பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

சந்தோசம் தாங்க முடியல்ல....மீண்டும் வெற்றி....
தீர்ப்பு ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க...ஆனால் இன்னும் நிறைய தயார் செய்திருப்பீர்கள்(மனதிற்குள்ளா
வது)...உங்கள் நேரமின்மையை புரிந்து கொள்ள முடிகிறது...நேரம் கிடைக்கும்போது முடிந்தால் பதியுங்கள் ப்ளீஸ்....
சந்தோஷுக்கு என்னாயிற்று...எப்படி இருக்கிறார் இப்போது...தலைவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்....
தாமரை இந்த பட்டிமன்றத்தில் நான் மிகவும் ரசித்து கலந்து கொண்டேன்....நிறைய விஷயங்கள் கற்க உந்துதல் பெற்றுள்ளேன்...அஸ்மாவிற்கு என் நன்றிகள்.....

தேன்மொழி
ரொம்ப சந்தோசமா இருக்கீங்களா? எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே எனது தீர்ப்பின் நோக்கமும்...ஆமாங்க நிறையவே தயார் பண்ணி வச்சிருந்தேன், ஆனால் டைப் பண்ணமுடியல,எப்பவும் பேப்பர்ல எழுதிட்டுதான் டைப் பண்ணுவேன், அதுபோல இப்பவும் செய்தேன், ஆனால் அது 5பக்கம் இருந்தது, படிப்பவர்களை சங்கடபடுத்த வேண்டாம்னுதான் குறைச்சுட்டேன், நேரம் கிடைக்கும்போது இதே இழையில் தொடர்கிறேன்,நன்றி..

வனிதா
தோல்வியகூட இவ்வளவு சந்தோசமா பகிர்ந்துகொள்ளும் உங்கள் பண்பு அழகு!இது மகேசன் தீர்ப்பல்ல என்பதை தெரிஞ்சுவச்சிருக்கீங்க ஹா ஹா!!!

///நல்ல விளக்கம், நல்ல தலைப்பு, நல்ல தீர்ப்பு!!! இதை விட என்ன சொல்ல.... மொத்தத்தில் அருமை. வந்து நடுவர் பொறுப்பேற்று அதை வெற்றிகரமாக முடித்த உங்களுக்கு எனது மனமார்ந்து நன்றிகளும் கூட.///

சந்தோசத்தில் என்னால் தரையில் நடக்கமுடியல, நன்றி!நன்றி!நன்றி!

சுபா
ரொம்ப நன்றி, உண்மையில் நீங்கள் எல்லோரும்தான் எனக்கு உற்சாகத்தை தந்துள்ளீர்கள்...வெறுமனே பாராட்டவில்லை,நன்றாக படித்துதான் பாராட்டினேன் எல்லோரையும்..மிக அருமையான வாதங்கள்!

அஸ்மா
நிஜமாவே உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை,எல்லோரையும் ஒரு தரம் ஓ! என்று சிந்திக்க வைக்கும் கருத்துக்கள், சுபாக்கு சொன்னபடி நான் வெறுமனே யாரையும் பாராட்டவில்லை, நன்றாக படித்தேன்,ரசித்தேன்,கடைசியில் வந்தாலும் கலக்கீட்டீங்க, அதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும், மிகவும் நன்றி!உங்கள் ஆர்வத்திற்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள்!

ஆசியாமேடம்
மிகவும்நன்றி, எல்லா பட்டிமன்றத்திலும் உங்கள் பதிவுகள் இருக்கும், நடத்துபவருக்கு அது எவ்வளவு உற்சாகம் அளிக்கும் என்று உணர்ந்துள்ளேன், தங்கள் பதிவு, பாராட்டு அனைத்திற்கும் மிகவும் நன்றி மேடம்...

வானதி
ஆஹா அதட்டலா வந்தீங்க, இப்போ அருமைனு பாராட்டிறீங்க, நீங்க டீச்சர் இல்லையே? ரொம்ப நன்றிங்க, உங்கள் பதிவுகளுக்கும் பாராட்டும் எனக்கு ஸ்வீட் சாப்பிட்ட ஃபீல்...

உமா
முதல்ல வந்துட்டு இப்போதான் வறீங்க, அதனால உங்களுக்கு நன்றி மட்டும்தான், ஆனால் பதிவு எழுதி ஆரம்பத்தில் உற்சாகபடுத்தியதற்கு நன்றிகள்...

அன்புள்ள நடுவர் மற்றும் இரு அணித்தோழியர் அனைவருக்கும் வணக்கம். நல்ல விளக்கத்துடன் தீர்ப்பு அளீத்தீர்கள் தாமரை. வாழ்த்துக்கள். மகனின் உடல்னிலை சரியில்லா நேரத்தில் கூட கிடைத்த நேரத்தில் தீர்ப்பு அளித்த தங்களுக்கு நன்றி. இப்போது சந்தோஷ் நலமா? ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீர்கள்...பார்த்துக் கொள்ளுக்கொள்ளுங்கள்ப்பா...

ஏட்டுச் சுரைக்காயாய் மட்டும் தான் நாம் வரலாறு படித்தோமா, இந்தியாவைத் தேடி சென்ற கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து இது இந்தியா என்று சந்தோசத்தில் கூவி இருப்பாரே..."அவருடைய காலத்தில் எந்த அளவு இந்தியாவைப் பற்றி செய்திகள் உலகுக்கு சென்று இருக்கிறது!"...இன்று நம்மில் வெளி நாட்டுப் புகழையே பாடுவர்கள் அதிகமோ என்று எனக்குள் தோன்றியது...(தொழில் நிமித்தம் வெளி நாடு செல்வது, திரை கடல் ஓடியும் திரவியம் தேடுவது காலம் காலமாக இருந்துள்ளது.. இருந்தாலும் நம் தாய் நாட்டின் பெருமையை உணராமல், பேசுவோரைக் காணும் போதும், நம் வரலாற்றுச் சின்னங்களைப் போக்கிஷமாகப் பாதுகாக்கத்தெரியாமல் அசுத்தப் படுத்துவதும் எதனால்? ) இவ்வாறாக யோசிக்கையில் தான் இந்த கேள்வி மனதில் ஓடிக் கொண்டு இருந்தது..

