ஈஸி ஐஸ்கிரீம்

image

வழங்கியவர் : gandhiseetha

தேதி : திங்கள், 12/10/2009 - 13:02

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

4.42857
7 votes
Your rating: None
 

 

  • பால் - ஒரு லிட்டர்
  • சர்க்கரை - தேவைக்கேற்ப
  • கார்ன் மாவு - 2 தேக்கரண்டி
  • வெண்ணெய் - 4 தேக்கரண்டி
  • வெனிலா எசன்ஸ் - சிறிது

 

  • அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.
  • பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
  • கார்ன் மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.
  • அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.
  • பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்.
  • 1 மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) மறுபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.

Note:

நாமே வெண்ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். தயிரை பீட்டர் கொண்டு அடித்தால் வெண்ணெய் கிடைக்கும். இந்த ஐஸ்க்ரீமையே சாக்லேட்,மேங்கோ என பல வகையில் மாற்றிக் கொள்ளலாம்.







எளிய முறையில் உள்ளது நன்றாக உள்ளது பிள்ளைகளும் விரும்புவார்கள்