பாதாம் ஹல்வா

தேதி: October 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.8 (4 votes)

 

பாதாம் பருப்பு - கால் கப்
பாதாம் பவுடர் - அரை மேசைக்கரண்டி
பால் - ஒரு கப்
சீனி - அரை கப்


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பாதாம் பருப்புகளை போட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
தோல் உரித்து வைத்திருக்கும் பாதாம் பருப்பை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும். அதில் சீனியை போட்டு நன்கு கிளறி விட்டு கரைய விடவும்.
சீனி கரைந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் பாதாம் விழுதை போட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பாதாம் கலவை சற்று கெட்டியானதும் அதில் பாதாம் பவுடரை போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
பாதாம் கலவை கொதித்து கெட்டியான பதம் வரும் வரை வைத்திருக்கவும். அதன் பின்னர் 5 நிமிடம் கழித்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த பாதாம் ஹல்வாவை ஊற்றவும். பட்டர் பேப்பர் இருந்தால் அதில் இந்த பாதாம் ஹல்வாவை ஒரு கரண்டி எடுத்து வைத்து மடித்து வைத்தும் பரிமாறலாம்.
இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியவர், <b> திருமதி. கலா ரவிச்சந்திரன் </b> அவர்கள். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகையான சைவ உணவுகளையும் சுவைப்பட தயாரிக்கக் கூடியவர். திருமணத்திற்கு பின் தன்னுடைய நாத்தனாரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாதாம் ஹல்வா குறிப்பு அருமை. நிறைய சைவ குறிப்புக்கள் விரைவில் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பாதம் அல்வா குறிப்பு அருமை,பாதம் தூள் என்பதுபொடி செய்த பாதாம்மா?மஞ்சள் நிறம் எப்படி வந்தது?விளக்கவும்.நன்றி

ஃபாத்திமா ஒரு தடவை கேட்டா ஐந்து தடவை கேட்ட மாதிரியா! :-)
கேசரி பொடி என்று நினைக்கிறேன். ஒரு வேளை கஸ்டட் பௌடரா இருக்குமோ! எனக்கும் தெரிஞ்சுக்கணும். இருங்க, யாராச்சும் வந்து சொல்லுவாங்க.

‍- இமா க்றிஸ்

பாதாம் பவுடர் என்று குறிப்பிட்டு இருப்பது, கடைகளில் ரெடிமேட் ஆக கிடைக்கும் பாதாம் பவுடரைத்தான். அதாவது பாதாம் மிக்ஸ் என்று பாக்கெட்களில் அல்லது பாட்டிலில் கிடைக்கும். அதில் அரை மேசைக்கரண்டி பயன்படுத்தி இருக்கின்றார்கள். அதிலேயே கலர் சேர்க்கப்பட்டிருக்கும். தேவையெனில் மேலும் கலர் சேர்த்துக்கொள்ளலாம். கேசரிப்பவுடர் அரை மேசைக்கரண்டி பயன்படுத்த வாய்ப்பு இல்லை.

Readymade badam powder dhaan indha colour tharum. Saffron kalandhirukkum adhil. Kesari powder indha alavu pota vaayil vaika mudiyadhe.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அந்த அளவைப் பார்த்த பின்புதான் கஸ்டட் பௌடரோன்னு சந்தேகம் வந்துச்சு வனி & அட்மின். இதெல்லாம் அறுசுவை பார்த்துத்தானே வாங்குறேன். :-)

‍- இமா க்றிஸ்

Admin,thank u so much.imma iduthan first time so konjam confusion ahichi mesg pocha?pohalayanu?atan 5times pa.

வெரி சாரி... நீங்க சொல்லி இருப்பதுன்னு கவனிக்கல, வெளிய போனோம் வழியில் மொபைலில் பார்த்துட்டு பதிவிட்டேன். எல்லா கமண்ட்டும் வருசையா படிச்சனே தவிற யார் என்ன சொல்லி இருக்கீங்கன்னு கவனிக்காம பதிவிட்டேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு தெரிந்த ரெசிபிலாம் நான் அனுப்பனும் ஆனால் எப்படி அனுப்புவதுனு தெரியவில்லை.Pls help me friends.

http://www.arusuvai.com/tamil/node/14765 பாருங்க.

‍- இமா க்றிஸ்