பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

உங்களுடைய நீண்ட பதிவிற்கு நன்றிகள்! என்னென்ன எண்ணங்கள் தங்களுக்கு உண்டோ அனைத்தையும் தயங்காமல் பொறுமையாய் எழுதிய உங்கள் அன்பையும் ஆர்வத்தையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! வெல்டன் குட் ஜாப்!

///யாருக்கெல்லாம் இந்திய விடுதலைப் போரில் பங்கில்லையோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தந்து எழுதினார்கள். மதுரை பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கும் History of Freedom Struggle in India என்ற நூல் இவற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.///

இதை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன், நீங்களும் அதே கருத்தை கூறி இருக்கிறீர்கள்!

தீர்ப்பு எழுதும் போது உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் மனதில் வைக்கிறேன், ஏனென்றால் உங்களுடைய பதிவுகள் குறிப்பிட்டு சொல்லமுடியாமல் அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது,நன்றி..

ஆசியாமேடம் நான் இன்னும் சத்தியமா எந்த பக்கம்னு முடிவு செய்யல, சத்தியமா சொல்றேன், வரலாறு வேண்டாம்னு சொல்ல என்கிட்ட எவ்வளவு பாயிண்ட் இருக்கோ அதேபோல வரலாறு முக்கியம்னு சொல்லவும் இருக்கு, இன்னும் கொஞ்ச நேரம் காத்திருங்கள் எனக்காக...நன்றி மேடம்.

சுபா

பொது அறிவு முக்கியமே!அதில் வரலாறின் பங்கும் முக்கியமே!

///பிறந்த நாளை கூடக் புது உடைகள் கிடைக்கும் என்பதற்காக தானே பலர் நினைவில் நிற்கிறது அதற்காக வேதனை படலாமா????/// நல்ல பாயிண்ட்..

///திரிக்கப்பட்ட மறைக்கபட்ட உண்மைகள் இருக்குமாயின் அதை திருத்தமுயற்ச்சிப்போம். அதற்காக வரலாற்றை பாடத்தில் இருந்து எடுத்துவிட்டால் அது சரியான முறை அல்ல. தெரிந்து கொள்ளமுடிந்தது இல்லாமல் போய்விடும்.///

உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதே!நன்றி..

///வேண்டுமா? வேண்டாமா?' அது மட்டும்தான் வாதம் என்று பேசிவிட்டு போனால், நான் ஏற்கனவே கூறியதுபோன்ற அநியாயங்களை, மிகப்பெரிய ஒரு வரலாறே கொலை செய்யப்பட்டுள்ளதே, இந்த வரலாற்றுக் கொலையை எங்குதான் சொல்லி உணர வைப்பது? ///

நீங்கள் வரலாறு தேவையில்லை என்று சொல்லி அதற்கான காரணங்களாக தான் வரலாற்றில் உண்மை இல்லை,திரிக்கபட்ட கதைகள் தான் வரலாற்றில் உள்ளது என்று கூறி இருக்கிறீர்கள், ஏற்புடையதே!

சந்தனா

///யாரைப் பற்றியும் நெகடிவாக குறிப்பிடவில்லை.. யார் மீதும் எந்த நெகடிவ் உணர்வும் ஏற்ப்படவில்லை..///

நெகட்டிங் பாயிண்ட்ஸ் நிறைய இருக்கிறது வரலாற்றில் ஆனால் அந்த பருவத்தில் நெகட்டிவ் உணர்வு ஏற்பட்டதில்லை என்பதும் உண்மைதான்..

///அங்கே கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்கள் பண்டைய தமிழ் எழுத்துக்களை போல இருக்கின்றனவாம்.. இதெல்லாம் பிரமிப்பூட்டுகின்றன..///

நிறைய பிரம்மிப்பூட்டும் விஷயங்கள் வரலாற்றில் உண்டு, நல்ல உதாரணம்..

///நல்ல வேளை, அன்று பள்ளியிலே புத்தரையும் மகா வீரரையும் பற்றியும் நல்ல அறிமுகம் தந்திருந்தார்கள்.. நல்ல நல்ல ப்ரின்சிபல்ஸ்.. அதற்க்கு பிறகு வேறு எப்போதும் இவர்களை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை..///

உண்மைதான் சந்தனா, ரொம்ப நாள் அப்புறம் மகாவீரர் ஃபோட்டோ பார்க்கும்போது இவர எங்கயோ பார்த்திருக்கோம்னுதான் நினைச்சேன், சட்டுனு ஞாபகம் வரல..

