பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

ஆஹா தீர்ப்பு வந்திடுச்சா! வழக்கம் போலவே வரலாறு எனக்கு ஆப்பு வச்சிடுச்சு :-(. வரலாறு எனக்கு வராது கோஷ்டி நான்.
எதிர்பார்த்த தீர்ப்புதான்.(கீழே விழுந்தாலும் மூஞ்சியில் மண் ஒட்டலை ஹி ஹி ). உண்மையை சொன்னதால் உங்களை மன்னிக்கிறோம் (வேற வழி).

வாழ்த்துக்கள் தாமரை. வேலைகளுக்கு இடையிலும் இவ்வளவு விளக்கமா தீர்ப்பு சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
சந்தோஷுக்கு இப்போ காய்ச்சல் சரியாயிடுச்சா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே,

நன்றி, நன்றி! வழக்கம் போல ஜெயிக்கிற கட்சியில நான்:)(பேசாம அரசியலில் குதிச்சிடட்டுமா!:))

நான் எழுத்தாளர் கல்கியின் தீவிர ரசிகை, அவருடைய புதினங்களை மேற்கோள் காட்டி, மேலும் ஒரு பதிவு போட நினைத்து இருந்தேன், நேரம் இல்லாததால் முடியவில்லை, நீங்கள் தீர்ப்பில் கல்கியைப் பற்றிக் குறிப்பிட்டு இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி! (வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் ஆர்குட்.காமில் கல்கிக்கான குழுமத்தில் கிடைக்கும் தகவல்களைப் பார்வையிடலாம்.)

தெளிவான தீர்ப்பு தந்ததற்கு மீண்டும் நன்றி!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சந்தோசம் தாங்க முடியல்ல....மீண்டும் வெற்றி....
தீர்ப்பு ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க...ஆனால் இன்னும் நிறைய தயார் செய்திருப்பீர்கள்(மனதிற்குள்ளாவது)...உங்கள் நேரமின்மையை புரிந்து கொள்ள முடிகிறது...நேரம் கிடைக்கும்போது முடிந்தால் பதியுங்கள் ப்ளீஸ்....
சந்தோஷுக்கு என்னாயிற்று...எப்படி இருக்கிறார் இப்போது...தலைவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்....
தாமரை இந்த பட்டிமன்றத்தில் நான் மிகவும் ரசித்து கலந்து கொண்டேன்....நிறைய விஷயங்கள் கற்க உந்துதல் பெற்றுள்ளேன்...அஸ்மாவிற்கு என் நன்றிகள்.....

அதிரா.... கவுத்துட்டாங்க !!! அப்படின்னு கூப்பிட முடியல... அதனால் "கவிசிவா...... ஓடியாங்கோ.... கவுத்துட்டாங்க!!!"னு கூப்பிடுறேன்..... ;) ஆஸ்மா.... உண்மையில் நல்ல அழகாக உங்கள் கருத்துகள் அமைந்திருந்தன.... அப்போது சொல்ல முடியவில்லை... இப்போ சொல்லிட்டேன்.

நடுவரே சந்தோ.... கவுத்தாலும் பரவாயில்லை.... வாழ்த்தாமல் இருக்க முடியாது!!! ;) நல்ல தீர்ப்பு!!! உண்மையில் தேவை என்று வாதாடவே வந்தேன், ஆனால் எதிர் அணியில் யாரும் இல்லாமல் கவிசிவா தனித்து வாதாடுவதை பார்த்ததும், சரி என்று ஒரு நாள் சற்று வேண்டாம் என்று சொல்ல பாயின்ட் தேடி வாதாட வந்தேன். :D எப்படியோ வழக்கம் போல் கவிசிவா, நான் ஒரே கட்சியில் வாதாடி கட்சியை கவுத்துட்டோம்.... எங்க சனி பெயர்சியை நேற்றைய ராகு கேது பெயர்சி மாற்றி விட்டது போலும். ஹஹஹா..... நல்ல விளக்கம், நல்ல தலைப்பு, நல்ல தீர்ப்பு!!! இதை விட என்ன சொல்ல.... மொத்தத்தில் அருமை. வந்து நடுவர் பொறுப்பேற்று அதை வெற்றிகரமாக முடித்த உங்களுக்கு எனது மனமார்ந்து நன்றிகளும் கூட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நடுவரே,
தீர்ப்பு மிக அருமை, உங்களுடைய பாராட்டு உற்சாகத்தை தந்தது.
மிக ஆவலுடன் எதிர்பார்த்தேன் ,மீண்டும் நன்றி.

தேன்மொழி இந்தவாட்டியும் நாம் பக்கம் வெற்றி. நீங்க ஏன் அரட்டையில் பதில் தரவில்லை,ஏதாவது தப்பா எழுதிட்டேன்னா..
அன்புடன்,
சுபத்ரா.

with love

அப்பாடா..! தாமரை, எப்ப‌டியோ தீர்ப்பு சொல்லீட்டீங்க! தீர்ப்பு ஓகேதான்! (இப்ப‌டி தீர்ப்பு வ‌ரும்னு தெரிஞ்சுதான் :-)) நான்தான் முன்பே சொல்லிட்டேனே தீர்ப்பு எப்படியிருந்தாலும் பரவாயில்லைன்னு :) இடையில் வந்து அப்ப‌ப்போ குட்டி குட்டியாய் பதிவுகள் வேற போட்டீங்க. தீர்ப்பு சொல்லும் நேரத்தில் இடையில் டிஸ்டப் பண்ணுவானேன் என்று பதில் போடாம இருந்தேன். பதிவுகளை பாராட்டியதற்கு நன்றி! முத‌லில் சைலன்ட் ரீடராதான் இருந்து, இருந்து பார்த்தேன். மனதில் தோன்றியவைகளை சொல்லாமல் 2 நாட்கள் கண்ணை மூடினால் கருத்துக்கள் மனதில் ஓடி ஓடி உண்மையா தூக்கமே வரலபா! அதான் திடீர்னு ஆத்துல இறங்கினேன் :) பாவம், சந்தோஷின் ஜுரத்தில் தீர்ப்பு சொல்வதற்குள் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க! நானாகயிருந்தால், தீர்ப்பை 15 நாட்கள் ஒத்தி வைத்திருப்பேன் :-) இப்போ சந்தோஷுக்கு பரவாயில்லையா? நாங்கள்லாம் வரமாட்டோம்ணு தெரிஞ்சுதானே வீக்கெண்ட்டில் விருந்துக்கு அழைக்கிறீங்க? அதுவும் ஸ்பெஷல் விருந்து...? ம்.....? :-)

