பத்தூரா

வழங்கியவர் : ammujan24
தேதி : Sat, 10/10/2009 - 14:37
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- மைதா - இரண்டு கப்
- தயிர் - முக்கால் கப்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- மைதா, தயிர், உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து ஒரு டீஸ்பூன் எண்ணெயை மாவின் எல்லா பக்கங்களிலும் படுமாறு தேய்த்து மூன்று மணி நேரம் ஊற விடவும்.
- பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
- நன்றாக ஊறியதும் பெரிய பெரிய பதூராக்களாக இட்டு சீராக தேய்த்து எண்ணெய் சூடானதும் பொரித்தெடுக்கவும்.
- பத்தூராவை இடும் பொழுது எல்லா பாகங்களிலும் ஒரே அளவில் இட வேண்டும். இல்லையென்றால் உப்பாது.
- சுவையான பத்தூரா தயார்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஹாய் அம்முஜான் நலமா. என்க்கு ஒரு சந்தேகம். பத்தூரா என்றால் என்ன?.பதில் தருவீர்களா. நன்றி.
என் பெயர் அம்மு மது .அம்மு ஜான் இல்ல.பத்தூரா என்பது பூரி வகை.பஞ்சாபிகளின் உணவு.கண்டிப்பாக செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.இதற்க்கு பக்க உணவாக சோளே மசாலா சூப்பராக இருக்கும்.அந்த குறிப்பு பார்க்க http://ammus-recipes.blogspot.com/2009/09/blog-post_28.html இங்கே pogavum.
அன்புடன்,
அம்மு.
அன்புடன்,
அம்மு.
ஹாய் அம்மு. மன்னிக்கவும்.நான் உங்க உறுப்பினர் பக்கம் பார்க்கவில்லை. அதனால் உங்க பெயரை அப்படியே எழுதிவிட்டேன். இன்று செய்துபார்த்துவிட்டு கூறுகிறேன்.நன்றி. அன்புடன் அம்முலு
உங்க blog பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது.