பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

ரொம்ப நன்றி நீண்டதொரு பதிவு கொடுத்து என்னை வரலாறு இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்னு சிந்திக்க வைத்ததற்கு...

/தல அஜீத்துக்கே வரலாறு/ நல்ல நகைச்சுவை...

சந்தோஷ் அறிவாளினு சொன்னதற்கு மிக்க நன்றி, ஆனால் காமெடி டைம் இப்போ ஏன் இப்படி தூங்குதுனு உங்களுக்கு தெரியுமா? சந்தோஷ் எப்போ ஸ்கூல் போக ஆரம்பிச்சானோ இப்போ பேசுறத ரொம்ப குறைச்சுட்டான்...

பூமியோட வரலாறு தெரியனும்னா நாங்க புவியியல் படிச்சுக்குவோம்னு எதிர் அணியில் இருந்து சொல்ல ஆளில்லை.

வரலாறு ஒன்னாவது பழசா இருக்கட்டும்னு சொன்னத பத்தி ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்..திரும்ப நேரம் கிடைக்கும்போது தங்கள் கருத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

பின்குறிப்பு: நான் காணாமல் போகலப்பா, வீடு மாறலாம்னு யோசிச்சு வீடு தேடி அலைஞ்சு ஒன்னு பிடிச்சுட்டேன், அப்பாண்ட்மெண்ட் வாங்கி வீடு பார்த்தாச்சு,இனி வீடு மாறனும் இது ரகசியம் யாருக்கும் சொல்லாதீங்க, ஏதோ நீங்க காணும்னு தேடுனதால சொல்ல வந்தேன், வர்ட்டா...
அன்புடன்
தாமரை

முதல்முறை தங்களுடன் பேசுகிறேன்,மிகவும் சந்தோசம்..வரவேற்கிறேன்.. அறியாத விஷயங்கள் பற்றி அறியும்போது ஆவலாகத்தான் இருக்கும், அழகா சொல்லி இருக்கிறீர்கள்..அப்படியே இப்போது விடைபெற்று கொண்டீர்கள், ஆனால் முடியும்போது திரும்ப வந்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்..நன்றி சுபத்ரா..
அன்புடன்
தாமரை

நீங்க மட்டும்தான் நல்ல தலைப்புனு(சும்மா) சொல்லி இருக்கிறீர்கள், நன்றி..சீக்கிரம் தங்கள் கருத்துக்களுடன் வாங்க, ஆவலோடு காத்திருக்கிறேன், நீங்களாவது எதிரா வருவீங்களா?
அன்புடன்
தாமரை

நானும் உங்கள் நண்பியை போலத்தான் ....இவ்வளவு படிச்சு மனப்பாடம் செய்து எழுதினாலும் இவ்வளவு மதிப்பெண் தான் கிடைக்கிறது...கணக்கை புரிந்து கொண்டாலே அருமையாக செய்து நிறைய மதிப்பெண் பெற்று விடலாம் என்ற கணக்குத்தான்...

ஓகே...வரலாறு தேவை என்பதற்கான எனது வாதங்கள்.....

1. நமது பாரம்பரியத்தை காத்துக்கொள்ள.....

2. தவறுகள் திரும்ப நடக்காமலிருக்க....

3. இன்னும் முன்னேற இருக்கும் வழிகளை தெரிந்து கொள்ள......

4. நமது இன்றைய வாழ்விற்கு வகை செய்த நல்லோர்களையும் தீயோர்களையும் அடையாளம் காண...

இன்னும் நிறைய இருக்கிறது...யாராவது வெட்டிப் பேசினால்தான் சுவாரசியம்...
எனக்கு என்னவோ தாமரைதான் எதிர்க் கட்சியாக வேண்டியிருக்கும் எனத் தோன்றுகிறது....
மீண்டும் வருவேன்....

பட்டிமன்றம் தொடங்க சொல்லிவிட்டு இப்படி எல்லோரும் ஆதரவா பேசி கால வாரி விடுறீங்களே? வரலாறு தேவையில்லனு வாதாட பாயிண்ட்ஸ் இல்லையா? சரி யாராவது வராங்களானு பார்க்கலாம்...இதுவரைக்கும் கருத்து சொன்னவங்க எல்லோரும் வரலாறு அவசியம் தேவைனு சொல்லிறுக்கீங்க, ஆனால் ஏன் தேவை? எப்படி பயன்படுதுனு சொன்னால் தான் அழகா இருக்கும், நேரம் கிடைக்கும் போது அனைவரும் வந்து ஏன் இந்த பக்கம் வாதாடுகிறீர்கள்னு சொல்லிட்டு போங்க..மற்றபடி அதிரா, ஆசியா மேடம், கவிசிவா, உமா(இது இன்னொரு உமா), சந்தனா எங்க போனீங்க எல்லோரும்?

சரியா சொல்லியிருக்கிறீர்கள் எல்லாத்தையுமே, உங்க 4பாயிண்ட்ஸ் சூப்பர், அனைத்தும் ஏற்று கொள்ள வேண்டியதுதான்..

இதைவிட நச் பாயிண்ட் நீங்க கடைசில சொன்ன வெட்டி பேசினால்தான் சுவாரசியம், அதில் முக்கியமானது கண்டிப்பாக நான் இதில் வாதாடி இருந்தால் எதிர் அணியில் இருந்திருப்பேன், ஏனெனில் எப்போதும் எனக்கு வாதங்கள்(பல சமயம் விதண்டாவாதங்களும்) ரொம்ப பிடிக்கும்..

பின்குறிப்பு:யாரும் இல்லாத பக்கம் நான் வாதாடுவேன் என்றுதான் சொல்ல வந்தேம், இதை தீர்ப்பாக,நான் இந்த அணிக்கு ஆதரவாக என்று எடுக்க வேண்டாம்.

நடுவருக்கும் தோழிகளுக்கும் வணக்கம். தீபாவளிக்கு ரெண்டு நாள் லீவ் எடுத்துட்டு திரும்ப வந்தா இங்கே எதிரணியே இல்லாம வாதாடிக்கிட்டு இருக்கீங்களா?! வந்துட்டோம்ல! வரலாறு பாடம் தேவையில்லை என்பதே என் வாதம்.

அசோகர் மரம் நட்டார் குளம் வெட்டினார்னு எத்தனை தடவைதான் படிக்கறது. நம் நாட்டின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்தான் ஆனால் அதை பாடத்திட்டத்தில் புகுத்தி அதை கட்டாயப் படுத்தினால் வரலாற்றின் மீது வெறுப்புதான் வருகிறது. இவர் இவரை இந்த ஆண்டு இந்த நாள் சந்தித்தார் என்று தேதிகளை மனப்பாடம் செய்வதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. ஏன் அந்த சந்திப்பு நிகழ்ந்தது அதன் விளைவுகள் என்னென்ன என்பதை விளக்குவதாகவும் அந்த விளக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாகவும் இருந்தால் ஏதோ ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து தேதிகளை மனப்பாடம் செய்வதில்தான் வரலாற்றுப் பாடங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இப்படிப்பட்ட வரலாற்றுப் பாடம் தேவையில்லை என்பதே என் கருத்து.

முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப்போர்னு போருக்கு வரிசை எண்கள் கொடுத்து மூணாவது எப்போ சார் வரும்னு மாணவனை எதிர்பார்க்க வைப்பதுதான் இந்த வரலாற்றுப் பாடம்.

வரலாறு மீது எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்புன்னு கேட்கறீங்களா? பத்தாம் வகுப்பு பொது தேர்வில் எல்லா பாடத்திலும் 95 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று வரலாற்றில் மட்டும் வெறும் 80 வாங்கின வரலாற்று புலியாக்கும் நான். சுட்டுப் போட்டாலும் என்னால் இந்த வருடங்களையும் தேதிகளையும் மனப்பாடம் செய்ய முடிவதில்லை. இந்த தேதிகளை நினைவில் வைத்து என்னவாகப் போகிறதுன்னு எனக்கு அப்பவும் புரியல இப்பவும் புரியல!

