பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

///சீன சுவரை பற்றி வரலாறு சொல்லி குடுக்கும் பாட புத்தகம், இன்றும் நம் நாட்டுக்கும் சீனாக்கும் இடையே சரியான பார்டர் இல்லை, அதனால் இன்னும் ஏற்படும் பிரெச்சனைகள் பற்றி சொல்கிறதா???///

வனிதா உங்க பதிவ படிச்சதும் எனக்கு ஒரு காமெடி ஞாபகம் வருது, அதை தீர்ப்பு எழுதும் போது கூறுகிறேன்..நன்றிப்பா நேரம் கிடைத்தால் திரும்ப வாங்க, உங்கள் வாதம் உங்கள் அணிக்கு வலு சேர்க்கும் என்று நான் உங்களுக்கும் சொல்லவேண்டியதில்ல...

///வனிதா சிரியா வரலாற்றை கூட அருமையாக அறியச்செய்த தாங்களா வரலாறு பாடம் வேண்டாம் என்று சொல்வது?///

இப்படி வனிதாவ மாட்டிவிடலாமா? சரி உங்கள் கேள்விக்கு நான் பதில் கூறிகிறேன்...

அவங்க இத எதயும் எந்த வரலாறு புத்தகத்திலும் படித்து தெரிந்து கொள்ளவில்லை, நேரே அங்க போய் பார்த்து பிரமித்து போய் நமக்கு சொன்னாங்க..வரலாறில் ஆவலாக இருந்தவங்க மட்டும்தான் அந்த தொடர் படிச்சிருப்பாங்க, ஆர்வம் இல்லாதவங்க கண்டிப்பா படிச்சிருக்க மாட்டாங்க..படிச்ச பாதிபேர் கூட இன்னொரு நாட்டை பற்றி தெரிந்து கொள்வதில் தான் ஆர்வம் காட்டினாங்க..வரலாறில் இல்லை..(வனிதா சரிதானே? தவறு இருப்பின் மன்னிக்க)

வனிதாவுக்கும் கவிக்கும் நேரடியாக பதில் சொல்லி தாக்கிட்டீங்க, அசத்துங்க..

///இரு சகோதரர்க்குள் பாகம் பிரிக்கும்போதே வெட்டுப்பழி குத்துப்பழி!!!!!!!!!!! இரு நாடுகள் என்னும்போது இந்த பிரச்னை இருக்கவே செய்யும்....///

பிரச்சனை வரும் ஆனால் எப்படி தீர்த்துக்க போறோம்னு நினைச்சால்தான் பயமா இருக்கு...

///வனிதா முல்லைக்கு தேர் கொடுத்தவரைப் பற்றி நான் வரலாற்றில் படித்ததில்லை...///

ஹா ஹா நானும் தமிழ் பாடத்துல தான் படிச்சேன், ஆனால் அதும் வரலாறுதானே? இல்லையோ?

///நடுவரே, இது நல்ல கதையா இருக்கே!! புள்ளைங்க கையிலருந்து வரலாறு புஸ்தகத்தை பறிக்க சொல்றாங்களே, இது நியாயமா?///

எடுத்ததும் இப்படி திட்ட ஆரம்பிக்கிறிங்க..பயம்ம்ம்மா இருக்குப்பா...சின்ன பொண்ணுக்கு(திரும்பி திரும்ப பார்க்காதீங்க, நான் தான்) பயம் காட்டாதீங்க..

உண்மையில் வரலாறு இன்ரஸ்ட்டிங் தான்ங்க...ஆனால் எத்தனை பேருக்கு தலைவலியும் வரும் தெரியுமா?

///காந்தியை யார் பின்பற்றுகிறார்கள், காமராஜரை யாருக்குத் தெரியும் என்றெல்லாம் எதிரணியினர் கேட்கிறார்கள். அதை படிப்பதால்தான் கொஞ்சம் பேராவது அவர்களைப் பற்றி தெரிந்து அவர்களை பின்பற்றுகிறார்கள். அந்த பாடமே சுத்தமாக இல்லாது போனால் பிறகு இன்னும் நிறைய பேருக்கு அவர்களைப் பற்றி தெரியாத

ஆஹா சூப்பர்ங்க..உண்மை...சந்தோஷ் இப்போ காந்தி ஃபோட்டோ காட்டினால் தெரியல மம்மினு தான் சொல்றான்..

