரை சாப்பிட தோணவில்லை.இனி முயற்ச்சி செய்கிறேன்.(இந்த ரெஸிப்பிக்காகவாவது...)
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அதிரா, நல்ல ரெசிப்பி. நானும் சோயாமீட் சமைப்பதுண்டு. இங்கு வாங்குவது கஷ்டம். கனடா போகும் போது வாங்க வேண்டும்.(ஜீனோவின் பின்னூட்டமா?? சமைச்சு டோராவிடம் very nice boy என்று பெயர் வாங்க வேண்டும்)
வாணி

//எங்கட ஜிம்மியாருக்குப் பிடிக்காது:).// நிட்சயமா அதிராக்கா..உங்கட ஜிம்மி ஆர்டினரி ஜிம்மியல்லோ? பட் , ஜீனோ இஸ் எ வெரி ஸ்பெஷல் பர்சன்! :D :D
சோயா மீற் ஜீனோக்கு ரொம்ப புடிக்கும்னு சொல்ல முடியாது:)..இருந்தாலும் ஜீனோவின் மூத்த சகோதரி:) குடுத்த ரெசிப்பிக்காக ஜீனோ கமென்ட் செய்தவர்.:)

//சமைச்சு டோராவிடம் very nice boy என்று பெயர் வாங்க வேண்டும்// ஷ்யூர் வானதியக்கா. ஜீனோ வில் குக் அண்ட் செண்ட் த போட்டோ டூ! :)
//இங்கு வாங்குவது கஷ்டம்.// ??? உங்க ஊர் இண்டியன் ஸ்டோர்ல பாருங்க..ஈசியா கிடைக்கும்..நீங்க சோயா மீற் வாங்குவதற்காக வேண்டி:) கனடா போக வேண்டாம்..அப்பாம்மாவைப் பாக்க மட்டும் போய் வாங்கோ..ஓ..ஓ..ஓ!! :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அப்சரா... மிக்க நன்றி. சோயாமீற், இறைச்சியைப் போலத்தான் இருக்கும். மிக நன்றாக இருக்கும். நான் செய்துள்ளதுபோலவே உப்புப்போட்டு ஊறவிட்டு, நன்கு முறுகப் பொரித்தால், அப்படியே பொரியலாக சாப்பிடலாம்.

வாணி மிக்க நன்றி. முன்பு எமக்கும் கிடைப்பதில்லை, இப்போ சூப்பர் மார்கட்டில் இருக்கு.

///ஜீனோவின் பின்னூட்டமா?? /// ஆமாம் நம்பமுடியல்ல இல்ல?????:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

///இருந்தாலும் ஜீனோவின் மூத்த சகோதரி:) குடுத்த /// "மூத்த சகோதரி"...... இதை வைத்துத்தான்.... என் சந்தேகமே ஆரம்பமானது:), அப்பவே இறங்கிட்டேன் ஜீனோ பற்றிய ஆராய்ச்சியில்:), அதுசரி சாமமாகிவிட்டதே .... இன்னும் நித்திரை வரவில்லையோ???:):):).. அப்பாடா பத்த வச்சாச்சு:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜீனோ, நீங்கள் சொல்வது சரிதான். இங்கும் வாங்கலாம். ஆனால், எனக்கு கனடாவில் கிடைக்கும் சோயாமீட் தான் பிடிக்கும். அது ஒரு லேசான கருப்பு/brown கலரில் சுவையாக இருக்கும்.
வாணி

ஓ!! "அது"வும் மற்ற இரண்டு பேரும் இங்க இருக்கிறீங்களோ? :)

எங்கட வீட்டில சோயாமீற் எல்லாருக்கும் விருப்பம். எங்கட 'யமி'க்கும் விருப்பம்.
எனக்கும், போட்டோ எடுக்கத் தெரியும். நானும் சமைத்துப் 'பார்த்து' விட்டு போட்டோ அனுப்புவேன். :)

ஜீனோவின் மூத்த சகோதரி அவர்களே!! எனக்கு மட்டும் ம.பொ.ர சொல்லுறதெண்டு சொன்னீங்கள். இப்ப இப்பிடிக் கவிழ்த்துப் போட்டீங்களே, நியாயமா!? :)

இமா

‍- இமா க்றிஸ்

ஹை அதிரா

எப்படியிருக்கிறீங்க,நான் மற்றும் யுவனும்நலம் இன்று தான் இணையதளம் வர நேரம்கிடைத்தது, பார்த்ததுமே உங்கள்கைவண்ணம்சமையல் தான்.