மாமி இது எல்லாம் நல்லாவே இல்ல, ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் வந்துட்டு வாழ்த்துக்கள் மட்டும் தான் சொல்லுவேனு அடம்பிடுக்கிறீங்க, எப்படி உங்கள பட்டிமன்றத்துக்கு வாங்கனு கூப்பிடமுடியும்? மேலும் நீங்க பிஸினு எனக்கு தெரியாதா?(நிஜமாதான் சொல்றேன்) இருந்தாலும் இந்த மாமிக்காக வந்து பதிவு எழுதியது மிகவும் சந்தோசம், இருங்க வீட்டுல யாரும் இல்ல, ஒரு குட்டி ஆட்டம் போட்டு வரேன்..

தேன்மொழி
///இளம் பருவத்தில் எல்லாவற்றின் உபயோகங்களையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது...போக போக(மேற்படிப்பு) புரியும்...
நமது முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் வரலாற்று பாடம் நிச்சயம் தேவை என்று கூறி அமைகிறேன்...வணக்கம்...///

உண்மைதான் தேன்மொழி..

சூப்பர்!யாருக்கு புரியுதோ இல்லையோ நீங்க சொன்ன கருத்துக்கள் எனக்கு புரிந்திவிட்டது, முதலிலேயே நான் சொன்னது போல் தீர்ப்பு எழுதும்போது கவனத்தில் கொண்டு எழுதுகிறேன், நன்றி அஸ்மா.

///வரலாறு பாடங்களில் திருத்தங்கள் வரலாம்...வர வேண்டும்...
நீங்கள் சொல்வது போல் இடையில் நிறுத்தி மீண்டும் ஆரம்பிப்பது என்றுமே சற்று கடினம் ....அதுவும் நமது அரசியலமைப்பில் .......எனவே வரலாறு பாடம் அவசியமே என்று மீண்டும் ஆணித்தரமாக கூறுகிறேன்...நன்றி அஸ்மா...///

நன்றி தேன்மொழி, நீங்க சொல்றதும் நியாயம்தான்...

சந்தனா
///ஒவ்வொருவரும் தங்கள் பார்வையிலே சொல்லும் விருமாண்டி கதையை போன்று தான் உள்ளது.. எது உண்மை என்று தெரியவில்லை..///

ஆமா சந்தனா சரிதான்,உண்மை எது என்று காண அந்த நாட்களுக்கே போனால்தான் முடியும்..

///பிள்ளைகளின் மனதை பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதாக அந்த வரலாற்று புத்தகத்தை நினைக்க முடியவில்லை. நிறைய பேரை பற்றி நல்ல எண்ணங்கள் தான் ஏற்ப்பட்டன (ஆங்கிலேயர்களிலே இருந்த சில நல்ல மக்கள் உட்பட).///

எனக்கும் சில நல்ல எண்ணங்கள் வந்தது நீங்கள் சொல்வதை போன்று..

///பின்னாளில் கேள்விப்படும் சம்பவங்களும் செய்திகளும் சிலர் செய்யும் தவறான பிரச்சாரங்களும் தான் இவ்வாறு செய்யக் கூடியவை.. ஊடகங்கள் இவ்வாறு செய்யும்.. சினிமா செய்யும்.. ஆனால் பள்ளி வரலாற்று பாடம் செய்ததில்லை.. செய்யாது..///எனக்கும் இதே எண்ணம்தான்..

கடைசியாக வந்தாலும் கலக்கலா வந்துட்டீங்க! நான் தீர்ப்பு எழுதும் நாள் வந்தும் தீர்ப்பு எழுதாமல் போனது மனதிற்கு பெரும் போராட்டமாய் இருந்தது, இப்போது நீங்கள் எல்லாம் நல்ல நல்ல பாயிண்ட் சொல்வதற்காக தான் இந்த தாமதம் போல, நன்றிங்க...

///வரலாறில் ஒரு அரசின் வீழ்ச்சி, இன்னொரு அரசின் ஆட்சி .. ///

கண்டிப்பான உண்மைதாங்க, ஆனால் இதில் இன்னும் சில உண்மைகளும் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது...

///இப்போ அணு ஆயுதங்கள் மற்றும் உயிர்க் கொல்லிகளால் சண்டை வரும் அபாயம்... என்ன ஒரு மனித வரலாறு...///

பயங்கரம்தான்..