///இராமாயணம், மகாபாரதம் பற்றியெல்லாம் நிறைய சீரியல்கள், படங்கள் உண்டு. ஆனால் வரலாறு என்பதே ஒரு மாபெரும் காவியம் போன்றது. எல்லாவற்றையும் திரைப்படங்களாக எடுக்க முடியாது. பலவற்றை படித்தே அறிய முடியும். பள்ளியில் பாடமாக வைத்தால்தான் அது சாத்தியமாகும்.///

கரெக்ட்ப்பா...படம் எடுத்தாலும் யாரும் பார்க்க மாட்டாங்க..உதாரணங்கள் தீர்ப்பில்...

///தீர்ப்பு எங்களுக்கு எதிராக வருமேயானால் கண்ணகி சிலையருகில் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரித்து விடை பெறுகிறேன்:)///

ரொம்பவே பயமா இருக்கு...இப்படி அரட்டியே பதிவு போட்டால் நான் தீர்ப்பு எழுதும்முன்னாலயே எஸ்கேப் ஆகிடுவேன்..நன்றிங்க நேரம் கிடைத்தால் திரும்ப வாங்க(அரட்டாமல் ஹா ஹா)..

எங்க குடும்ப சண்டையெல்லாம்(அது செல்ல சண்டைன்னாலும்) வெளிய சொல்றதில்லப்பா...அதனால யார் எந்த கட்சினு முடிந்தால் தீர்ப்பில் சொல்கிறேன்...தலைப்பு கணவர் செலக்ட் பண்ணியது இத உங்களுக்கு மட்டும்தான் சொல்றேன் ரகசியம்..

///சந்தோஷ் இங்க எங்கயாச்சும் கென்னடி சிலையை காமிச்சு இது யாருன்னு கேட்கறான்னு வச்சுக்குவோம்..///

அய்யோ சந்தனா கேட்டான்ப்பா...ஆனால் இது யாருனு கேட்க்கல, இது ஏன் இங்க வச்சிருக்காங்க? யார் வச்சாங்கனு? கேட்கவேண்டியத கேட்கவே இல்ல..ஆனால் கென்னடி சிலைய இல்ல, சுதந்திர தேவி சிலைய...அந்த சிலைக்கு அவன் வச்ச பேர் பொம்மக்கா...சரி மேட்டருக்கு வருவோம், நிஜமா நல்ல விஷயங்கள் மட்டும்தான் சொல்லி கொடுப்பேன்...நீங்க சொல்றது 100% சரி...

///குழந்தைப் பருவத்துல இருக்கற மெசூரிடிக்கு ஏத்த மாதிரி தானே பாடங்களும் இருக்கும்?///

கண்டிப்பா அப்படு இருக்கனும் என்பதே எல்லொருடைய ஆசையும்...

///அதற்கப்புறம் வளர்ந்து விருப்பமிருந்தால் அவர்களை பற்றி மேற்க்கொண்டு ஆராய்வதற்கான விதை தான் அது.. ///

நீங்க சொல்றது சரிதான், ஆனால் விதைக்கபடும் விதை அந்தந்த நிலத்தையும் பொறுத்தது தானே? அதாவது கரிசல்காட்டுல நெல் விளையுமா? அதுபோல் வரலாறு என்றாலே வேப்பங்காயாய் கசக்கும் பிள்ளைக்கும் திணிக்கத்தான் வேண்டுமா?

///கார்கில் போரை பற்றியெல்லாம் எடுத்தவுடனே குழந்தைப் பருவத்திலே சொன்னால் அவரை இன்று எதிரியை போன்று தான் பார்க்க முடியும்!!!///

எதிராகவே பேசுகிறேனு தவறாக நினைக்காதீங்க, மனதில் பட்டதை கேட்கிறேன்,சரி நம்ம பங்காளி தானேனு காஷ்மீர அவங்ககிட்ட கொடுக்கமுடியுமா?

///சரி, அப்டேட்டடா இல்லை என்று சொன்னால் பாட முறையில் மாற்றம் வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. அதற்காக பாடமே வேண்டாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?///

தங்களின் வாதம் எனக்கும் சரி என்றேபடுகிறது..

///ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லாரையும் பற்றி படித்தோம்.. இவர்களையெல்லாம் பற்றி அப்போதே தெரிந்ததால் தான் இன்று பொன்னியின் செல்வனை என்னால் ரசிக்க முடிந்தது..///

நானும் பொன்னியின் செல்வனோட வெறிபிடிச்ச ரசிகை, அத படிச்சதும் இன்னும் சோழர்களை பற்றி தெரிஞ்சிக்கனும் நினைச்சு தேடி தேடி வரலாறு படித்தேன்...

