பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

ஆசியா மேடம், வனிதா, கவிசிவா, சுபத்ரா, தேன்மொழி அனைவரும் மன்னிக்கவும், மீண்டும் விரைவில் சந்திப்போம், தங்கள் பதிவுகளுக்கு மிகவும் நன்றி..பின்னூட்டம் அளிக்க நேரம் கிடைக்கும் போது ஓடு வருகிறேன்.. நன்றி எல்லொருக்கும்...

தாமரை.. ஜஸ்ட் க்யூரியஸ்.. உங்க வீட்டு வாதத்துல நீங்க எந்த அணி உங்க கணவர் எந்த அணின்னு சொல்ல முடியுமா?? :)) வித்தியாசமான தலைப்புபா இது.. வாழ்த்துக்கள்.. !!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நடுவரே, இது நல்ல கதையா இருக்கே!! புள்ளைங்க கையிலருந்து வரலாறு புஸ்தகத்தை பறிக்க சொல்றாங்களே, இது நியாயமா? அறிவியல், கணக்குன்னு மண்டை காய்ந்து இருக்கும் வேளையில் இன்ட்ரஸ்ட்டா இருக்கும் ஒரே சப்ஜக்ட் வரலாறுதான். ஏற்கனவே இப்ப உயர் கல்வியில் வரலாறுக்கு முக்கியத்துவம் இல்லை. சின்ன க்ளாஸில்தான் வரலாற்றை படிக்கறாங்க. அதுவும் கூடாதுன்னு சொல்றாங்களே இந்த எதிரணியினர்.

வரலாறுன்னு ஒரு பாடம் இருப்பதால்தான் நாடு விட்டு நாடு வந்தும் இந்திய வாரலாற்றை பற்றி என் பிள்ளைகள் சிறிதாவது படிக்கிறார்கள். எதிரணியினர் சொல்லலாம், ஏன் நீங்களே சொல்லி குடுக்கலாமே என்று. நடுவரே உங்களுக்கே தெரியும் நாம் சொல்லி குடுப்பதற்கும், பள்ளியில் படிப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு. அப்படியே நான் சொல்லி குடுக்க நினைத்தாலும், அது பள்ளியில் நான் வரலாறு படித்ததால் எனக்கு கிடைத்த பேஸிக் அறிவை வைத்தே முடியும்.

காந்தியை யார் பின்பற்றுகிறார்கள், காமராஜரை யாருக்குத் தெரியும் என்றெல்லாம் எதிரணியினர் கேட்கிறார்கள். அதை படிப்பதால்தான் கொஞ்சம் பேராவது அவர்களைப் பற்றி தெரிந்து அவர்களை பின்பற்றுகிறார்கள். அந்த பாடமே சுத்தமாக இல்லாது போனால் பிறகு இன்னும் நிறைய பேருக்கு அவர்களைப் பற்றி தெரியாதே.

வரலாற்றில் சிலவற்றை உண்மையாக விளக்கவில்லை என்பதால் அதில் நடந்திருக்கும் பல உண்மைகளுமா வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கப் பட வேண்டும்?

இராமாயணம், மகாபாரதம் பற்றியெல்லாம் நிறைய சீரியல்கள், படங்கள் உண்டு. ஆனால் வரலாறு என்பதே ஒரு மாபெரும் காவியம் போன்றது. எல்லாவற்றையும் திரைப்படங்களாக எடுக்க முடியாது. பலவற்றை படித்தே அறிய முடியும். பள்ளியில் பாடமாக வைத்தால்தான் அது சாத்தியமாகும்.

ஆகவே நடுவர் அவர்களே வரலாறு பாடம் தேவை என்று கூறி, தீர்ப்பு எங்களுக்கு எதிராக வருமேயானால் கண்ணகி சிலையருகில் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரித்து விடை பெறுகிறேன்:) வணக்கம்.

