கத்தரிக்காய் மசாலா கறி

தேதி: October 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய கத்தரிக்காய்கள்-6
பொடியாக அரிந்த தக்காளி-1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம்-அரை கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லி-கால் கப்
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
பூண்டிதழ்கள்-6
துருவிய இஞ்சி- அரை ஸ்பூன்
தேங்காத்துருவல்-1 கப்
சோம்பு- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய்கள்-2
மிளகாய்த்துள்-அரை ஸ்பூன்
தேவையான உப்பு


 

எண்ணெயை சூடாக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து குழைய வதக்கவும். கத்தரிக்காய்களை நீளமான சிறிய துண்டுகளாக அரிந்து சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கவும். கத்தரிக்காய்கள் பாதி வெந்ததும் தேங்காய், சோம்பு இரண்டையும் மிளகாய்த்தூளுடன் சிறிது கொரகொரப்பாக அரைத்துச் சேர்த்து கொதிக்க விடவும்.


மேலும் சில குறிப்புகள்