///வரலாறு" என்று சொல்லும் பாடம் உண்மை உரைப்பதாகவும், ஆர்வம் ஊட்டுவதாகவும், பாரபட்சம் இல்லாததாகவும் இருக்க வேண்டும்...///
எல்லோருடைய ஆசையும் இதுதாங்க..

///முன்னோர்களாகிய நாம் வழிவகுப்பதை விட்டுவிட்டு மறைப்பதோ, தேவையில்லை என ஒதுக்குவதோ முறையாகாது.///

முறையாகாதுதான், ஆனால் நம்மால் இயலுமா என்பதுதான் தெரியவில்லை...

நன்றி சுபா

தேன்மொழி
///டைனோசார் மற்றும் பல மிருகங்களும் வாழ்ந்தன என்பதற்கு நாம் எலும்புக் கூடுகளைத்தான் வைத்துதான் சொல்லுகிறோம்...யாராவது அவற்றைப் பற்றி எழுதியிருந்தால் வசதியாக இருந்திருக்கும்...அதை மீண்டும் மீண்டும் பதிந்து ...அவற்றின் வரலாறும் தெரிந்திருக்கும்../// நல்லாத்தாம் யோசிக்கிறீங்க..

///எந்த காலத்திலும் எந்த உயிரினமும் சண்டைப் போடாமல் இருக்க வாய்ப்பில்லை...
அதற்காக வரலாறுகள் வேண்டாம் என்றால் எப்படி ..... எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க்கட்சி குறைகள் சொல்லும் என்பதற்க்காக தேர்தல் வேண்டாம் என்பீர்களோ....///

நல்ல பாயிண்ட்...

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது இதோ தீர்ப்பு எழுதி கொண்டிருக்கிறேன், வந்துவிடுவேன்...எனக்கு இப்போது சாயங்காலம் இன்றி இரவுக்குள் தீர்ப்பு கண்டிப்பாக எழுதிடுவேன்...நன்றி..தாமதத்திற்கு மன்னிக்கவும்..

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

என் வீட்டில் அடிக்கடி நடக்கும் விவாதம்தான், நான் வரலாறு தேவையில்லை என்றுதான் என் கணவரிடம் சொல்வேன்..(சந்தனா ஓகேவா) காரணம் விதாண்டாவாதம் பண்ண எனக்கு எப்பவும் ஒரு குஷி..மேலும் வாதங்கள் ஏற்பட ஏற்படத்தான் நிறைய விஷயங்கள் தெரியவரும் என்பதும் ஒரு காரணம்,ஆனால் இது தீர்ப்பல்ல தொடர்ந்து படிக்கவும்...

எந்த ஒரு செயல் செய்வதானாலும் நாம் வரலாறு தான் தேடுகிறோம், காரணம் உதாரணமாக நமக்கு ஏதாவது உடம்பு முடியலன்னாலும் ஃபேமிலி ஹிஸ்டிரி தான் தேவைப்படுது, சாதாரண பார்வைல பார்க்கும்போது நமக்குதானே உடம்பு முடியல? ஏன் பாட்டி தாத்தாக்கு டயபடிஸ் இருக்கானு கேட்குறாங்க, ஆனால் உண்மையில் மிகவும் தொடர்பு உண்டு..அதுபோலவே நேற்றைய வரலாறும் சாதாரணமாக பார்க்கும்போது தேவையில்லாதது போல தோன்றும், ஆனால் எந்த ஒரு செயலுக்கும் வரலாறு மிக அவசியம்.. புலிகேசியில் வடிவேலு சொன்னதுபோலவே வரலாறு மிக முக்கியம் அமைச்சரே! இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்...

நம் நாட்டை பற்றி என்னென்ன கலாச்சாரம், யாரிடம் நாம் அடிமை பட்டு இருந்தோம்? எப்போது விடுதலை பெற்றோம் போன்ற பல விஷயங்கள் நமக்கு சொல்லி கொடுத்தது வரலாறுதான்..

மழை, வெயில், சுனாமி போன்ற இயற்கையை கணிப்பதற்கு வரலாறு மிக முக்கியம், 18வருடத்தில் இதுபோல் மழை பெய்தது இல்லை என்று சொல்வதும், இனியும் 20 வருடத்தில் உலகம் அழியும் என்று சொல்வதும் வரலாறு இருந்தால்தான் கணிக்கமுடிகிறது (கணிப்பு தவறாக போவது நம் பொறுப்பல்ல)

காந்தி இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு(1931 march 5th) என்று ஞாபகம் இல்லாவிட்டாலும் அது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் Gandhi-Lord Irwin இரண்டு பேருக்கு நடுவில் ஏற்பட்டது என்று தெரிந்திருக்கும்,மேலும் அந்த ஒப்பந்தம் முழுவதும் எழுத வேண்டுமெனில் நம் பாடபுத்தகம் போதாது..