தேன்மொழி நான் வரலாறு பழைய கதையை சொல்கிறது என்பதற்காக சொன்னேன்.... அப்படியே எடுத்துக்காதிங்க. ;)

ஆசியா... நான் கவுக்கவே இல்லை.... நான் வரலாறு வேண்டாம் என்று சொல்லவில்லையே.... வரலாறு பாடமாக இருப்பதில் பயனில்லை என்றே சொல்கிறேன். சொல்லி தர வேண்டியதை நம்ம வரலாறு பாடம் சொல்வதில்லை என்றே சொல்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே... உங்க கிட்ட ஒரு சிச்சுவேஷன் சொல்லறேன்.. சந்தோஷ் இங்க எங்கயாச்சும் கென்னடி சிலையை காமிச்சு இது யாருன்னு கேட்கறான்னு வச்சுக்குவோம்.. நீங்க என்ன சொல்லுவீங்க - அவர் முன்னாள் ஜனாதிபதி அப்படின்னும், வேறஎதாவது நல்லது தெரிஞ்சிருந்தா அதைப் பத்தியும் தான? இல்லை மர்லின் மன்றோ பின்னாடி சுத்திட்டு இருந்தாருன்னு அதையும் சேர்த்து சொல்லுவீங்களா? மாட்டீங்க தானே? அப்ப நீங்களும் முழுசும் சொல்லப்போறதில்லை தானே.. அப்ப நீங்க சொன்ன கொஞ்சமும் பொய்யாகிடுமா? உங்க நிலமையில தான் வரலாறு புத்தகத்தில் பாடத்தை எழுதிய ஆசிரியரும் இருப்பார்.. பல பல விஷயங்களை ஒருவரை பற்றி தெரிந்து வைத்திருதாலும், எல்லாத்தையும் பில்டர் பண்ணி சேர வேண்டியது மட்டும் கொடுப்பார்.. ரொம்பவே ஆச்சரியமா இருக்கு எனக்கு எதிரணியோட வாதங்கள்.. ஏங்க, வரலாறு பள்ளிகூடத்துல படிக்கறது அஞ்சுல இருந்து பதினஞ்சு வயசு வரைக்குந்தான்.. அப்ப அந்த குழந்தைப் பருவத்துல இருக்கற மெசூரிடிக்கு ஏத்த மாதிரி தானே பாடங்களும் இருக்கும்? கான்றவர்சியான சில விஷயங்களை தவிர்த்து விட்டு அக்கால மனிதர்களைப் பற்றின சில நல்ல விஷயங்களை சொல்லி அவர்களை அவங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்.. இது ஆரம்பம் தான்.. இது மட்டுந்தான் உண்மை என்று யாரும் சொல்லவில்லையே.. அதற்கப்புறம் வளர்ந்து விருப்பமிருந்தால் அவர்களை பற்றி மேற்க்கொண்டு ஆராய்வதற்கான விதை தான் அது..

பாகிஸ்தான் இந்தியாவுடன் தான் ஒருகாலத்திலே இருந்தது.. சுதந்திரத்துக்கு அப்புறம் பிரிக்கப்பட்டது என்று சொல்லித் தந்தால் தான் வாழ்விலே பிறகு சந்திக்கும் பாகிஸ்தானி ஒருவரை பங்காளி என்ற ரீதியில் பார்க்க முடியும்.. கார்கில் போரை பற்றியெல்லாம் எடுத்தவுடனே குழந்தைப் பருவத்திலே சொன்னால் அவரை இன்று எதிரியை போன்று தான் பார்க்க முடியும்!!!

பாட்டி வடை சுட்டா, சின்ட்ரெல்லா செருப்பை விட்டா என்றெல்லாம் கற்பனை கதைகளை சொல்லறீங்க.. அசோகர் மரம் நட்டார் காந்தி வயலேன்சை விட்டார் என்று உண்மையான கதை ஒன்றை பிள்ளைகளுக்கு சொன்னால் தவறா? நல்ல விஷயந்தானே அது? பள்ளியிலே கற்காமல் இதை அப்பா அம்மாவிடம் இருந்தா கற்றீங்கள்? எந்த அப்பா அம்மா இந்த கதைகளையெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லுவார்கள்?

அப்புறம் history யுடன் வரும் சிவிக்ஸ் என்ற பாடத்தையே அப்புறப்படுத்தி விட்டு பேசுறீங்கள் எல்லாரும்.. அதிலே நமக்கான உரிமைகள் கடமைகள் என பல உபயோகமான விஷயங்களை படித்தோம்... அதெல்லாம் மறந்துட்டீங்களே!