பின்குறிப்பு: நான் வரலாறு தேவையில்லை என சொல்லவில்லை. ஆனால் அதைப் பாடமாக்கி மாணவர்களுக்கு அதன் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்த வேண்டாம் என்பதே என் வாதம். வரலாறு தேவை ஆனால் அதே வரலாறு ஒரு பாடாமாகவும் மாணவனின் அறிவை பரிசோதிக்கும் அளவுகோலாகவும் இருக்க வேண்டாம் என்பதே என் வாதம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னா நடுவரே!!! நீங்களே எதிரணி மாதிரி தாக்குறீங்க?
புவியியல் படிச்சி தெரிஞ்சுக்கலாம்.......இப்படி வரலாறு பாடம் பிடிக்காதுன்றதுகாக வரலாறு தேவையே இல்லைன்னு சொல்லக்கூடாது.

சரி எல்லாமிருக்கட்டும், எத்தனையோ பாடங்கள் தனித்தனியா கல்லூரியில படிக்கிற காலத்துல, வரலாறும் இருக்கு... இந்த வரலாறு ஒரு கணிதம் போல குழந்தைகளுக்கு ஆரம்பகாலத்திலேயே புரியனும்ன்னு தான் பள்ளி பருவத்திலேயே அதை பாடமா வச்சிருக்காங்க... ஏன் அங்கே உங்களுக்கு "பொருளாதாரம்", "நுண்ணறிவியல்" பாடங்கள் எல்லாம் வைக்கல...அதை படிக்க வேற காலமிருக்கு.

அடுத்து நடுவர் அவர்களே! எத்தனையோ விஷயங்கள் மக்களும் குழந்தைகளும் தெரிஞ்சுக்க வேண்டியது நூலகம்,நூல் நிலையங்களில் புத்தகமா இருக்கு... எல்லாத்தையும் எல்லோரும் வாங்கி படிக்கிறீங்களா என்னா? எவ்வளவு தான் படிச்சாலும் மிகச்சிறந்த அறிவாளிக்கூட தெரிஞ்சுக்க வேண்டிய நிறைய விஷயம் இருக்குன்னு தான் சொல்வாங்க. அதனால இந்த வரலாற்றை ஒரு பாடமா வைக்கலைன்னா மக்கள் யாரும் தேடிப்போயி இதை படிக்க வாய்ப்பே இல்லை.

இதை ஏன் படிக்கனும்ன்னு சொல்றோம்னா...

* ஆதி மனிதன் எப்படி கல்லோடு கல் உரசி தான் நெருப்பை கண்டுபிடித்தான் என யாருக்கும் தெரியாமல் போய்விடும். ஓகே எல்லாம் கேசில் தான் வரும் போலயிருக்கு என இந்த கால குழந்தைகள் நினைக்க நேரிடும்.

** ஒரு கல் உருண்டு ஓடிய பொழுது, அது எப்படி ஓடுதுன்னு அறிஞ்சு அதிலிருந்து தான் சக்கரம் கண்டு பிடிச்சான் ஆதி மனிதன்...

*** அரசர்கள் உருவாக்கிய கலை கோவில்கள் போல், இன்று செயற்கையாக செய்யப்படுபவை கலை நயத்துடன் இருக்கிறதா? அவர்கள் ஓவியம்,சிற்பம்,ஆடல்,பாடல் என எந்த கலையை கண்டறியாமல் விட்டுள்ளனர். இன்று இந்த மியுசிக்(ஒரு பாடல்) அதை உருவாக்கி அதை ஒருவர் பயன்படுத்தும் பொழுது ஒரு கலை படும் பாடு உங்களுக்கு தெரியவில்லையா????

அம்மா நடுவரம்மா,இன்னும் கணக்கிலடங்கா பயன்கள் உண்டு. வரலாறு என்பது நமக்கு அதை புரிய வைக்கிறது... இதெல்லாம் வேற எங்கே போயி படிச்சி தெரிஞ்சுப்பீங்க?

என்னால் முடிஞ்சா திரும்ப வந்து மீதி கண்டுபிடிப்புகளை பற்றியும் பயன்கள் பற்றி சொல்றேன். நான் வரலாறு பாடத்துல "சூரப்புலி"...