அறுசுவை கொடுத்த இடத்தில்
அழகான விவாதங்களில்
நடுவர் அவர்களின் தீர்ர்ப்பில் விடைக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி... எம் அணித்தோழியரின் வாதங்களுக்குள் புதைந்த்து கிடக்கும் கோரிக்கைகளும் வெகு விரைவில் நிகழவேண்டும்..
-----------
//கட்சிகளிடையே சண்டை என்பதால் தேர்தலே வேண்டாம் என்று சொல்வது போல.. //என்று அன்புத்தோழி கூறீருந்தார்.. நான் குறிப்பிட விரும்பியது மனிதன் போரிடுவது.(கற்காலம் முதல் இன்று வரை(கற்காலம் கூட பரவாயில்லை.. இப்போது நாகரீகம் எந்த அளவு வளர்ந்துள்ளது..)). இன்னொரு இனம் என்று அவனே வகுத்துக் கொண்டு காலம் காலமாய் தொடுக்கும் போரைக் குறிப்பிட்டேன்.. இதைத் தான் வேண்டாம் (அதாவது மூன்றாம் உலகப் போர்=பல்வேறு இனங்களுக்குள் நிகழும் சண்டை மற்றும் விளையும் தீவிரவாதம் என்று கூட எடுத்துக் கொள்ளலாமே...).. கண்டிப்பாக தேர்தலும் கட்சிகளின் சண்டையும் இதற்கு உதாரணமாக முடியாது என்பது என் தாழ்மையான கருத்து... சங்ககாலத்தில் ஔவை நடக்க இருக்கும் போரைத் தடுத்தார்.. போரில் தான் வென்றாலும் கூட போர்க்களத்தைக் கண்ட பின் அசோகர் போரையே வெறுத்தார்...என்றும் படித்து இருக்கிறோம். வரலாறு, ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றிய, வாழ்க்கை முறை பற்றிய பதிவு..

என் பதிவுகளில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும் அன்புத் தோழிகளே...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

தாமரை.. நினைச்சது சரியாயிடுச்சே.. ம்ம்.. இப்ப உங்களுக்கு நிறைய நல்ல பாயிண்ட்ஸ் எதிரணிக்காரங்க கொடுத்திட்டு போயிருக்காங்க.. நல்ல தெகிரியமா எதிர்த்து வாதாடுங்க.. (பதிலுக்கு போட்டி கொடுக்க எங்க அணி பாயிண்ட்ஸ் ஐ எல்லாம் ஒன்னு திரட்டி ஏற்க்கனவே உங்க வீட்டுக்கு மெயில் பண்ணிட்டோம் :) ). தீர்ப்பை முடிவு பண்ணினது யாரு? சந்தோஷோ? :)) குட்டி பயல் இப்போ எப்படி இருக்கான்? தீர்ப்பு எளிமை மற்றும் அருமை.. தாமதத்திற்கு வருந்துகிறேன்..

எதிரணியினர் சொல்லியிருந்த விஷயங்களை இப்போ மறுபடியும் வரலாறு புத்தகம் எடுத்துப் படித்தால் நானும் அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.. கவனிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டிய விஷயங்கள்..

அஸ்மா.. எதிர்பார்க்காத நேரத்துல வந்து கணைகளை ஏவி போட்டீங்க.. எப்படியோ அணிக்காரங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து சமாளிச்சிட்டோம்.. கடைசி நாள் வர முடியலையேன்னு நினைச்சப்ப, தேனும், சுபத்ராவும் வந்துட்டாங்க.. உங்களோட அதே போராட்டம் தான் எனக்கும்.. கருத்துக்கள் மனசுக்குள்ள ஓடிகிட்டு இருந்ததால ஒரு நாள் பொறுக்க முடியாம போட்டுட்டேன்.. கண்ணெல்லாம் மேல படாத தூரத்துல இருக்கேன்.. :))

பாப்ஸ் நன்றி.. எங்க இந்த முறை வந்தவுடனே ஓடிட்டீங்க.. உங்க பட்டிமன்றத்தின் போதும் அதே நிலைமை தான்.. கருத்துக்கள் மனசுக்குள் ஓடிட்டு இருந்தன.. முதல்ல நன்மைன்னு நினைச்சு பிறகு தீமைன்னு மாறி - எந்த அணினே முடிவு பண்ண முடியலை. அதான் அமைதியா எல்லாரும் சொல்லறதை படிச்சுகிட்டு விட்டுட்டேன்..

ஆயிஸ்ரீ.. உங்களோட கருத்துக்களை எங்களோட ஒரு நண்பரும் சொன்னார் - இப்போ மாலை என்பதற்காக காலை ஒன்று இருந்ததை மறுக்க முடியாதே என்று.. அன்றைய காலத்தில் இந்தியா நல்ல செழிப்பான நாடு என்று.. அப்போ நல்ல இயற்க்கை வளங்களுடன் இருந்திருக்க வேண்டும்.. அதனால் தான் ஆதி கால மக்கள் அங்கு நோக்கி நகர்ந்து செட்டில் ஆகியிருக்க வேண்டும்..

வனிதா கவிசிவா.. இம்முறை கவுத்துப் போட்டாங்க கூவலை மிஸ் பண்ணுகிறேன் (அட நெசமாதான்ப்பா :) )

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்