சரி, அப்டேட்டடா இல்லை என்று சொன்னால் பாட முறையில் மாற்றம் வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. அதற்காக பாடமே வேண்டாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
ஆயிஸ்ரீ தஞ்சை மன்னரை பற்றி சொல்ல வில்லை என்றார்.. எனக்கு ஞாபகம் இருக்கிறது - ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லாரையும் பற்றி படித்தோம்.. இவர்களையெல்லாம் பற்றி அப்போதே தெரிந்ததால் தான் இன்று பொன்னியின் செல்வனை என்னால் ரசிக்க முடிந்தது.. எனக்கு தெரிந்து - பாடம் ரீஜினல், நேஷனல், மற்றும் இன்டர் நேஷனல் என்று இருந்தது, மேலும் கற்க்காலத்திலிருந்து சம காலம் (ஓரளவுக்கு) வரையும் இருந்தது.. ஹிரோஷிமா நாகசாகி பற்றி படித்து மனதுக்கு ரொம்ப கஷ்டமாகத் தான் இருந்தது.. அணுஆயுதங்கள், போர் பற்றிய வெறுப்பு தான் ஏற்ப்பட்டது.. நடுவரோட தோழிக்கும் அப்படி இருந்தது ன்னு தான் சொல்லறாங்க..

அப்புறம் மனப்பாடம் செய்வது.. துரதிர்ஷ்ட வசமாக நமது தேர்வு முறை அப்படி அமைந்து விட்டது.. அதற்க்கு வரலாறு என்ன செய்யும்?? அப்படிப் பார்த்தால் எனக்கு 5H2O + 5SO2 = 55 H2SO4 (தப்பு தாங்க) எல்லாம் கஷ்டமாக தான் இருந்தது.. (a+d+f) ஹோல் க்யூப் என்ன என்ற பார்முலா கூட கஷ்டமாக தான் இருந்தது.. இம்புட்டு ஏன், அந்த பாட்டனி சப்ஜக்ட் பத்தி நினைச்சுப் பாருங்க - புல்லு பூடு முதற்கொண்டு செடி குடும்பங்களோட எல்லா அமைப்புகளும் மனனம் பண்ண வேண்டிய நிலைமை.. அப்ப, இந்த பாடங்கள் கூட வேண்டாம் என்று சொல்லலாமே..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அப்புறம் இந்த யூசுக்கு வருவோம்.. இப்ப மேல சொன்ன ஏதாவது பாட்டனி, மாத்ஸ், கெமிஸ்ட்ரி உங்களுக்கு யூஸ் ஆகுதா? பிசிக்ஸ் ல படிச்ச காஸ் லா யூஸ் ஆகுதா? கம்பனும் ஷேக்ஸ்பியரும் என்ன யூஸ் ஆனார்கள்? அப்படிஎன்றால் இந்த பாடம் கூட வேண்டாமே.. ஏன், பள்ளிக்கூடமே வேண்டாமே... ஏங்க பாட முறையில தப்பு இருந்தா பாடம் என்ன தவறு செய்தது? என்னைக் கேட்டால் ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் அறிமுகம் செய்து வைத்து விட்டு அதிலே பிள்ளைகளின் கிரியேட்டிவிட்டி, ஆய்வு மனப்பான்மை, செயல் முறை இதெல்லாத்தையும் ஊக்குவிக்கும் விதமாக கல்வி இருக்கணும்.. நடைமுறை வாழ்க்கையில வர விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கத்துக் கொடுக்கணும்.. அப்படி இல்லை நம்ம ஊர்ல.. அதுக்கு வரலாறு என்ன பாவம் செய்தது? இதையே அசோகர் மன்னரை பற்றிய ஒரு பாடத்துடன், அவரின் உருவப் படத்துடன் காமித்து அவர் நட்டது போல நாமும் சில மரங்களை நடலாம் என்று சிறு பிள்ளைகளை மரம் வளர்க்க வைத்தால் - செயல் முறையுடன் வரலாற்றையும் இணைத்த கல்வி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.. பிள்ளைகள் மனதில் நல்ல விஷயங்களும் பதியும்.. பெரிய பிள்ளைகள் என்றால் மரங்கள் என்னென்ன நன்மை செய்யும் என்று அறிவியல் பூர்வமாக விளக்கி விட்டு அக்காலத்திலே மக்களின் நன்மைக்காக அசோகர் நட்டிருக்கிறார், நாமும் செய்ய வேண்டும் என்று சொல்லித் தரனும்.. அப்படி இன்டக்ரேட்டட் ஆக இல்லை என்பது வரலாற்றின் தவறா?