நம் அரசியல் அமைப்பு சட்டம் முதல் மேலும் உள்ள பல விஷ்யங்கள் அனைத்தும் கண்ணை மூடிக்கொண்டு யாராலும் எழுதி இருக்க முடியாது, நம் இந்தியாவில் எது இல்லை? எது உடனடி தேவை? அயல் நாட்டில் எப்படி பின்பற்றபடுகிறது என்று பல நாட்டு வரலாறுகளையும் ஆராய்ந்து தான் எழுதி இருக்க வேண்டும்..

சுதந்திர தின உணர்வு இல்லை, சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தலைவர்களை மறக்கிறோம் என்றால் காஷ்மீர் எனும் மாநிலம் நம்முடையது நம்மிடம் பிரிந்துபோன நாடுதான் என்றாலும் இப்போது அந்நியர் உள்ளே வருவதை தடுக்க தினம்தினம் எத்தனை உயிர் போராடுகிறது? நமக்கு தெரிந்தது எல்லாம் கார்கில் மட்டும் தானே? நாமெல்லாம் சூடுபட்ட பூனை இன்னொருதரம் அந்நியரிடம் அடிபணிய விரும்பவில்லை என்றுதானே? அதில் தெரியும் சுதந்திர உணர்வு...

கிரிக்கெட் பார்க்கும்போது நம்மைவிட எதிரணி வலுவாக இருந்தாலும் நாம் தான் வெற்றி பெறனும்னு கடவுள வேண்டிக்கிறவங்க எத்தனை பேர்? அங்க விளையாடுறவங்க 10பேர் ஆனால் வேண்டிக்கிறவங்க 100கோடி...அதில் இருக்கும் சுதந்திர உணர்வு...இந்தியா தோற்றுவிட்டால் சாப்பிட பிடிக்காமல் இருக்கிறவங்க எத்தனை பேர்? இந்தியா என் நாடு எனும் உணர்வு எப்படி வந்தது? இங்கு பிறந்த ஒரே காரணத்திற்கா? இல்லை...

மேலே சொன்னது எல்லாமே வரலாறு தேவைதான் என்பதற்கு நான் சொன்ன காரணங்கள், ஏனெனில் வரலாறு தேவையில்லை என்று எதிரணியில் கூட வாதாடவில்லை...சரி அடுத்ததாக குழந்தைகளுக்கு வரலாறு தேவையா? பார்க்கலாம்..

குழந்தை பருவத்தில் கொடுக்கும் அறிவு பசுமரத்தாணி போல் நச்சுனு இருக்கும் அதனால குழந்தைகளுக்கு கண்டிப்பா வரலாறு தேவை..ஆனால் மிக முக்கியமான விஷயம் நச்சு விதைத்துவிட கூடாது,

சில பாடசுமைகள் இருந்தாலும் நம் பாடத்திட்டத்தை யாருமே குறை சொல்ல முடியாது, வெளி நாட்டு மாணவர்கள் படிக்க வராங்க, இந்தியாவில் பெஸ்ட் யுனிவர்சிட்டி இருக்கு, ஏன் பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களே இந்தியாவில் தான் தங்கள் குழந்தைகள் படிக்கனும்னு நினைக்கிறாங்க.. இதெல்லாம் உதாரணம்..பல நிறைகள் இருக்கும் போது சில குறைகளை பொறுத்துக்கொள்ளலாம்... இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெரிய பெரிய யுனிவர்சிட்டி பாடத்திட்டமே அழகாக திட்டமிட்டு இருக்கும்போது, ஸ்கூல் பிள்ளைகளோட பாடத்திட்டமும் அழகாகத்தான் அமைக்கப்பட்டு இருக்கும், எனவே எப்படி ஒரு பாடத்திட்டத்தில் மொழி, கணிதம், அறிவியல் தேவையோ அதுபோலவே வரலாறும் மிக முக்கியம்தான், இது தனி சுமை இல்லை...

வரலாறு தெரிந்து கொள்ளாமல் இருந்தால் பின்னர் படித்து தெரிந்து கொள்ளமுடியாது..ஏனெனில் வளர்ந்தபிறகு அறிவை பெருக்க பல விஷயங்கள் கற்று கொள்ள வேண்டும், அப்போது யாரும் வரலாறுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, எனவே வரலாறு தெரிந்து கொள்ள சரியான வயதும் பாடத்திட்டமும் ஸ்கூல் டைம்தான், மிக விருப்பமுள்ளவர்கள் மேல் படிப்பில் படிக்கலாம்...