தேன்மொழி! நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் க‌ற்க‌ப் போறீங்க‌ளா? என்னையும் சேர்த்துக்கோங்க‌பா..! எதிர‌ணியில் இருந்த‌ என‌க்கு உங்க‌ளின் ந‌ன்றிக‌ள், ரொம்ப‌ சந்தோஷ‌மா இருக்கு :)

வ‌னிதா! ஏம்ப்பா..நாம‌ இருவ‌ரும் ஒரே அணியில்தானே இருந்தோம், அப்போ ஏன் உங்க‌ க‌ருத்தை சொல்ல‌ முடிய‌ல‌? நீங்க‌ளும் ச‌ப்போர்ட் ப‌ண்ணியிருந்தால், இன்னும் சூடு ந‌ல்லா போட்டிருக்க‌லாமே :) அது ச‌ரி, என்ன‌ ஒரே என் பெய‌ரை த‌ப்பு த‌ப்பா சொல்றீங்க‌? இது இர‌ண்டாவ‌து முறை நீங்க என்னை 'ஆஸ்மா'ன்னு சொல்ற‌து. அப்புற‌ம் நான் 'வினிதா'ன்னு சொல்லிடுவேன் சொல்லிட்டேன் :) ஆஹா...நீங்க‌ளே சொல்லிக்கொடுத்து இப்போ மாட்டிக்கிட்டீங்க‌ளா? :))

எங்கே ச‌ந்த‌னாவை இன்னும் காண‌ல‌? சூப்ப‌ரா விவாத‌ம் ப‌ண்ணின‌துல‌ க‌ண்ணு கிண்ணு ப‌ட்டுடிச்சோ ;)

சிற‌ப்பாக‌ வாதாடிய‌ இர‌ண்டு அணி தோழிக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்!

நல்ல தீர்ப்பு,விளக்கம் அருமை,முரண்பாடுகள் என்றால் நான் மிகவும் யோசிப்பேன்,அந்தப்பக்கம் போகமாட்டேன். தாமரை,நிதானித்து பாலிஷாக நல்ல விளக்கம் கொடுத்து அசத்தலாக தீர்ப்பு சொல்லி அசத்திட்டீங்க,அதிராவின் நகைச்சுவையான பதிவு ஒன்று தான் இந்த பட்டிமன்றத்தில் மிஸ்ஸிங்.எங்கே போயிட்டாங்க?
வனி,ரேணுவுக்காவது தெரியுமா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தீர்ப்பை நன்றாக சொல்லிட்டீங்க இப்பத்தான் வரலாறு டீச்சர்கள் எல்லாம் நிம்மதியில் இருக்காங்களாம்:) நடுவராக பொறுப்பேற்று சூப்பராக நடத்தி விட்டீர்கள். இரு அணியிலும் மிகவும் திறமையாக வாதாடினார்கள். மகனிற்கு இப்போ உடல்நலம் பரவாயில்லையா? நன்கு கவனித்துக் கொள்ளவும்.

வனி, உங்க வரலாறு டீச்சர் உங்களை பெஞ்சு மேல ஏத்த வந்துட்டே இருக்காங்களாம்:)

நடுவர் தாமரைக்கு நன்றிகள். மிகவும் நன்றாக வழக்கம் போல் வாதாடி எங்கள் அணிக்கு பலம் சேர்த்த 'சந்தனாவிற்கு' வாழ்த்துக்கள்.முதன் முறையா நான் வாதாடிய அணி வெற்றி பெற்றிருக்குனு நினைக்கிறேன்.

என்னால் தொடர்ந்து பங்கு பெற முடியாமல் போனது...இனியும் இது(எனது வரவின்மை) கண்டிப்பாக தொடரும்...

சிறப்பாக வாதாடிய அனைத்து தோழிகளுக்கும் எனது பாராட்டுக்கள்.

சந்தோஷிற்கு இப்போ உடம்பு பரவாயில்லையா? வீடு மாற்றம் எந்த நிலையில் உள்ளது?

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

கவி
உங்களபோல் தான் நானும், வரலாறு படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும், ரொம்ப நல்லா எக்ஸாம் எழுதுவேன்,ஆனால் மார்க் எல்லாம் 85 மேல போகாது..என்னன்னு இன்னும் புரியல! நன்றிப்பா..

சீதாமேடம்
கல்கியின் நூல்களில் இருந்து நிறைய எழுதனும்னு நிறைய நோட் பண்ணி வச்சிருந்தேன், ஆனால் நேரமின்மை காரணமாக எல்லாமே எடிட் பண்ண வேண்டியதா போச்சு...இத டைப் பண்ணி முடிக்கவே(எழுந்துபோய் எழுந்துபோய்) 1.30 மணிநேரம் ஆச்சு...கண்டிப்பாக ஆர்குட்டில் பார்வையிடுகிறேன்,நன்றி மேடம்..

மேலும் சில பதிவுகள்