பள்ளியிலே ராஜ ராஜன் பற்றிய வரலாற்று அறிமுகம் இருந்ததால் தான் கல்கியால் அந்த நாவல்களை எழுத முடிந்தது.. சுதந்திர போராட்டத்தை பற்றி அறிமுகம் இருந்ததால் தான் கமலால் மருதநாயகம் பற்றி, அமீர்கானால் லகான் மற்றும் மங்கள் பாண்டே பற்றி யோசிக்க முடிந்தது.. வரலாறு காசு கொடுக்கும், சோறும் போடும் - அதை அறிமுகப்படுத்தி வைத்தல் மட்டுமே பள்ளியின் கடமை.. கூட கடைசி வரைக்கு வருவதற்கு அல்ல.. மொழி உட்பட பள்ளியிலே வரும் எல்லாப் பாடங்களும் அது போன்றவை தான்.. ஆக்கத்திற்கு தேவைப்பட்டால் அதனை பற்றிய முழுமையான அறிவினை விருப்பமுள்ளவர்கள் தேடி தெரிந்து கொள்வார்கள்..

அப்புறம் காந்திய வழியிலே யாரும் நடக்கவில்லை என்று ஒரு பேச்சு.. காந்தியை பற்றியும் கான்றவர்சி உண்டு.. ஆனால், நல்ல விதமாக காந்தியை பற்றி படித்ததால் தான் ஆப்ரிக்காவில் நெல்சன் மண்டேலாவால் மேலும் இங்கு மார்டின் லூதர் கிங்கால் அஹிம்சை வழியிலே யோசிக்க முடிந்தது.. நானும் நீங்களும் நடக்கவில்லை என்பதால் ஒன்றும் குறைந்து விடவில்லை.. செல்ல வேண்டும் என்ற விருப்பமுடையவர்கள் செல்வார்கள்.. அவர்கள் அந்த வழியிலே சென்றதால் தான் ஒரு நாட்டின் சுதந்திர போராட்டத்தையும், இன்னொரு நாட்டிலே சிவில் ரைட்ஸ் க்கான போராட்டத்தையும் அஹிம்சை வழியிலே நடத்திட முடிந்தது.. இந்த இரு சம்பவங்களுடைய விளைவுகள் நாம் நினைப்பதை விட மிகவும் அதிகமானவை.. உங்களுக்கு வேண்டுமானால் இல்லாமல் போகலாம் - வரலாற்று மனிதர்கள் நிறைய பேருக்கு இன்ஸ்பிரேஷன்.. எங்க நண்பர் ஒருவர் எழுதி வைத்திருப்பார் - victory பத்தி (வின்ஸ்டன் சர்ச்சில் வார்த்தைகள் என்று நினைக்கிறேன்). எல்லாம் பள்ளி கால வரலாற்று அறிமுகந்தாங்க..