வரலாறுல தான் படிச்சோம், குரங்குபோல் இருந்த ஆதிமனிதன் சக்கரம் கண்டுபிடிச்சான், அவனே ஒரு சக்கரத்த உண்டாக்கி இருக்கும்போது நாம் அதவச்சு என்னெல்லாம் பண்ணிட்டோம்? அது தெரியலன்னா இவ்வளவு வளர்ச்சி இருந்திருக்குமா? இத புரிந்து கொள்ளவும் தெரிந்துகொள்ளவும் குழந்தை பருவம்தான் சரியானது..

பாரி வள்ளல் பற்றி படிக்கும் போது அவருடைய கொடைதான் பெருமையாக பேசப்படுகிறது, இதை குழந்தைக்கு கற்றுகொடுத்தால் தான் அது மற்ற குழந்தையுடன் share பண்ணும் எல்லாவற்றையும், இல்லையெனில் தனக்கு என்ற சுயநலம் தான் வரும்...

அறிவியலும் வரலாறும் பிரிக்கமுடியாத ஒன்று, அறிவியல் வளரனும்ன்னா வரலாறு கண்டிப்பாக தேவை..அத ஒட்டுமொத்தமாக தேவைப்படும் போது எடுத்துகொள்ள முடியாது, கொஞ்ச கொஞ்சமாக தான் புரியவைக்க முடியும், குழந்தை முதல் ஸ்டார்ட் பண்ணினால்தான் சரியான வயதில் சரியான விஷ்யங்களை புரிந்து கொள்ளமுடியும்...

பல்லவர்கள் பற்றி சின்ன வயதில் படித்தது, அப்போ ஒன்னுமே புரியல, ஆனால் இப்போ மாமல்லபுரம் போனபோது நிறைய விஷ்யங்கள் புரிந்தது, குறிப்பா சிவா விஷ்ணு சண்டை, நிறைய சிற்பங்கள் அழிஞ்சு போச்சு, ஏன் இப்படி இருக்குனு கேட்ட போது அவர்(கெய்டு) விளக்கியதுதான் அந்த சண்டை விளக்கம், சின்ன வயதில் படித்தது இப்போ தெளிவா விளங்குது, நான் படிக்காமல் இருந்திருந்தால் ஒன்னுமே புரியாது...கல்கியோட பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, படிக்கும் போது பல விஷயங்கள் கண்முன்னால வருகிறது..

இந்த வரலாறு சரியானதில்ல திரிக்கப்பட்டது என்பது உண்மையாக இருந்தால் கண்டிப்பாக கண்டிக்கதக்கது..ஆனால் இவ்வளவு ஆண்டுகளில் ஒரு சிறு எதிர்ப்பு கூட வந்ததுபோல் எனக்கு தெரியவில்லை, அப்படியே திரிக்கபட்ட்தாக இருந்தாலும் ஏன் அப்படி திரிக்கப்பட்டது எனும் காரணத்தைதான் முதலில் அலச வேண்டும், ஏனெனில் எல்லாவற்றிக்கும் ஒரு தகுந்த காரணம் இருக்கும் என்பது எனது கருத்து...இது எதுவுமே இல்லை என்றால் கூட பாடத்திட்டத்தை மாற்றவேண்டுமே தவிர வரலாறை தூக்கிபோடவோ, குழந்தைகளுக்கு தேவையில்லை என்பதையோ மாற்றவேண்டிய அவசியமில்லை...

ஆக வரலாறு எனும் பாடம் குழந்தைகளுக்கு தேவைதான் என்று சொல்லி முடிக்கிறேன்..நன்றி..

இந்த பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..எல்லோரும் எங்க வீட்டுக்கு வீக் எண்ட் வாங்க,ஸ்பெஷல் விருந்து வைக்கிறேன்...(இப்போ ஓரளவு நல்லா சமைக்கிறேன், பயப்படவேண்டாம்)

பி.குறிப்பு: இது என் தனிப்பட்ட கருத்து அல்ல, நீங்கள் பதித்த பதிவுகளில் இருந்து நான் பெற்றுகொண்டது தான்...மேலும் திட்டுபவர்கள் தனியே வரவும்...வாழ்த்துபவர்கள் பற்றி பிரச்சனை இல்லை...

மேலும் சில பதிவுகள்