பார்க்கவே நன்றாக இருக்கிறாதே சாப்பிடா சூப்பரா இருக்கும் என நினைக்கிறேன்.

எல்லா தோழியரும் நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன். நான் தற்ப்போஇது இந்தியாவில்தான் இஉர்க்கிறேன்.
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அதிரா சோயா மீற் உருளை அருமையோ அருமை உடனே செய்து பார்க்க‌ தூண்டுது

மஹா நலமா?

Jaleelakamal

எனக்கும், போட்டோ எடுக்கத் தெரியும். நானும் சமைத்துப் 'பார்த்து' விட்டு போட்டோ அனுப்புவேன். :)//// இமா படம் அனுப்புங்கோ... படம் பார்த்த பின்னர்தான் சொல்வேன், உங்களுக்கும் "போட்டோ" எடுக்கத்தெரியும் என்று:). நன்றி.

சைனா மஹா எப்படி இருக்கிறீங்கள்? எங்களை மறந்திட்டீங்கள் என நினைத்தேன். நாங்கள் யாரும் மறக்கவில்லை உங்களை. எப்போ சைனாக்கு வாறீங்கள்?. அண்ணாவின் திருமணத்துக்குப் போனனீங்கள், இப்போ அவர்களுக்கு முதலாம் அனுவசறியும் வந்துவிட்டது, நீங்கள்தான் திரும்பிவரவில்லை:(:( மிக்க நன்றி.

ஜலீலாக்கா மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சோயா மீற் & கிழங்குப் பிரட்டல் கறி சூப்பர்! கல்யாண வீட்டிலே மதிய விருந்தின் போது வைக்கப்படும் கறியின் டேஸ்ட்டில் மிக,மிக யம்மியாய்:) இருந்தது அதிராக்கா! மேலும் இந்த சுவையான குறிப்பினைத் தந்த உங்களுக்கு டோரா புஜ்ஜி, தனது பாராட்டினைத் தெரிவிக்கக் கேட்டுக்கொண்டார்:)
நன்றி உங்களுக்கு!
வா[னதி]ணியக்கா, கறியின் புகைப்படம் ஜீனோ அறுசுவைக்கு அனுப்பியிருக்கார்.. வெயிட் அண்ட் சி!! ஆன்ட்டி, நீங்கள் சமைத்துப் பார்ப்பதாகச் சொன்னீங்கள்...ஜீனோ ரசித்து,ருசித்தும் விட்டு கேமராவிலும் சுட்டு விட்டாராக்கும்! :)

ஊசிக்:) குறிப்பு:
அதிராக்கா,தேசிக்காய் "தேங்காய்" என்று ஜீனோவிண்ட கண்ணிலே பட்டுவிட்டது:( ... ஜீனோவிடம் இலங்கைக் கறித்தூளும் இல்லை..எம்.டி.ஆர். மிளகாய்த்தூள் & மல்லித்தூள் தான் உபயோகித்தவர்.. இட்ஸ் ஓகே-தானே? :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

வாவ்!!! ஜீனோவின் முதல் ரெசிப்பி.
//( ... ஜீனோவிடம் இலங்கைக் கறித்தூளும் இல்லை..எம்.டி.ஆர். மிளகாய்த்தூள் & மல்லித்தூள் தான் உபயோகித்தவர்.. இட்ஸ் ஓகே-தானே? :)//

எதை யூஸ் பண்ணினால் என்ன ஜீனோ?? அதுவா முக்கியம்? ஜீனோ சமைத்து, போட்டோவும் அனுப்பி விட்டது!!!நம்ப முடியவில்......லை........லை.

