கோதுமை அல்வா

தேதி: October 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (8 votes)

 

சம்பா கோதுமை - கால் கிலோ
சீனி - 3/4 கிலோ
முந்திரி - 20
ஏலக்காய் - 4
பாதாம் - 10
நெய் - 200 கிராம்
கலர் பவுடர் - கால் தேக்கரண்டி


 

சம்பா கோதுமையை 5 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பாதாமை 15 நிமிடம் ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
ஊற வைத்த கோதுமையை எடுத்து தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைத்தவற்றை பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் கிரைண்டரில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும். இதை போல் கோதுமை நிறம் மாறி சக்கையாகும் வரை 2 முறை அரைத்து பால் எடுத்து ஒரு மணி நேரம் தெளிய வைக்கவும்.
ஊற வைத்து தோல் உரித்த பாதாமை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அதன் பிறகு தெளிய வைத்திருக்கும் அரைத்த பாலை எடுத்து மேலே தேங்கி இருக்கும் தண்ணீரை மட்டும் மேலாக வடித்து எடுத்து விடவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி சீனியை போட்டு கரைய விடவும். லேசான கம்பி பதத்துடன் பிசுப் பிசுவென்றும், நுரைத்து வரும் வரை கொதிக்க விடவும்.
சீனி பாகானதும் அதனுடன் அரைத்து வடிகட்டிய மாவை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அதன் பிறகு அதில் கலர் பவுடர் மற்றும் அரைத்த பாதமை போட்டு 15 நிமிடம் கிளறி விடவும்.
15 நிமிடம் கழித்து மேலே நெய் ஊற்றி 5 நிமிடம் கிளறி ஏலக்காய் பொடியை போட்டு மீண்டும் 10 நிமிடம் கிளறவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் வெளியே வந்ததும் நன்கு ஒரு முறை கிளறி விட்டு இறக்கி விடவும்.
ஒடு தட்டில் முழுவதும் நெய் தடவி அதில் அல்வாவை கொட்டி நன்கு பரப்பி விட்டு வறுத்த முந்திரியை மேலே தூவி 15 நிமிடம் ஆற விடவும். ஆறியதும் கத்தியில் நெய் தடவிக் கொண்டு துண்டுகளாக போடவும்.
சுவையான கோதுமை அல்வா ரெடி. அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி, இதனை செய்து காட்டியவர் <b> திருமதி. ராஜலெட்சுமி </b> அவர்கள். 25 வருடங்களுக்கு மேல் சமையலில் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகை சைவ உணவுகள் சமைப்பதிலும் சிறப்புத் திறன் வாய்ந்தவர்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அய்யயோ
பார்த்தவுடன் நாக்கில் நீர் ஊருகிறது.அப்படியே வழுக்கி கொண்டு உள்ளே பொய் விடும் போல உள்ளதே,இப்பொழுதே சாப்டனும் போல உள்ளது.கொஞ்சம் அனுப்பி விடுகிரீர்கள ப்ளீஸ் ;-)
Anbe Sivam

Anbe Sivam

ஹாய் ரஜலட்சுமி மேடம்,எப்படி இருக்கீங்க?இனிப்பு என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்.அதில் பிரபலமான அல்வாவை செய்துக் காட்டியுள்ளீர்கள்.பார்க்கவே பதமாக இருக்கு.இதற்க்கு கை விடாமல் பதமாக கிண்டி இறக்க வேண்டும் என்பார்கள்.இதுவரை அல்வாவை ட்ரை பண்ணியதேயில்லை.நீங்கள் செய்திருப்பதை பார்க்கும் போது செய்து பார்க்க தோணுது.மிகவும் அருமை.தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நானும் ஒரு நாளாவது அல்வா கிண்டி பார்க்கவேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு,செய்முறை ஈசியாக இருப்பதால் முயற்சி செய்து விடவேண்டியது தான்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Nice to see this Mrs rajalakshmi mam.
intha samba kothumaina, kothumaiyai oora
vachu than pannanuma? mavula pannalama?
enga kothumai kidaikathu...

Live every moment