தங்களின் கடைசி பாரா முழுவதும் அருமை, பாட்டனி, ஜூவலஜி ஏன் எடுத்தேன் என்னை நானே திட்டிப்பேன், அதுலயும் பிராக்டிக்கல் இருக்கே? படம் வரைஞ்சே என்னோட பாதி வாழ்நாள் போச்சு...நீங்க சொல்றபடி பிடிக்காத பாடங்கள் அனைத்தையும் நீக்கிட்டே போகமுடிமா?

அய்யோ விட்டால் இப்போவே தீர்ப்பு சொல்ல வச்சிருவீங்க போல! அவ்வளவு சூடான பதிவுகள், பாராட்டுக்கள்...

///இன்டக்ரேட்டட் ஆக இல்லை என்பது வரலாற்றின் தவறா? ///

நிச்சயமாக இல்லை, பார்க்கலாம், பதில் பதிவுகள் வருகிறதா என்று..

///கந்தசாமி ல டைரக்ஷனை பாருங்க, ஸ்ரேயாவை பத்தி குறை நினைக்காதீங்க ன்னு.. வரலாறும் அப்படித்தான்.///

இப்படி என்னையவே மாட்டிவிடுறீங்களே! நியாயமா?

///மொழி உட்பட பள்ளியிலே வரும் எல்லாப் பாடங்களும் அது போன்றவை தான்.. ஆக்கத்திற்கு தேவைப்பட்டால் அதனை பற்றிய முழுமையான அறிவினை விருப்பமுள்ளவர்கள் தேடி தெரிந்து கொள்வார்கள்../// நச் பாயிண்ட்...

///காந்தியை பற்றியும் கான்றவர்சி உண்டு.. ஆனால், நல்ல விதமாக காந்தியை பற்றி படித்ததால் தான் ஆப்ரிக்காவில் நெல்சன் மண்டேலாவால் மேலும் இங்கு மார்டின் லூதர் கிங்கால் அஹிம்சை வழியிலே யோசிக்க முடிந்தது../// கிரேட் உண்மை...

///ஹிரோஷிமா நாகசாகியை பற்றி ஹிட்லரின் கொடுமைகளை பற்றி ஒரு நாட்டின் விடுதலை போராட்டத்தை பற்றி படிக்காதவர்கள் மறுபடியும் அதே தவறை செய்யக்கூடும்../// கலக்கல்ப்பா...

///தாமரை - இதுக்கு மேலயும் யூஸ் பத்தி கேட்டால் - ஒரே வரி.. (இதுவும் என்னுடையது அல்ல :) )

those who dont read history will repeat its mistakes...!!!////

இதுக்குமேலயும் ஒன்னு கேட்க போறேன், எங்க பிடிச்சீங்க இத்தன பாயிண்ட்டும்? நல்லா இருக்குங்க.. கடைசியா நேரம் கிடைத்தால் திரும்ப வாங்க, நன்றி, ஹேப்பி வீக்கெண்ட்...

நான் நாளை(ஞாயிறு) தீர்ப்பு எழுதலாம் என நினைக்கிறேன்...இன்னும் 24மணிநேரத்துக்கும் மேல் இருக்கிறது, நேரம் கிடைப்பவர்கள் வந்து பதிவுகளை பதிக்கவும்...இதுவரை பட்டிமன்றத்தை சிறப்பித்து கொண்டிருப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி,,,அதிரா மட்டும் மிஸ்ஸிங்..யாராவது பார்த்தால் நான் கூப்பிட்டேன்னு சொல்லுங்க...

சந்தோ சரியான பதிலை தான் சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி. :) நெரம்கிடைக்கும்போது நிச்சயம் வந்து பதிவு போடுகிறேன். நானும் கவிசிவா மட்டுமே இருக்கிறோம், எங்கள் கட்சிக்கு நகைச்சுவையோடு பலம் சேர்க்கும் தோழி அதிரா இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//தாமரை - இதுக்கு மேலயும் யூஸ் பத்தி கேட்டால் - ஒரே வரி.. (இதுவும் என்னுடையது அல்ல :) )

those who dont read history will repeat its mistakes...!!!! //

சந்தனா நிறையபேர் வரலாற்றை படிச்சுட்டுதான் நம் நாட்டில் மதக்கலவரமே மூண்டது. அந்த காலத்தில் என் மதத்தினரை அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைப்படுத்தினர். அதற்கு இப்போது நாங்கள் பழிவாங்குகிறோம் என்று இறங்கியதால்தான் தொடர்ச்சியாக மதக்கலவரங்கள் மூண்டன. நான் அதைப்பற்றி விரிவாக கூறி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க விரும்பவில்லை. இந்த மத அரசர்,மன்னர் என்று குறிப்பிட்டு வரலாறை மாணவர்களுக்கு போதிக்க வேண்டிய அவசியம் என்ன? இளவயதிலேயே மத துவேஷத்தை விதைக்க வேண்டுமா? யோசியுங்கள் நடுவர் அவர்களே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஐஸ்வர்யா, ஆசியா - உங்க கமெண்ட்ஸ் பாத்ததும் வெக்கம் வந்துடுச்சு போங்க :)) நன்றி..