நீங்க தானே சொன்னீங்க - இங்க இருக்கும் தம்பதிகள் கிட்ட இருக்கிற அன்பை பாருங்க, அவங்க திருமண முறைகளை மட்டும் பாக்காதீங்க.. கந்தசாமி ல டைரக்ஷனை பாருங்க, ஸ்ரேயாவை பத்தி குறை நினைக்காதீங்க ன்னு.. வரலாறும் அப்படித்தான் - அந்த மனிதர்கள் அந்த நிகழ்வுகளை பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம்.. அவர்கள் வளர்ந்து விருப்பமிருந்தால் மிச்சத்தையும் தெரிந்து கொள்வார்கள். முடிந்து போன ஆட்களை நாட்களைப் பற்றி சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்கள் தெரியாமல் போவதாலே நட்டம் ஒன்றுமில்லை.. ஆனால் சொல்ல வேண்டிய சில விஷயங்களை சொல்லுவதால் பலன் மிகவும் அதிகம்.. இல்லாவிட்டால் அப்புறம் காந்தியும் புத்தரும் கூட mythology ஆகி விடுவார்கள்!!
பள்ளியின் கல்வி என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் அல்ல.. மனிதனை பண்படுத்துவதர்க்கும் தான்.. (வேறெங்கிருந்தோ இந்த வாக்கியத்தை சுட்டிருக்கிறேன் :) ) அதற்க்கு நம் முன்னோர்களை பற்றின அறிமுகம் கண்டிப்பாக பிள்ளைகளுக்கு தேவை

தாமரை - இதுக்கு மேலயும் யூஸ் பத்தி கேட்டால் - ஒரே வரி.. (இதுவும் என்னுடையது அல்ல :) )

those who dont read history will repeat its mistakes...!!!!

ஹிரோஷிமா நாகசாகியை பற்றி ஹிட்லரின் கொடுமைகளை பற்றி ஒரு நாட்டின் விடுதலை போராட்டத்தை பற்றி படிக்காதவர்கள் மறுபடியும் அதே தவறை செய்யக்கூடும்.. நீங்களோ நானோ அல்ல - வேறு யாராவது செய்வார்கள்...!! செய்தால் விளைவுகள் மிகவும் கொடுமையாக இருக்கும்!!

பி கு: நான் கேட்ட கேள்விக்கு பதிலை காணோம்.. இருந்தாலும் இம்புட்டு துணிஞ்சு எழுதியிருக்கேன்.. ஏன்னா அப்புறம் வரலாற்றை பிள்ளைகளிடம் இருந்து பிரிச்சுப் போடுவீங்க..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் நடுவர் அவர்களே ,

இந்த உகத்தில் வரலாறே வேண்டாம் என்று எடுத்து விட்டால் ,நம் முன்னோர்களை பற்றியோ ,இல்லை நம் நாட்டில் நடக்கும் ,இல்லை நடந்து முடிந்த அரசியல் ,வெற்றி ,தோல்வி ,எப்போது எந்த நாடு யாரிடம் ,என்பது பற்றியோ ,இல்லை சமுகம் பற்றியோ எப்படி நாம் தெரிந்து கொள்வது .

இவ்வளவு தூரம்வரலாறை பற்றி பேசுகிறிர்களே ,உங்களுக்கு தேவையானதை ,நிங்களே தேடி ,அறிந்து கொண்டீர் ரா ,இல்லை நாம் பிறந்த வுடன் நம் அப்பா ,அம்மா பக்கத்தில் உட்கார வைத்து தினம் தினம் வரலாறை பற்றியோ ,இல்லை அரசியல் பற்றியோ ,இல்லை நம் முன்னோர்களை பற்றியோ ,நம் சுதந்திரம் அடைந்ததை பற்றியோ ,இல்லை சுதந்திரம்
சுதந்திரம் என்று சொல்கிறார்களே ,அப்படினா என்னா,வெள்ளை காரன் வந்தான் அவனிடம் நாம் அடிமையாக இவ்வளவு நாள் இருந்தோம் என்று எந்த அப்பா ,அம்மா சொல்லி தந்தார் .சொல்லுங்கள் பார்ப்போம் .

வரலாறு இருக்கும் போதே நாம் இலங்கை இடம் மாட்டிக்கொண்டு எப்படி தவிக்கிறோம் .இல்லை
கொஞ்சம் யோசிங்கள் .

ஆனால் ,இப்போது நாம் நம் குழந்தைகளுக்கு குடும்பத்தின் வரலாறு (அதாவதுமுறை )சொல்லி கொடுக்க முடிகிறதா ,ஏன்னா நேரம் இல்லை .அதனால் வரலாறே இல்லை என்றால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பட்ட கஷ்டம் தெரியாமல் போனால் எப்படி குழந்தை வளருமோ ,,அப்படிதான் நாட்டில் உள்ள வரலாறு தெரியாமல் போனால் மக்களின் நிலைமையும் ..நினைத்து பாருங்கள் ..

