சமைத்து அசத்தலாம் பகுதி - 21, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -20, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -21 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , beevi... (43), caroline..(42). Nithyagopal(39), Deva.(39), mdf...(37) ஐவரினதும் குறிப்புக்களைச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை நால்வரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (20/10) முடிவடையும். புதன்கிழமை(21/10), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

ஓடோடி வாங்கோ...
எல்லோரும் வாங்கோ... வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

ரேணுகா இம்முறை புஷ்வாணம்போல வந்திருக்கிறீங்கள்... அப்படியே நிறையச் செய்யவேணும். இருப்பினும் அண்ணன்மாரை இப்படி மாட்டிவிட்டுவிட்டீங்களே...:):), பயத்தில பிளேனுக்குள்ளேயே எல்லாம் பத்திடப்:) போகுது. என்னால் இரண்டு நாளாக வரமுடியவில்லை. இன்று எப்படியும் வந்திடவேணும் என வந்தேன்.

ராணி வாங்கோ மிக்க நன்றி. ஸ்பெஷல் உண்டு:).

சீதாக்கா வாங்கோ மிக்க நன்றி. சில கேக் வகைகால் முதல்தரம் சரிவராது பின்னரேதான் சரியாக வரும்.

வனிதா வாங்கோ, மிக்க நன்றி. என்ன அடிச்சால் மொட்டை வளர்த்தால் குடும்பி என்பதுபோல இருக்கே:)... இனி ஒழுங்கா வரவேணும். காதைக்கொண்டுவாங்கோ.. கொஞ்ச நாட்களுக்கு தேவாரம் திருவாசகம் படியுங்கோ:).. அதுதான் எனக்கும் நல்லது:) உங்களுக்கும் நல்லது:) குழப்பிட்டேனோ?:).

ஆசியா வாங்கோ மிக்க நன்றி.

ரேணுகா இப்படி எல்லாம் பயப்படப்படாது:) வனிதா அப்படித்தான் பயMஊருத்துவா, என்னைப்போல ஸ்ரெடியாக இருக்க வேணும்:).

ராணி மிக்க நன்றி.. தொடர்ந்து வாங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, ரேணுகா

இரண்டு நாட்களில் நான் சமைத்தது

நித்யா கோபால் குறிப்பிலிருந்து:

பொட்டுக்கடலை மாவு உருண்டை
புளி இல்லாக் குழம்பு

தேவா குறிப்பிலிருந்து

பூண்டு மிளகாய்ப் பொடி, ஹெல்தி சாலட்

mdf குறிப்பிலிருந்து

முளை கட்டிய பயறு மசியல், ரசம்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அடுத்தாத்து அம்புஜத்தைப்பார்த்தேளா?:) அவ ஆத்துக்காரருக்கு என்னவெல்லாம் சமைக்கிறா... கவனித்தனீங்களோ?:) நீங்களும் நிறையச் சமைத்துக்கொடுங்கோ.. ஓடிவாங்கோ..

சீதாக்கா மிக்க நன்றி. இன்னும் செய்யுங்கோ.

எங்கே எல்லோரும் போய்விட்டீங்கள்? தீபாவளிக்குத் தேவையானதை எல்லாம் இத்தலைப்பிலும் தெரிவுசெய்து செய்யுங்கோ... பிளீஸ்!!!!

ரேணுகா, என் கணக்கு இன்றுதான் ஆரம்பம் பீவியின் காளான் மசாலா வுடன் கணக்கை ஆரம்பிக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிராக்கா, நான் இன்று பார்த்து பார்த்து தேடி எப்படியோ சமைத்து விட்டேன். கஷ்டப்பட்டு முதன்முதலா செய்ததால பட்டம் எனக்கே கொடுத்துடனும் சரியோ...

நேற்று...
தேவாவின் : இன்ஸ்டன்ட் காரசேவு,பூண்டு மிளகாய் பொடி,பூண்டு மிளகாய் சட்னி.
இன்று...
நித்யா கோபாலின் : புளி இல்லா குழம்பு.

Renuka, dont forget to note this...

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

அதிரா & ரேணுகா தீபாவளிக்கு இனித்தான் இஸ்பெசல் உணவு
செய்ய வேண்டும். அவை யாவும் இவர்களின் குறிப்பில் இருந்துதான்
செய்யவுள்ளேன்.
இன்று நான் செய்தது தேவாவின் வாழைக்காய் பச்சடி. வித்தியாசமான
செய்முறை நன்றாக இருந்தது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நானும் ரெயின் ஏறிட்டேன்
தேவாவின் குறிப்பிலிருந்து இன்ஸ்டன்ட் காரசேவு...
மற்றும் உருளைக்கிழங்கு முறுக்கு...
மீண்டும் சந்திக்க முயற்சிக்கிறேன்...

தேவாவின் குறிப்பில் இருந்து டேட்ஸ் மில்க் ஷேக் சேர்த்துக்கொள்ளவும்.நிச்சயம் முடிந்தவரை சமைத்து சொல்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா & ரேணுகா

இதுவரை செய்தது
நித்யா கோபால்
புளி இல்லா குழம்பு

பீவி
வெண்டைக்காய் பச்சடி
கேரட் சாலட்

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

தற்பொழுது பாடசாலை விடுமுறை. அதனால் வீட்டில் நிற்பது குறைவு. சமையலும் குறைந்துவிட்டது.இருப்பினும் என்னால் முடிந்ததை சமைத்திருக்கிறேன். பீவியின் குறிப்பில் இருந்து வெண்டைக்காய் குருமா,சரவண பவன் ஹோட்டல் சாம்பார். இரண்டுமே நன்றாக இருக்கிறது. நேரமிருந்தால் மீண்டும் வருகிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

என் கணக்கில்
நித்யாகோபாலின் குறிப்பிலிருந்து முந்திரி பர்பி, குலாப் ஜாமூன்.

மேலும் சில பதிவுகள்