தாமரை - நான் பாட்டுக்கு நேத்து சாயந்திரம் எழுதிட்டு போயிட்டேன்.. இப்ப வந்து பாத்தா தான் புரியுது - கையில வேப்பிலை இல்லாதது ஒன்னு தான் குறைச்சல்.. அந்தளவுக்கு பேசிட்டன் போல.. எதுவும் தன்னால வரலை. நடுவரோட மற்றும் எதிரணியோட கேள்விகளால வந்தது தான்..

தப்பா நினைக்காதீங்க - எங்க அணிய பாத்து நீங்க நிறைய கேள்வி கேட்டதால உள்ளார ஒரு பயம், ஒரு வேளை வீட்டுல எதிரணியில பேசிட்டு இருக்கீங்களோன்னு :)) அந்த ஆர்வத்துல தான் கேட்டேன்.. விருப்பமில்லைன்னா வேண்டாம்..

அந்த பொம்மக்காவை படிச்சிட்டு சிரிச்சிட்டேன் போங்க.. என்ன கற்ப்பனை அவனுக்கு..

எனக்கு இந்த ஊர்ல எப்படின்னு தெரியலை.. நம்ம ஊரு நிலவரத்தை வச்சு சொல்லறேன்.. வரலாறுல யாரும் நூத்துக்கு நூறு வாங்கியாகனும்ன்னு இல்லையே.. முப்பத்தஞ்சு வாங்கி பாசானா போதுமே.. பத்தாவது வரைக்குந்தான வச்சிருக்காங்க.. அப்புறம் ஏன் திணிக்கப்பட்டதா கருதனும்? ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ க்கு நாம விரும்பின பாடங்களை மட்டுமே படிச்சாப் போதும்ன்னு தானே இருக்கு.. அதை வச்சு தானே கல்லூரி படிப்பை தேர்வு செய்யறோம்..

வனிதா அவங்க பாத்த இடங்களை அழகா விவரிச்சு அங்கங்க கொஞ்சமா வரலாறு சொல்லியிருந்தாங்க.. அவங்க சொல்ல சொல்ல நான் அந்த இடங்களை எல்லாம் தேடி பாத்தேன் - ஆனா வரலாறு படிக்கலை.. ஏன்னா, வனிதா எழுதினது பயணக் கட்டுரை.. வரலாற்று தொடர் இல்லை.. புல் அண்ட் புல் வரலாற்று தொடரா இருந்தா எல்லாரும் தேடி படிச்சிருப்போம்..

கவிசிவா - நீங்க சொல்லறபடி பாத்தா - இந்நேரம் இங்கிலாந்து தூள் தூளாயிருக்கொனும்.. அந்த நாட்டுக்கு மட்டும் சுதந்திர தினமே கிடையாதாமே.. அவங்க தான் பாதி உலகத்தை ஆண்டிருக்காங்க.. அவங்களை யாருமே ஆளலை.. இன்னைக்கு நம்மாளுங்களே எத்தனை பேர் அங்க இருக்காங்க.. அவங்களுக்கெல்லாம் வரலாறு தெரியாதா? ஜெர்மனியை இஸ்ரேல் போட்டு தாக்கியிருக்கனுமே.. ஜப்பான் அமெரிக்கா மேல இன்னொரு குண்டு போட்டிருக்கணுமே? ம்ஹூம்... இதெல்லாம் நடக்கலையே.. வீட்டுல ரெண்டு புள்ளைங்க மண்டைய உடைச்சுக்கிராங்கன்னா அப்பா அம்மா சரியா அவங்களை கண்டிக்கலைன்னு அர்த்தம்.. புரிந்ததோ?

வனிதா.. அதெப்படி அதிராவையும் உங்க அணியில சேர்த்துகிட்டீங்க.. நம்ம ராசிக் கூட்டணியிலேர்ந்து அந்தப் பக்கம் இப்ப நீங்களும் கவிசிவாவும் இருக்கீங்க.. இந்தப் பக்கத்தை சமன் செய்ய எனக்கு அதிரா வேணுமே..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்