நான் சொல்ல வருவது " வரலாறு " என்பது ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் அமைந்து பள்ளி பருவத்திலேயே குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது தான்.
இல்லையென்றால் யாரும் தேடிப்போயி படிக்க வாய்ப்பேயில்லை...
வாய்ப்பேயில்லை...
வாய்ப்பேயில்லை......
எனக்கூறி விடை
பெறுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

//சரி எல்லாமிருக்கட்டும், எத்தனையோ பாடங்கள் தனித்தனியா கல்லூரியில படிக்கிற காலத்துல, வரலாறும் இருக்கு... //
ஆமாங்க பத்தோட பதினொண்ணாத்தான் வரலாறு பாடம் இருக்கு. இந்த பிரிவில் சேர்வது இரண்டே பிரிவு மாணவர்கள்தான். ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்ற குறிக்கோள் உடைய அதிபுத்திசாலி மாணவர்கள். இவர்கள் அவர்களின் இலக்கை அடைய ஒரு சுலபமான வழியாக மட்டுமே இப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். இவ்வகை மாணவர்கள் இப்போது மிகக் குறைவு. இப்போதைய ரேன்க் லிஸ்ட் எடுத்துப் பார்த்தாலே புரிந்து விடும்.
அடுத்தவகை மாணவர்கள் வேறு எந்த துறையிலும் இடம் கிடைக்காமல் வழியே இல்லாமல் இதில் சேர்ந்து படிப்பார்கள். காரணம் இத்துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இது நிதர்சனமான உண்மை. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நம் பாடத்திட்டத்தில் இன்னும் ஆதிகால வரலாறுகளையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சந்திர குப்த மௌலியரையும் அசோகரையும் மட்டுமே எவ்வளவு காலம் படிப்பது? இஸ்ரேல் பாலஸ்தீன வரலாறும் அங்குள்ள பிரச்சினைக்கான காரணமும் எத்தனை பேருக்கு தெரியும்? அதை விடுங்கள் அது உலக வரலாறு. நம் காஷ்மீர் பிரச்சினைக்கான அடிப்படை காரணம் எத்தனை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது அல்லது விளங்கியிருக்கிறது? இப்படிப்பட்ட சமகாலத்திற்கு உதவாத பாடத்திட்டத்தை படிப்பதில் என்ன பயன் உள்ளது?

சும்மா வெறும் காலி பெருங்காய டப்பாவை முகர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

காந்தி இர்வின் ஒப்பந்தத்தை படித்துக் கொண்டிருக்கும் மாணவனுக்கு இன்றைய அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை பற்றி எதுவுமே தெரிவதில்லை. அதற்காக நடைபெறும் சர்ச்சைகளைப் பற்றி எதுவும் புரிவதும் இல்லை. வெறும் ஆதிகால நிகழ்ச்சிகளைப் பற்றி பெருமை பேசிகொண்டு நிகழ்காலத்தை தவற விடுவதில் எந்த பயனும் இல்லை.
வரலாற்றுப்பாடம் வெறும் பழங்கதைகளாக மட்டும் இருக்கும் வரை அதனால் எந்த பயனும் இல்லை என்பதே என் வாதம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே,
ஒப்புக்கு ஒரு பாடமாக வரலாறு இருந்து வந்தாலும்,இந்த வரலாற்று பாடத்தில் பிள்ளைகள் எப்பவும் தேறிவிடுவார்கள். வரலாற்றை வரலாறு தானேன்னு ஜாலியாக படிப்பார்கள்.ஒரு நாள் படித்தால் போதும் எழுதிவிடலாம்,அப்படி ஒரு ஈஸியான பாடமும் வேண்டும் தானே.(ரிலாக்ஸ்செய்ய).எந்த ஒரு சப்ஜெக்டை எடுத்துக்கொண்டாலும்,ஒரு பாடம் ஆரம்பிக்கும் பொழுது அதைப்பற்றிய முன்னுரை இருக்கும்,அதில் பாதி அது உருவான விதம்,அதைப்புரியாமல் பின் வருவதை எப்படி விளக்க முடியும்.வரலாறு என்று ஒரு தனிப்பாடம் இருந்தாலும்,ஒவ்வொரு பாடம் படிக்கும் பொழுதும் அதன் வரலாறு தான் முதலில் வரும்,அது தெரிய வேண்டியது மிகவும் அவசியம் இல்லையா?தலை இல்லாமல் எப்படி வால்?மாணவர்களை பேட்டி கண்டு விட்டு மீண்டும் வருகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்