/அதிராக்கா,தேசிக்காய் "தேங்காய்" என்று ஜீனோவிண்ட கண்ணிலே
/பட்டுவிட்டது://
எதற்கும் ஒருக்கா கண்ணை செக் பண்ணுங்கோ

வாணி

இந்த குறிப்பினை பார்த்து ஜீனோ தயாரித்த சோயா மீற் & கிழங்கு பிரட்டலின் படம்

<img src="files/pictures/aa336.jpg" alt="picture" />

விரைவாகப் புகைப்படத்தை வெளியிட்ட அறுசுவை டீமிற்கு ஜீனோவின் மனமார்ந்த நன்றி!:)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

வவ்.. 'வாவ்' :)
'மீற்' அசைவம் இல்லையா!!

‍- இமா க்றிஸ்

அதிரா ரொம்ப சூப்பர் இத பார்த்ததும் மஹா பதிவிற்கு கீழ் நானும் பதில் போட்டு இருந்தேன் ஆனால் இங்கு பதிவாகல்.

ரொம்ப அருமை பார்த்ததும் சாப்பிட தோனுது .

மஹா எபப்டி இருக்கீங்க நலமா?

Jaleelakamal

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. இமா அவர்கள் தயாரித்த சோயாமீற் & கிழங்குப்பிரட்டலின் படம்

<img src="files/pictures/aa357.jpg" alt="picture" />

அதிரா,
இன்று இதுதான் செய்தேன். நன்றாக இருந்தது. கூடவே பட்டாணியும், காலிஃப்ளவரும் சேர்த்து செய்தேன். உங்களில் குறிப்புக்கு நன்றி

அன்புடன்,
இஷானி

வணக்கம்,நேசத்திர்குரிய தமிழ்
ஆதிரர் மேடம் இனனைக்கு எங்க வீட்டில் இதுதர்ன் சமையல்.ச்ச்சுப்ப்ப்ப்ப்பர்ப்.............

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

நான் தங்களின் சோயாமீற் கிழங்குப்பிரட்டல் இன்று செய்தேன் சோயா சாப்பிடாத என் கணவருக்கும் பிடித்திருந்தது. நன்றி

நிஷா

அன்பு அதிராக்கா,

இதில் கறித்தூள் சீர்ப்தா அல்லது மிளகாய்தூள் சீர்ப்பதா ? தயவு ச்ய்து சொல்லவும்.

அன்புள்ள ஆதிர,

உங்கள் முந்தய குறிப்புகளில் நீங்கள் சூர்யா கரித்தூள் பயன்படுத்தி இருந்தீர்கள். நான் நோர்வேயில் இருந்தபோது வங்கி பயன்படுத்தினேன். நன்றாக இருந்தது . இந்தியவில் கிடைக்கவில்லை. வீட்டில் தயாரிப்பது எப்படி?

அன்புடன்
பிரியா

ஸ்ரீ, கறித்தூள்தான் சேர்க்க வேண்டும்.

ப்ரியா, அதிராவின் கறித்தூள் குறிப்பு என்று காணவில்லை. இது நர்மதாவின் குறிப்பு நன்றாக இருக்கும். http://www.arusuvai.com/tamil/node/5936

‍- இமா க்றிஸ்

அருமையான குறிப்பு அதிரா . இதுவரையில் இது போன்று சமைத்ததே இல்லை. மிகவும் சுலபமான சுவையான சுருக்கமான குறிப்பு கொடுத்ததற்கு நன்றி . :)

அருமையான குறிப்பு.....

அம்மா என்பது என் முதல் கவிதை
அதுவே உலகினதும் முதல் கவிதை
எழுத்திலும் அது உயிர் _நம்
பிறப்பிலும் அவள் உயிர்.