இது (கொஞ்சம் ரகசியம் )சொல்லடுமா ,எனக்கு தமிழும் சரி ,வரலாறும் சரி புடிக்காதே ,,அப்படி இருந்தாலும் வாழ்க்கைக்கு தேவை வரலாறும் ,தமிழும் அவசியம் .
எனக்கு மனதில் கொஞ்சம் தான் இருந்தது .அதை சொல்லிவிட்டேன் .

.

சந்தனா உங்கள் விளக்கம் சூப்பர். அன்புடன் ஐஸ்வரியலக்ச்மி .. .

உங்கள் வாதம் ஒன்றே போதும் நம்ம கட்சி வெற்றியடைய,எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி பாயிண்ட் பாயிண்டாக நினைவு வருது.சூப்பரோ சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

///ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது). இப்போ இதை தேவையில்லை என்று ஒதுக்குவோமானால் நாளை கணக்கு கஷ்டம்,அறிவியல் கொஞ்சம் போதும் என்று ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி ஒதுக்கமுடியாது///

நல்லா சொல்லி இருக்கிறீர்கள், எப்பவும் இளவயதுல பதியுறது ரொம்ப நாள் அப்படியே இருக்கும் இததான் பசுமரத்தாணி போல் மனதில் பதியுதுனு சொல்லுவாங்க எங்க ஊருல..

///வரலாற்றை பள்ளி படித்து நன்மை அடையவில்லை என்று மனதார யாரும் கூற முடியாது.///

யாராவது தைரியமாக கூறும் எதிரணியுனர் இருக்கிறீர்களா?

///தாய் நாட்டை பற்றிய பெருமை விளக்கும் வரலாற்றை பாடத்தில் இருந்து ஒதுக்கவேண்டாம் என்று கூறி விடை பெறுகிறேன்,///

உங்க பாயிண்ட் எல்லாமே சுவையாக இருக்கிறது, நேரம் கிடைத்தால் திரும்ப எட்டி பாருங்க..நன்றிப்பா...

ஆஹா உங்க வாதத்த படிக்க படிக்க அவ்வளவு சுவையா இருக்குனு சொல்லலாம்...

///இன்று எத்தனை பேருக்கு நம் நாட்டு தேசிய கீதத்தை தடங்கல் இல்லாமல் முழுவதுமாக பாடத் தெரியும்?///

உண்மையில் நல்ல கேள்வி, பள்ளிகூடத்துல கூட இப்போ எல்லாம் தேசிய கீதம் சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று மட்டும் தான் பாடுறாங்க, அதும் டேப் தான் பாடும்போது மவுனமா நிக்கிறது மட்டும்தான் இப்போ இருக்கும் பள்ளிகூடத்துல ஃபேஷன்...

///உண்மையில் இத்தினங்கள் விடுமுறை என்பதால்தான் குழந்தைகளுக்கு(சில பெரியவர்களுக்கு கூட) நினைவில் நிற்கிறது. வேதனைப் பட வேண்டிய விஷயம்///

மிகவும் வேதனையான விஷயம் தான்..ஆனால் மறுக்கமுடியாத உண்மை..

///இந்திய வரைபடம்னா காஷ்மீர் என்னும் தலையோடுதான் ஞாபகம் வரும். ஆனால் சில தொலைக்காட்சிகளில் பிரச்சினைக்குரிய காஷ்மீர் பகுதி நீங்கலாகத்தான் (தலை இல்லாமல் :-( )இந்திய வரைபடம் காண்பிக்கப் படுகிறது.///

இத பற்றி நானும் பல முறை யோசித்து இருக்கிறேன்..உங்கள் சந்தேகம் எனக்கும் இருக்கிறது...

உங்கள் வாதங்கள் உங்கள் அணிக்கு இன்னும் வலுசேர்க்கும், எனவே நேரம் கிடைக்கும் போது திரும்பவும் அழைக்கிறேன்..நன்றிப்பா...

மேலும் சில பதிவுகள்